இந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற கமாடிட்டிகளின் விலைப்போக்கு குறித்து அலைஸ் ப்ளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் கூறுகிறார்.

தங்கம்!

“சர்வதேச பங்குச் சந்தை எழுச்சி அடைந்ததன் காரணமாக ஆகஸ்ட் 5-ம் தேதிக்கான தங்கம் ஒரு அவுன்ஸ் கான்ட்ராக்ட், கடந்த வாரத்தில் மட்டும் ரூ.1,160 வரை சரிவடைந்தது. அதிகபட்சமாக ரூ.31,888 -ஆக இருந்த இந்த கான்ட்ராக்ட் ரூ.1,160 வரை சரிவடைந்து ரூ.30,728- ஆக குறைந்து காணப்பட்டது.

தங்கத்தைப் பொறுத்தவரை, ரூ.30,728 என்ற நிலையில் நல்ல சப்போர்ட் உள்ளது. இந்த வாரத்தில் இதை உடைத்துக்கொண்டு கீழே செல்லும்பட்சத்தில் ரூ.29,852 என்ற நிலைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. ஆனால், சப்போர்ட் நிலையை உடைக்காதபட்சத்தில் தங்கம் ஏற்ற இறக்க நிலையில் ஒரே இடத்தில் வர்த்தகம் ஆகுமெனில் மீண்டும் ரூ.31,888 என்ற நிலைக்கு வர அதிகபட்ச வாய்ப்புள்ளது.

வெள்ளி!

கடந்த வாரத்தில் வெள்ளி செப்டம்பர் 5-ம் தேதி கான்ட்ராக்ட் அதிகபட்சமாக ரூ.48,531 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக ரூ.47,000 என்ற நிலையிலும் வர்த்தகம் ஆனது. தினசரி சார்ட்டில் முடிவு எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. இதுமட்டுமின்றி, வெள்ளி அதிகளவில் உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதனால் வெள்ளி சிறிய அளவில் இறக்கத்தைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச பங்குச் சந்தை வலுவான நிலையில் அதிகரித்து வருவதால், எதிர்மறையாக வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை, ரூ.47,000 என்ற நிலையை உடைக்கும்பட்சத்தில் ரூ.45,840 மற்றும் ரூ.44,601 என்ற நிலைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கான கான்ட்ராக்ட் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக ரூ.3,147 என்ற நிலையிலும், குறைந்தபட்சமாக ரூ.2,997 என்ற நிலையிலும் வர்த்தகம் ஆனது. கச்சா எண்ணெய்யைப் பொறுத்த வரை, தேவை ஒரே மாதிரியே உள்ளது.

கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிப்பதுபோல் எந்த ஒரு முன்னேற்றமும் இப்போதைக்கு தெரியவில்லை. எனவே, கச்சா எண்ணெய் இந்த வாரத்தில் சற்று சரிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த வாரத்தில் டெக்னிக்கல் சார்ட்டின்படி, கச்சா எண்ணெய் ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைக்காதபட்சத்தில் ரூ.3,130 என்ற நிலையில் விற்கலாம். கச்சா எண்ணெய் ரூ.2,886 மற்றும் ரூ.2,853 என்ற நிலை வரை வரும் வாரத்தில் குறைய வாய்ப்புள்ளது.”

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!