உலகப் பொருளாதாரம் இன்னும் ஒரு மந்த நிலையிலேயே இருந்து வருகிறது.உலகத்தின் உற்பத்தி மையம் என்று அழைக்கப்படும் சீனாவின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வளரும் நாடுகளில் முன்னணியில் இருந்தாலும் ஏற்றுமதித் துறை , உற்பத்தித் துறை போன்றவை இன்னும் சுணக்கத்திலேயே உள்ளன.

இதுபோன்ற நிலையற்ற தன்மையில் பங்கு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, சுமார் 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திராஜ் ரெல்லி நாணயம் விகடன் இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அவர் நமக்கு அளித்த பதில்களும் இனி...

? வழக்கமான பங்குத் தரகு நிறுவனத்துக்கும், உங்களை போன்ற வங்கி சார்ந்த பங்குத் தரகு நிறுவனத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

‘‘ஷேர் டிரேடிங் அக்கவுன்ட், டீமேட் அக்கவுன்ட், பேங்க் அக்கவுன்ட் என அனைத்தையும் எங்களிடமே ஆரம்பிக்கும் வசதி இருக்கிறது. தற்போது மொபைல் அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் முதலீட்டு விவரங்களை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அளித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் / டிரேடர்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை பயன்படுத்த முடியாத சிக்கலான நிலையில் (இயற்கை பேரிடர் காலங்கள்) எங்களின் கால் அண்ட் டிரேட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.”

? பங்கு வர்த்தகம் தவிர வேறு என்ன சேவைகள் அளிக்கிறீர்கள்?

“எங்களுக்கு இந்தியா முழுக்க 262 கிளைகள் உள்ளன. இவை 189 நகரங்களில் இயங்கி வருகின்றன. என்பிஎஸ், எஃப்டி, பாண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யும் சேவையையும் அளித்து வருகிறோம். மேலும், ஆன்லைனில் இ - உயில் (இ -வில்) எழுதி பாதுகாக்கும் வசதியை அளித்து வருகிறோம். ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்குத் தாக்கல் வசதியும் இருக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ், கடன் சேவைகளையும் அளிக்கிறோம்.

? கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை. இதனை அதிகரிக்க நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

பதில்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் வந்த பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக எங்களிடம் சேர்ந்து வருகிறார்கள். கடந்த 12 மாதங்களில் வந்த புதிய பங்கு வெளியீடுகளில் (ஐபிஓ) சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு சிறு முதலீட்டாளர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்திருக்கிறோம்.

? அடுத்த 3 - 5 ஆண்டுகளில் எந்தெந்த துறைகள் வேகமான வளர்ச்சி காணும்?

பதில்: கிராமப் புறங்களில் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு, நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்பு, நல்ல பருவ மழை எதிர்பார்ப்பு போன்றவற்றால் நுகர்வோர் துறை, வாகனத் துறை, சிமென்ட் துறை போன்றவை வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது. அடுத்து தகவல் தொழில்நுட்ப துறையில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

? சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

பதில்: 2016 பட்ஜெட் அன்றைய குறைந்தபட்ச புள்ளிகளிலிருந்து சந்தை சுமார் 20% ஏற்றம் கண்டிருக்கிறது. குறுகிய காலத்தில் சந்தையில் கரெக்ஷன் ஏற்படக் கூடும். நிஃப்டி புள்ளிகள் 7900 வரை இறங்க வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரத்தில், நடுத்தரம் மற்றும் நீண்ட காலத்தில் சந்தையின் போக்கு ஏற்றமாகத்தான் இருக்கும். அடுத்த 12 முதல் 15 மாதங்களில் நிஃப்டி அதன் முந்தைய உச்சமான 9000 புள்ளிகளுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.”

?முதலீட்டாளர்கள் பங்குகளை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

“முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளின் குறியீடு ஏற்றத்தை கவனிப்பதற்கு பதில் குறிப்பிட்ட பங்குகளை தேர்ந்தெடுத்து அவற்றின் ஏற்ற, இறக்கத்தை கவனித்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அடுத்து யாரோ சொன்னார்கள், எஸ்எம்எஸ் வந்தது, மெயில் வந்தது என்று பங்குகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். நீங்கள் முதலீடு செய்யப் போகிற நிறுவனத்தைப் பற்றி சிறிதளவாவது ஆராய்ச்சி செய்வது அவசியம்.”

? சிறுமுதலீட்டாளர்களுக்கு உங்களின் முக்கியமான ஆலோசனை என்ன?

“அதிகம் தெரியாத, புரியாத நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்த்தால், ரிஸ்க்-ஐ குறைக்கலாம். அடுத்து வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும் நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணத்துக்கு, இந்திய வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், தனியார் துறை வங்கிகளின் சேவை பொதுமக்களை எளிதில் சென்று சேருவதாக இருக்கிறது. இதற்கு நேர் எதிராக பொதுத் துறை வங்கிகள் இருக்கின்றன. அடுத்து, அதிக நிகர லாபம், அதிக சந்தை பங்களிப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் பார்க்கலாம்.

முதலீடு என்பது நீண்ட காலமாக இருக்க வேண்டும். நீண்ட காலம் என்பது குறைந்த பட்சம் 2-3 ஆண்டுகளாக இருக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சந்தையில் பங்குகளை வாங்கும் போது அல்லது விற்கும் போது சந்தையில் ஏற்ற இறக்கம் வரும். இது குறித்து சிறுமுதலீட்டாளர்கள் கவலைக் கொள்ள தேவை இல்லை.

அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நேரம், காலம் பார்க்க வேண்டாம். எப்போதும் சந்தையில் இருந்தால்போதும். சந்தையின் ஏற்ற இறக்கத்தை சிறு முதலீட்டாளர்கள் எதிரியாக பார்க்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும்.
ஏற்ற இறக்கம் இருந்தால்தான் ஒரு பங்கை குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்று லாபம் பார்க்க முடியும்.”

? நாணயம் விகடன் வாசகர்களுக்கு உங்களின் பங்கு பரிந்துரை எவை?

“சிமென்ட் துறை - அல்ட்ரா டெக் சிமென்ட், உள் கட்டமைப்பு - எல் அண்ட் டி, வாகனத் துறை - மாருதி, ஹீரோ மோட்டோகார்ப், நிதிச் சேவை - சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ், சிட்டி யூனியன் பேங்க். இந்தப் பங்குகளில் குறைந்தது ஓராண்டு காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்.”

படங்கள்: மீ.நிவேதன்