மத்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம், கடந்த வாரத்தில் மத்திய அரசாங்கம் அவர்களுக்குத் தந்திருக்கும் சம்பள உயர்வுதான். அரசு ஊழியர்களில் கடை நிலை ஊழியர்கள் தொடங்கி மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரைக்கும் சம்பளம் சுமாராக 14 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதம் வரை அதிகரிக்க இருக்கிறது.

இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 01, 2016-ல் இருந்து அமல்படுத்தப் படும். இதனால் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும், பென்ஷன் வாங்கும் 58 லட்சத்துக்கும் மேற்பட்டவர் களுக்கும் இந்தப் பரிந்துரைகள் பொருந்தும்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால் மத்திய அரசின் கருவூலத்திலிருந்து ரூ.1.02 லட்சம் கோடி திடீரென பொருளாதாரத்தில் புழங்கத் தொடங்கும். இதனால் மத்திய அரசு ஊழியர்களிடம் கணிசமான அளவில் பணம் இருக்கும். அவர்கள் செலவு செய்வது அதிகரிக்கும். அந்த நிலையில் அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்குவார்கள்?

ஆட்டோமொபைல்!

பொதுவாக, நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணமிருந்து வாங்க முடியாமல் போன இரு சக்கர வாகனம், கார்கள் போன்ற பயணிகள் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும். இந்தியாவில் 2015 - 16-ம் நிதி ஆண்டில் கார் வாங்கி இருப்பவர்களில் மொத்த எண்ணிக்கை 27.8 லட்சம் பேர். அதில் சுமாராக 4 லட்சம் பேருக்கு மேல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் தாரர்கள் என்பது கவனிக்கத் தக்கது. எனவே, இப்போது மத்திய அரசின் ஊழியர்களிடம் கணிசமான பணம் வரவிருப்பதால், அவர்கள் கார் அல்லது இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, மஹேந்திரா அண்ட் மஹேந்திரா, ஹீரோ மோட்டோ கார் நிறுவனங் களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அந்த நிறுவனப் பங்குகளை கவனிக்கலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்!

ஏசி, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி போன்ற கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்களை உடனடியாக வாங்குவார்கள். குறிப்பாக கடந்த, 6 - 7 மாத அரியர் ஒரே மாதத்தில் வருவதால், இந்த நுகர்வு திடீரென அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கு பலரது வீட்டில் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்றவை இருந்தாலும், அவற்றைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்க நிறைய வாய்ப்பிருப்பதால், கன்ஸ்யூமர் டியூரபிள் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். இதனால் இந்தப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் லாபம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, ப்ளூ ஸ்டார், வோல்டாஸ், பஜாஜ் எலெக்ட்ரிக்கல்ஸ், ராடிகோ கேதான் போன்ற நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், இந்த நிறுவனப் பங்குகளை கவனிக்கத் தொடங்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ரியல் எஸ்டேட்!

மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்று சொந்தமாக ஒரு வீடு வாங்குவது. இதற்கு டவுன் பேமண்ட்-ஆக தருவதற்கு கையில் கொஞ்சம் பணம் இருக்கவேண்டும். இப்போது கணிசமான பணம் திடீரென வந்து சேரவிருப்பதால், பலரும் இதனை டவுன்பேமண்ட் ஆக வைத்து, புதிதாக ஃப்ளாட்டு களையோ அல்லது வீட்டையோ வாங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக மந்தகதியில் செயல்பட்டு வந்த ரியல் எஸ்டேட் துறை இனி வேகமெடுக்க வாய்ப்பு உண்டு. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே டி.எல்.எஃப். நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது.

ஃப்ளாட்டுகள் மற்றும் வீடுகள் விற்பனை அதிகரிக்கிற அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புடைய பெயின்ட், சிமென்ட், ஸ்டீல் போன்ற நிறுவனங்களுக்கும் நல்ல வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் .

சுற்றுலா!

ஏற்கெனவே சொந்த வீடு வாங்கி, காரையும், ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எல்லா வற்றையும் வாங்கி, இனி எங்காவது சுற்றுலா சென்றுவிட்டு வரலாம் என்று நினைக்கலாம். இதனால் ஹோட்டல்களில் தங்குவதில் தொடங்கி நொறுக்குத் தீனி வாங்கிச் சாப்பிடுவது வரை பலவற்றுக்கு நிறைய செலவு செய்யலாம். இதனால் சர்வீஸ் செக்டார்கள் நன்கு வளர வாய்ப்புண்டு. அரவிந்த், பிரிட்டானியா போன்ற நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அந்த நிறுவன பங்குகளை கவனிக்கலாம் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

ஏன் இந்த எதிர்பார்ப்பு!

மத்திய அரசு ஊழியர் களிடம் கணிசமான அளவில் பணம் புழங்கு வதால் மேற்கண்ட துறை களின் விற்பனை அதிகரிக்கும் என்று கணிக்க முக்கியமான காரணம், கடந்த 2008-ம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்தான். 2009 - 10 காலகட்டத்தில் அதாவது 6-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட அடுத்த வருடம், பயணிகள் வாகன விற்பனை 25 - 26 சதவிகித அளவில் வளர்ச்சி அடைந்தது. அதே போல் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் துறையின் விற்பனை யும் நல்ல வளர்ச்சி கண்டது.

கிரிசில் கணிப்பு!

இந்த சம்பள உயர்வினால் எந்தெந்தத் துறைகள் வளர்ச்சி காணும் என்பது குறித்து கிரிசில் நிறுவனமும் சில கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் துறையின் வளர்ச்சி, வழக்கத்தை விட 1.0 - 1.5% கூடுதலாக இருக்கும் என்று கணித்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை யில், இந்தியப் பொருளாதாரத்தில் புதிதாக வர இருக்கும் 1.02 லட்சம் கோடியில் 45,110 கோடி ரூபாய் வரை செலவழிப்பார்கள். 30,170 கோடி ரூபாய் வரை சேமிப்பார் கள் என்று கணித்திருக்கிறது. குறிப்பாக, ரூ.14,000 கோடி மீண்டும் அரசுக்கு வரியாக கிடைக்குமாம்.

பிஏபி Vs ஜிடிபி!

2009 - 10-ம் ஆண்டில் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியபோது பிஏபி (Pay, Allowances and Pension) ஆனது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கு வழங்கிய தொகை இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 3.67 சதவிகித மாக இருந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் மெல்லக் குறைந்து 2.77 சதவிகிதத்துக்கு வந்திருக்கிறது. மீண்டும் இந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையினால் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 3.4% அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. (பார்க்க ஆண்டு வாரியாக பிஏபி Vs ஜிடிபி அட்டவணை)

ஆக மொத்தத்தில், இந்த சம்பள உயர்வினால் நமது பொருளாதாரம் கணிசமாக மாற்றத்தைக் காணவிருக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, முதலீடு செய்து லாபம் பார்ப்பது முதலீட்டாளர்களின் கடமை.

ஒரு கோடி பேருக்கு கொண்டாட்டம்; பல கோடி பேருக்கு திண்டாட்டம்!

ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தனியார் நிறுவன ஊழியர்களிடம் பெரும் வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஊதியம் உயர்த்தப்படுகிற போதெல்லாம் உடனடியாக மாநகரம், பிற நகரங்களில் வீட்டு வாடகை உயரும். திடீர் பண வரத்தின் காரணமாக, நுகர்பொருட்களின் தேவையும், அதன் தொடர் விளைவாக, அவற்றின் விலையும் அதிகரிக்கத்தான் செய்யும். ஊதிய உயர்வின் கீழ் வராத, மிகப் பெரிய கூட்டத்துக்கு இது தாள முடியாத சுமையை ஏற்படுத்தும். உதாரணமாக, தனியார் துறையில் பணியாற்றுவோர், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், தினக் கூலியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்போர், நிரந்தர வருமானத்துக்கு வழி இல்லாதோர் போன்றவர்களின் பாடு, திண்டாட்டம்தான்.

இவ்வளவு சம்பள உயர்வு தருகிறபட்சத்தில், அதற்கேற்ப அரசு ஊழியர்களின் வேலை செய்யும் தரம் உயர்ந்தால் நல்லது என்கிறார்கள் மனிதவள நிபுணர்கள். அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படும் நிலையில், லஞ்சம், ஊழல் குறைவதற்கான உத்தரவாதம் இருப்பின் சந்தோஷப் படலாம் என்கிறார்கள் அவர்கள். உற்பத்திப் பெருக்கமும் தர உயர்வும் இருக்கும்பட்சத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாயை அதிகமாக செலவழிப்பதற்கான பயனைப் பெறலாம்.

இந்த ஊதிய உயர்வு, பணவீக்கத்துக்கு வழி வகுக்காது என்று அரசு வட்டாரங்கள் அறிவித்திருக்கிறது. இதை மட்டும் எப்படி இத்தனை உறுதியாகச் சொல்ல முடியும்? சந்தையில் கூடுதல் பணப் புழக்கம் இருந்தால், விலைவாசி கூடத்தான் செய்யும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஆக, 7-வது சம்பள கமிஷன் அறிவிப்பினால், 1 கோடி அரசு ஊழியர்களுக்கு நல்லது நடக்கப் போய் பல கோடி தனியார் ஊழியர்களுக்கு கஷ்டம் வந்து சேர்ந்திருக்கிறது என்ற ஆதங்கக் குரல் ஒலிக்கவே செய்கிறது.