சிறு, மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களில் பலருக்கு லாபம் பார்ப்பது என்பது ஒரு கைவந்த கலையாக இருந்தாலும், தங்கள் நிறுவனத்தை மேலும் மேம்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

குறிப்பாக கடன் விஷயம் என்றால் “அட ஆமா சார் கரெக்டா சொன்னீங்க, நமக்கு வியாபாரம் எல்லாம் ஓ.கே ஆனா பேங்க் மேனேஜர் கிட்ட போய் நின்னு அவங்க கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி ஒரு கடனை வாங்குறதுக்குள்ள முடியல சார் “ என்று மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. உங்களுக்கான கட்டுரைதான் இது.

வங்கிக்கு அதிகம் அலையாமல் ஒரு சில முறைகளிலேயே உடனடியாக கடன் வாங்கி, தொழிலை விரிவுபடுத்த என்ன மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று விளக்குகிறார் ஃபெடரல் வங்கியின் இணைப் பொது மேலாளர் கே.ஸ்ரீநிவாசன்.

“புதிதாக தொழில் தொடங்குபவர்கள், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் வாங்குபவர்கள் சில தவறுகளை செய்கிறார்கள். வங்கிக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

நிதி ஒழுக்கம்!

கடன் வாங்க இருப்பவர் தன்னைப் பற்றிய நல்ல அபிமானத்தை வங்கியிடம் ஏற்படுத்துவது அவசியம். வங்கிக் கடன்களை சரியாக செலுத்துவது, வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ்களை சரியாக பராமரிப்பது, காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பாமல் இருப்பது போன்ற நிதி ஒழுக்கங்கள் இருத்தல் அவசியம்.

உரிமம் இல்லை என்றால் சிரமம்!

புதிதாக தொழில் தொடங்குபவர்கள், முதலில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து, உரிமங்கள் காலாவதியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு ஹோட்டலை தொடங்க வேண்டும் என்றால், Food License, Health Trade License, License for Eating House, Fire Security Certificate, Liquor or bar License, Approval or re Approval of Restaurants, Lift clearance, License for playing music and video, Environmental clearance, Required Insurance, Signage License, shop and Establishent Act, Approval from weights and Measures department...etc... போன்ற உரிமங்களை வாங்கி இருக்கிறார் என்றால், தொழிலை சட்டப்படி சரியாக செய்கிறார் என்று கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பவர் மீது மதிப்பு உண்டாகும்.

கடன் விண்ணப்ப திட்டத்தில் (புராஜெக்ட்டில்) அவசியமாக இருக்க வேண்டியவைகள்!

எந்த வகையான தொழிலை செய்யப் போகிறோம் அல்லது செய்து கொண்டிருக்கிறோம் - உற்பத்தி, வாங்கி விற்கும் டிரேடிங் வியாபாரம், சேவை.

இதற்கு தேவையான மொத்த முதலீட்டுத் தொகை, அதில் இயந்திரங்கள், தினசரி வேலைகளுக்கான முதல், எவ்வளவு பேரை வேலைக்கு எடுக்கப் போகிறோம், அவர்களுக்கான சம்பளம்.

என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கப் போகிறோம். அதற்கு ஆகும் செலவு.

தொழில் செய்பவர் தன் கையிலிருந்து எவ்வளவு போடப்போகிறார், வங்கியிடம் எவ்வளவு கடன் வாங்க இருக்கிறார் என்பதை பொறுத்துதான் கடன் கிடைக்கும். பொதுவாக, மொத்த மதிப்பீட்டில் 25% கையிலருந்து போட வேண்டி இருக்கும். மீதி 75% தொகை கடனாக கிடைக்கும்.
அடுத்த மூன்று வருடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆகும், வியாபாரத்தின் மூலம் எந்த ஆண்டிலிருந்து லாபம் கிடைக்கத் தொடங்கும், ஒரு பொருளை விற்றால் கிடைக்கும் லாபம் என்பதற்கான கணக்கீடுகள்.

புதிய தொழில் என்றால் யார் வாடிக்கையாளர்கள் என்கிற விஷயம்.

ஏற்கெனவே பலரும் செய்யும் தொழில் என்றால் மற்றவர்கள் சந்தையில் கொண்டு வரும் பொருட்களை விட, நீங்கள் கொடுக்கும் பொருள் எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும்.

தனி நபராக வருமான வரி கட்டி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் போன்றவைகளுக்கு விடையளிக்கும் விதத்தில் கடன் விண்ணப்பம் வேண்டும்.

தொழில் விரிவாக்கத்திற்கு கடன்!

கடனுக்கு வங்கியிடம் விண்ணப்பிக்கும் போது, இதுவரை செய்து வந்த தொழில் மூலம் வந்த வருமானத்திற்கு வருமான வரி, விற்பனை வரி கட்டியதற்கான ஆதாரங்கள், டின் எண், பேலன்ஸ் ஷீட்கள், தொழிலுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தும் வங்கி நடப்புக் கணக்கு (Current Account) ஸ்டேட்மென்ட்கள் போன்றவைகளை இணைக்க வேண்டும்.

தற்போது வாங்கப் போகும் கடன் எதற்கு என்கிற காரணம் - நடப்புச் செலவுகளை சமாளிக்க, தொழில்நுட்பத்தை மேம்படுத்த, புதிய இயந்திரங்களை வாங்க என்பது போல் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு லாபம் வரும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வங்கியிடம் சமர்ப்பிக்கும் புரஜெக்ஷன்கள், திட்டங்கள் எல்லாவற்றையும் பட்டையக் கணக்காளர்களோடு கலந்தாலோசித்து வங்கியிடம் சமர்பிப்பது நல்லது. எஸ்.எம்.இ நிறுவனம் அதன் கணக்கு வழக்குகளை ஒரு நிபுணரைக் கொண்டு சரிபார்த்து வைத்துக் கொள்கிறது என்றால், வங்கிக்கு எஸ்எம்இ மீதான மதிப்பு அதிகரிக்கும், கடன் கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

சப்ளையரை சரியாக நடத்துதல்!

பொதுவாக தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட நிதி பரிமாற்றங்களை எல்லாம் வங்கியின் மூலமாகதான் மேற்கொள்ள வேண்டி இருக்கும். கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது தொழிலுக்கான நடப்புக் கணக்கு ஸ்டேட்மென்ட்களையும் வங்கி வழங்கச் சொல்லும்.

அந்த ஸ்டேட்மென்டில் சப்ளையருக்கு எந்த தேதியில் பணம் வழங்கப்பட்டிருக்கிறது, எத்தனை முறை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்ப (Cheque bounce) அனுப்பப்பட்டிருக்கிறது போன்ற விவரங்கள் எல்லாம் தெரிய வரும்.

எனவே சப்ளையர்கள் என்றழைக்கப்படும் கிரெடிட்டார்களுக்கு சரியாக பணத்தை கொடுக்கவில்லை என்றால், வங்கிக்கு கடன் கேட்பவர் மீதான மதிப்பு, நம்பகத் தன்மை குறையும்.

வரி கட்டுதல் நம்பிக்கையை அதிகரிக்கும்!

இன்றுவரை பலரும் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை ஒரே ஆண்டில் தாக்கல் செய்து விட்டு, வங்கியிடம் சமர்பிப்பார்கள்.அப்படி இல்லாமல், அந்த அந்த ஆண்டே லாபமோ, நஷ்டமோ வரிக் கணக்கு தாக்கல் செய்வது எஸ்எம்இ நிறுவனத்திற்கு நல்லது. இது கடன் வாங்குவதை சுலபமாக்கும்.

அதே போல் தொழில் சம்பந்தமான கணக்கு வழக்குகளை சரியாக கவனிக்காமல், வரியை சரியாகக் கணக்கிட்டு கட்ட அலுப்புப் பட்டுக் கொண்டு வருமான வரிச் சட்டம் 44 AD-யின் கீழ், மொத்த டேர்ன் ஓவர் என்றழைக்கப்படும் விற்பனை ரூ. 1 கோடிக்கு கீழ் இருக்கிறது என்று சொல்லி விற்பனையில் 8 சதவிகிதம் வருமானமாக காட்டி, வரிக் கணக்கு தாக்கல் செய்தால் கூட அதை வங்கிகள் ஒரு குறையாகத் தான் பார்க்கும். காரணம் தொழில் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளைக் கூட பராமரிக்காதவர்கள் எப்படி கடனை சரியாகக் கட்டுவார்கள் என்று வங்கி, கடன் கொடுக்கத் தயங்கும்.

யார் பெயரில் தொழில்!

பொதுவாக யார் பெயரில் தொழில் இருக்கிறதோ அவர் தான் தொழில் சார்பாக வரியையும் கட்ட வேண்டும். சிலர் தொழிலை தன் பெயரில் தொடங்கிவிட்டு, மனைவி பெயரில் வரியைக் கட்டுகிறார்கள். சிலரோ, பான் அட்டையை நிறுவனத்தின் பெயரில் எடுத்துக் கொண்டு, வரியை தன் பெயரில் கட்டுகிறார்கள். இப்படி குளறுபடிகள் இல்லாமல், தெளிவாக ஒருவர் பெயரில் தொழிலைத் தொடங்கி சரியாக வரி கட்டிக் கொண்டு வருவது கடன் வாங்கும் போது நன்மை பயக்கும்.

கடனுக்கான அளவுகோல்!

ஒரு தொழிலை செய்யும் போது, கடன் இல்லாமல் வியாபாரம் செய்வது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் கடன் வாங்கி இருக்கலாம். இந்த கடனுக்கும் ஓர் அளவு இருக்கிறது.

தொழிலைப் பெருக்குகிறேன் என்று சொல்லி தொழிலை நடத்தும் புரமோட்டரின் மொத்த முதலீடு 1 பங்காகவும், வங்கி, உறவினர்கள், நண்பர்களிடமிருந்து என்று பல தரப்பில் இருந்து வாங்கிய கடன் 9 பங்காகவும் இருந்தால் வங்கி கடன் கிடைப்பது கஷ்டம். பொதுவாக மொத்த முதலீட்டில் 5 முதல் 6 பங்கு வரைதான் கடனாக இருக்கலாம்.

அடமானக் கடன்!

சொத்துகளை அடமானம் வைத்தால் வட்டி 2 - 3 சதவிகிதம் வரை குறையும். ஆனால், இது தொழில் செய்கிறேன் என்கிற பெயரில், இருப்பதையும் இழக்க திட்டமிடுவது என்று சொல்லலாம்.

இதுவே சொந்த வீடு போக கூடுதலாக இருக்கும் சொத்து அல்லது வீட்டை அடமானம் வைப்பது சரியான முடிவாக இருக்கும்.

தொழிலுக்குத் தேவையான முழு தொகையையும், அடமானக் கடனாக பெற முடியவில்லை என்றால், மீதி தேவைப்படும் தொகைக்கு வங்கியிடம் தொழில் கடன் பெறலாம்.

எக்காரணம் கொண்டும் தொழில் கடன் வாங்க அலுப்புபட்டுக்கொண்டு, தனி நபர் கடன் வாங்க வேண்டாம்.

முத்ரா திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை எந்த ஒரு பிணையமும் இல்லாமல் அனைத்து வங்கிகளும் கடன் வழங்க வேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழும் பல வங்கிகள் தொழில் முனைவோர்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது” என்றார்.

எஸ்எம்இக்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான ஆவணங்களோடு வங்கியை அணுகி லாபத்தை கூட்டலாமே..

படம்: மா.பி.சித்தார்த்