“ஷேர் மார்க்கெட்டில் இன்று சென்செக்ஸ் 450 புள்ளிகள் கூடின. ஷேர் மார்க்கெட்டில், மொத்தப் பங்குகளின் மதிப்பு ரூ.101 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.”

டிவியில் ஓடிய இந்த செய்தியை மனதில் ஓட்டியபடி, டிவியை நிறுத்தினார் ஆதிமூலம். இவர் ஒரு பிளம்பர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஒரு பிளம்பரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக தொழிலைக் கற்று இன்று சொந்தமாகவே தொழில் நடத்தி வருகிறார். திருமணம் ஆகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தினம் 500 சம்பாதித்து, குடும்பத்தை நன்றாகவே கவனித்து வந்தார். ஒரு லட்சம் ரூபாயை சேமித்தும் வைத்திருந்தார்.

பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு, இலவசமாக நடைபெற்ற பங்குச் சந்தை கருந்தரங்குக்கு போனார். ஏசி குளிருடன் இருந்த அறையில் நுழைவதற்கே ஆதிமூலத்துக்குக் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அறையில் நுழைந்து, ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பேச, ஆதி மூலத்துக்கு ஷேர் மார்க்கெட் என்ற வார்த்தையைத் தவிர எதுவும் புரியவில்லை. அடுத்து பேசியவர் தமிழில் பேசினார். பேச்சை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.

‘‘நீங்கள் விப்ரோ நிறுவனத்தில் 1982-ல் ரூ.10,000 போட்டிருந்தால், அது இப்போது ஏறக்குறைய ரூ.535 கோடிகளாக மாறி இருக்கும். ஆகவே, நீங்களும் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், உங்கள் பணமும் பெரியதாக வளரும்...” என அவர் பேசிய பல விஷயங்கள் புரியாவிட்டாலும், ‘நல்ல கம்பெனியின் பங்கில் பணத்தை போட்டால், அது பல மடங்காக மாறலாம்’ என்கிற விஷயம் மட் டும் ஆதிமூலத்துக்குப் புரிந்தது.

நாமளும் சேர்த்து வைத்திருக்கிற, ஒரு லட்சம் ரூபாயை நல்ல கம்பெனியில போட்டு வைக்கலாம். 5 – 6 வருஷம் கழித்து அது பெரிசா வளரும். பணத்தை போட, நாம யாருகிட்ட போகணும் என யோசனை செய்தபடியே வீட்டுக்குப் போனார்.

பிறகு ஒரு நாள் ஒரு வீட்டுக்கு குழாய் ரிப்பேரை சரி செய்ய போனபோது, அந்த வீட்டு மனிதர் யாருடனோ

சத்தமாக பேசுவது கேட்டது. “எஸ் பேங்க் ஷேரே வாங்கிப் போடுங்க சார், அதுதான் இப்ப மளமளவென்று ஏறிகிட்டுருக்கு!’’.

ஆதிமூலத்துக்கு ஆர்வம் அதிகமானது. இந்த வீட்டு ஓனர்கிட்டே ஷேர் பத்தி கேட்டு பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். வேலையெல்லாம் முடித்துவிட்டு, கூலி வாங்க வந்த ஆதிமூலத்தை பார்த்து எவ்வளவு கூலி என்று கேட்டு, அதைக் கொடுத்தார் அந்த நபர்.

ஆதிமூலம், தயங்கித் தயங்கி ‘‘சார்... ஷேர் மார்க்கெட்ல பணம் போட்டு நிறைய சம்பாதிக்க எனக்கு ஆசை. எனக்கு நீங்க வழிகாட்டுவீங்களா?” எனக் கேட்டார்.

அந்த மனிதர், பிளம்பர் ஆதிமூலத்தை ஏறயிறங்கப் பார்த்தார். ‘‘ஏம்பா, நீ எவ்வளவு வைச்சிருக்க...?’’ எனக் கேட்க, ‘‘ஒரு லட்சம் சார்” என்றார் ஆதிமூலம். அந்த மனிதருக்கு உடனே நாவில் கொஞ்சம் எச்சில் ஊறியது. அவர் விசிட்டிங் கார்டை கொடுத்தார்.

ஆதிமூலம் விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தார். அதில் அவர் பெயர் சம்பந்தம் என்று போட்டிருந்தது. சம்பந்தம் ஒரு புரோக்கர் கம்பெனியில டீலராக இருக்கிறார். கடந்த நாலு வருஷமா இந்தத் தொழிலில் இருக்கிறார். அதற்குள் எட்டு புரோக்கர் கம்பெனி மாறி விட்டார். இவருக்குப் பங்குகளை வாங்குறது, விற்கறது என்ற விஷயம் மட்டுமே தெரியும். மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஆனா, பேசும்போது எல்லாம் தெரிந்த நபர் போல் பேசுவார். காதில விழுந்த செய்தியை வைத்துக் கொண்டு, இதை வாங்குங்க, அதை வித்திடுங்க என்று சொல்லி காலத்தை ஓட்டுவார்.

ஒரு புரோக்கர் கம்பெனியில சேர்ந்தவுடன், அவர்கள் கொடுக்கிற வாடிக்கையாளர் களின் பட்டியலை வைத்து எல்லோரையும் போனில் பேசி, இன்னிக்கு டிரேட் பண்ண வாங்க என்று அழைப்பார். எப்படியாவது, சில ஆர்டர்களை போட வைத்து, அவர்கள் பணத்தை காலி பண்ணிவிடுவார்.

லிஸ்ட்டில் இருக்கிற வாடிக்கையாளர்கள் எல்லாம் காலி ஆனதும், வியாபாரம் இருக்காது. அந்த புரோக்கர் கம்பெனியும் துரத்தி விட்டுவிடும். இப்ப சேர்ந்திருக்கிற கம்பெனி யிலாவது, கொஞ்சம் தாக்கு பிடிக்கணும்னு சம்பந்தம் யோசித்தபோதுதான், பிளம்பர் ஆதிமூலம் மாட்டிக் கொண்டார்.

“தோ பாருபுள்ள, இந்த ஒரு லட்சத்தை நல்ல கம்பெனி ஷேர்ல போட்டுவைக்கலாம். அஞ்சி, ஆறு வருஷத்துல நமக்கு பெரிய பணம் கிடைக்கும். நீ என்னா சொல்ற?” என கேட்க, ஆதிமூலத்தின் மனைவிக்கு சுத்தமாகப் புரியவில்லை.

“உனக்கு அதபத்தி என்னாய்யா தெரியும்? வேணாம்யா. அதுக்கு பதிலா (தங்க) நகை வாங்கிப் போடலாம்” என சொன்னாள்.

ஆதிமூலத்துக்கு யோசனை யாக இருந்தது. ஒருவழியா மனைவிகிட்ட பேசி, அம்பதாயிரத்துக்கு தங்க நகை, அம்பதாயிரத்துக்கு ஷேர் எனச் சொல்லி சம்மதம் வாங்கினார்.

அடுத்த நாள் சம்பந்தம் டீலராக வேலை பார்க்கும் கம்பெனியில போய் நின்னார். சம்பந்தத்துக்கு ஆதிமூலத்தை பார்த்தவுடன் ஒரே சந்தோஷம். இந்த ஆளை வைத்து இந்த மாசத்தை எப்படியாவது ஓட்டிட லாம் என கணக்குப் போட்டார்.

ஆதிமூலத்துக்கு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணினார் சம்பந்தம். ஐம்பதாயிரம் செக் கொடுத்தார் ஆதிமூலம்.

‘‘இங்க பாருங்க ஆதிமுலம்... ஐடிசி நல்லா போவும். பாம்பேயில இருந்து நியூஸ் வந்திருக்கு. வாங்கலாமா? எனக் கேட்க, “வாங்குங்க சார். எனக்கு ஷேர் பத்தி ஒண்ணும் தெரியாதுங்க. எப்படியாவது, நீங்கதான் எனக்கு வழிகாட்டனும். ஒரு ஐந்து வருஷத்தில் நல்லா பெரிசா வர கம்பெனியா சொல்லுங்க சார்” என பவ்யம் காட்டினார் ஆதிமூலம்.

“ஓகே. கவலைப்படாதீங்க. உங்க ஐம்பதாயிரத்துக்கு ஐடிசி ஷேர் வாங்கியாச்சி” என்றதும், சம்பந்தத்துக்கு நன்றி சொல்லி விட்டு பெரிய கனவோடு வீட்டுக்குப் போனார்.

இரண்டு நாள் கழித்து ஆதிமூலத்துக்கு போன் போட்டார். “ஆதிமூலம், நான் சம்பந்தம் பேசறேன். உங்களுக்கு நல்ல நேரம்தான். நீங்க வாங்கின ஐடிசி ஷேர் இன்னிக்கு பத்து ரூபா ஏறியிருக்கு. வித்து லாபத்தை எடுங்க.”

“இல்லீங்க... இதை ஐந்து வருஷம் வச்சிக்கலாம்னு...” என ஆதிமூலம் இழுக்க, “இத பாருங்க ஆதிமூலம், இன்னிக்கு வித்தா ரூ.500 லாபம். இரண்டு நாள்ல யார் உங்களுக்கு ரூ.500 லாபம் கொடுப்பாங்க. வித்துடுங்க. அப்புறம் இதே ஷேரை விலை கம்மியா வரும்போது வாங்கிக்கலாம்.”
ஆதிமூலம் அரை மனசாக சரி என்றார். அடுத்த நாள் ஆதிமூலம், சம்பந்தத்துக்கு போன் பண்ணி, “சார், இன்னக்கி அந்த ஐடிசி ஷேரை வாங்கலாமா?” எனக் கேட்க, “வேணாங்க. ஐடிசி விலை ரொம்ப ஏறிபோச்சி” என்றார் சம்பந்தம்.

“ஏங்க ஏறும்னு தெரிஞ்சா அதை வித்திருக்க வேணாமே. அப்படியே வைச்சிருக்கலாமே” என ஆதிமூலம் பதற, “இன்னிக்கு ஸ்டேட் பேங்க் வாங்குங்க. ஏறும்னு எனக்கு டிப்ஸ் வந்திருக்கு’’ என சம்பந்தம் சொல்லவே, ஆதிமூலத்துக்கு வேறு வழிதெரியவில்லை.

அரை மணி நேரம் கழித்து, “இப்ப ஸ்டேட் பேங்ல, ரூ.500 லாபத்துல இருக்கு. வித்திடலாமா” என்றார் சம்பந்தம். ஆதிமூலத்துக்கு ஒரு நிமிடம் சிலீர் என்றது. அரை மணி நேரத்தில் ரூ.500 லாபமா? ஆதிமூலத்துக்கு சம்பந்தம் பேரில் ஒரு இனம் தெரியாத அன்பு பிறந்தது. நாள் பூரா வேலை செஞ்சாலும் ரூ.500 வராதே. இவரு அரை மணிலே ரூ.500 லாபத்தைக் காட்டிட்டாரே என பூரித்துப் போனார்.

அடுத்த நாள் ஆர்வம் மிகுதியால் சம்பந்தம் ஆபீஸுக்கு போய் முழு நாளும் இருந்தார். சம்பந்தம் பங்கை வாங்கச் சொன்னாலும், விற்க சொன்னாலும் தலையாட்டினார். அன்னிக்கு மார்க்கெட் முடியும் போது, ஆதிமூலத்துக்கு ரூ.1,300 லாபம். அவருக்கு கால் தரையிலேயே படவில்லை. மறுநாள் அவர் பிளம்பிங் வேலைக்கு போகவில்லை. நேராக சம்பந்தம் ஆபிஸுக்கு போனார்.

சம்பந்தம் டிப்ஸ் கொடுக்க, ஆதிமூலம் டிரேடர் ஆனார். ரூ.300, ரூ.400 லாபத்தை எடுக்க ஆரம்பித்தார். நாள் முழுவதும் வாங்கினார், விற்றார். விற்றார், வாங்கினார். அன்று கடைசியில் ரூ.2,000 கிடைத்தது. ஆதிமூலம் மனதில் பெரிய கனவு விரிந்தது.

தினமும் சம்பந்தம் ஆபிஸுக்கு போக ஆரம்பித்தார். பிளம்பர் வேலையை விட்டுவிட்டார்.

ஆதிமூலம், முழுமையாக டிரேடராக மாறினார். ஒரு நாள் டிரேடிங் பண்ணாமல் இருந்தாலும், ஆதிமூலத்துக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது.

ஆதிமூலம் நிறைய வாங்கி விற்க, விற்க, சம்பந்தம் அதிக இன்சன்டிவ் வாங்கினார்.

ஆதிமூலம், தினம் ரூ.2,000 லாபம் அல்லது ரூ.4,000 நஷ்டம் என்று அவருடைய ரேஷியோ மாறியது. அவர் போட்ட ரூ.50,000 முதலீடு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

ஆறு மாதத்தில் அவர் அக்கவுன்ட்டில் எந்தப் பணமும் இல்லை. என்றாலும், சும்மாவது புரோக்கர் ஆபிஸுக்கு போய் வந்துகொண்டு இருந்தார்.

வழக்கம் போல அன்றும் புரோக்கர் ஆபிஸுக்குப் போனார். சம்பந்தம் சீட்டில் இல்லை. விசாரித்தால், சம்பந்தத்தை வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக சொன்னார்கள். விட்ட பணத்தை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தவிர்த்தார் ஆதிமூலம்.

தங்க நகையை அடமானம் வைத்து, மீண்டும் டிரேடிங்கை துவங்கும் முடிவுக்கு வந்தார் ஆதிமூலம்.

பாடம்: முதலீட்டுக்காக ஒதுக்கிய பணத்தை டிரேடிங்கில் போடக்கூடாது. டிரேடிங் செய்வ தற்காக செய்யும் தொழிலைவிடக் கூடாது. டிரேடிங் பண்ணினாலும், அதை முறையாகக் கற்று, நீங்கள் முடிவெடுக்கும் நபராக இருக்க வேண்டும்.

(தொடர்வோம்)