?பங்கு வர்த்தகத்தில் எனக்கு ரூ. 93,000 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டம் டே டிரேடிங் மூலமாக ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை எப்படிக் கணக்கில் காட்டி வரிச் சலுகை பெறலாம்?

குருமூர்த்தி.

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

“தினசரி வர்த்தகம் (டே டிரேடிங்) அல்லது ஊக வணிகம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து மேலும் நான்கு ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று, எதிர்கால லாபத்தோடு சரி செய்து வரி சேமிக்கலாம். தவணை தேதி கடந்து வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் இச்சலுகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக வணிகத்தில் விளைந்த நஷ்டமானது, ஊக வணிகத்தின் விளைவாகக் கிடைத்த லாபத்துடன் மட்டுமே சரி செய்ய முடியும். உதாரண மாக, இந்த வருடம் உங்களுக்குக் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1,00,000. ஊக வணிகத்தில் உங்களுக்கு ரூ.93,000 நஷ்டம் ஏற்பட்டிருப்பின், இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று சரிசெய்ய முடியாது. நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மீது 20% வரி கட்டித்தான் ஆகவேண்டும். ஆக, ஊக வணிகத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை மற்ற லாபத்துடன் ஈடு செய்ய இயலாது.”

? எனது ஒரு வயது மகளுக்கு உகந்த சிறந்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பரிந்துரை செய்யுங்கள்.

ஜான் பால்.

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“ஒரு வயது குழந்தைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி தேவை இல்லை. வருமானம் ஈட்டும் நபருக்கே ஆயுள் காப்பீடு பாலிசி தேவையாகும். ஆகவே, நீங்கள் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், உங்களது மகளின் பெயரில் முதலீடு செய்யலாம். இது உங்களது மகளின் 21 வயது முடியும் தருவாயில் முதிர்வடையும். வருடத்துக்கு குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். மேலும், உங்களது மகளின் மேற்படிப்புக்காக சேமித்த தொகையிலிருந்து 50% வரை திரும்பப் பெற முடியும். மேலும், இதன் இன்றைய வட்டி விகிதம் 8.6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

?நான் நீண்ட கால முதலீடாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் 20 வருடங்களுக்கு ரிலையன்ஸ் விஷன் ஃபண்டில் ரூ.1,000, ஐசிஐசிஐ ட்ரூ வேல்யூ டிஸ்கவரி ஃபண்டில் ரூ.1,000, எஸ்பிஐ பார்மா ஃபண்டில் ரூ.1,000 முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்த ஃபண்டுகள் சரிதானா? வேறு ஃபண்டுகளுக்கு மாற வேண்டுமா?

பார்த்தசாரதி.

விஜய்பாபு, நிதி ஆலோசகர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கோவை.

“நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர் என்பதால் நீண்ட கால முதலீட்டுக்கு ரிலையன்ஸ் விஷன் ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ பார்மா ஃபண்டுகள் ஏற்றதல்ல. அதனால் இந்த இரண்டு ஃபண்டு களுக்குப் பதிலாக பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி மற்றும் கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.”

?எனக்கு வயது 56. ஓய்வு பெற இரண்டு வருடங்களே உள்ளன. வருமான வரிச் சலுகைக்காக முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. விருப்ப பிராவிடெண்ட் ஃபண்டில் (விபிஎஃப்) முதலீடு செய்யலாமா? இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? எது சிறப்பானதாக இருக்கும்?

கேசவன்.

த.ராஜன்,இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“நீங்கள் ஓய்வு பெற இன்னும் இரண்டு வருடங்களே இருப்பதால், வரிச் சலுகை பெறுவதற்கு விபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதுதான் ஏற்றதாக இருக்கும். இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் விபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யவும். இப்படி செய்யும்பட்சத்தில், இந்த தொகையும் சேர்ந்து பணி ஓய்வு பெறும்போது கிடைத்துவிடும். இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது மூன்று ஆண்டுகள் லாக் இன் பிரீயட் இருக்கிறது. மேலும், சந்தை ரிஸ்க் இருக்கிறது என்பதால், உங்களுக்கு விபிஎஃப்தான் ஏற்றது”

?ஒரு முறை முதலீட்டில் ரூ.10 லட்சத்தை 5 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். கடன் அல்லது ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்ததா? டாக்ஸ் சேவர் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்ததா?

சரவணக்குமார்,

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், மதுரை.

“தங்களின் வயது மற்றும் இதுவரை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் என்பதைக் கணக்கிட்டு முடிவு செய்யவும். உதாரணமாக, தங்களின் வயது 43 என்றால், தங்களின் நிகர சொத்து மதிப்பில், 57% (100 - 43 = 57%) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யவும். மேலும், ஈக்விட்டி மார்க்கெட் சரிவில் இருந்தால், காத்திருந்து பணம் எடுக்க வேண்டும். இதற்கு சம்மதம் என்றால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவும்.

மியூச்சுவல் ஃபண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள், ஈக்விட்டி வகையை சார்ந்தவை. மூன்று வருடம் லாக் இன் உள்ளது. வருமான வரிச் சலுகை தேவை இருக்கும் பட்சத்தில், அந்தத் தொகையை மட்டுமே வரிச் சலுகை ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். தேவை இன்றி பெரிய தொகையை லாக் செய்ய வேண்டாம்.

ஈக்விட்டி டைவர்சிஃபைடு திட்டங்களில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யவும். இதில் தேவை என்றால் இடையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வட்டி விகிதம் (வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி) குறையும் வரை நல்ல வருமானம் தரலாம். வட்டி விகிதம் மிக குறைந்துவிட்டது என்றால், தாங்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து பணத்தை எடுக்கும் தருணம் வந்துவிட்டது எனலாம். அந்த சமயத்தில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பானது என்றாலும் வருமானம் குறைவாகத்தான் இருக்கும். மேல் கூறிய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கவும். தாங்கள் ஒரு நல்ல நிதி ஆலோசகரை தேர்வு செய்து, அவர் மூலமாக முதலீடு செய்வது நல்லது. அவர் அஸெட் அலோகேஷன், டிவிடெண்ட் , டாக்ஸ் பெனிபிட், கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் பெனிபிட் சம்பந்தப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு, நல்ல திட்டங்களை தேர்வு செய்ய ஆலோசனை வழங்குவார்.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.