Published:Updated:

ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!
ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

பிரீமியம் ஸ்டோரி
ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் துறை சார்ந்த பங்குகள், கடந்த ஆறு மாதங்களில் மிகப் பெரிய ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இன்றைய சூழ்நிலையில், சீனாவில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை எடுத்துவருகிற நடவடிக்கைகள்  காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’  பொருட்களை இதுவரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்த சீனா,  தற்போது இறக்குமதி செய்து வருகிறது. இந்திய நிறுவனங்கள் இதை சாதகமாகப் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான வளர்ச்சி.  இந்தத் துறையின் செயல்பாடுகள், இந்திய நிறுவனங்களின்  பங்களிப்பு, உலக அளவிலான மதிப்பீடுகள், இந்திய நிறுவனங் களுக்குள்ள சவால்கள் எல்லாவற்றையும் பார்ப்போம்.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் என்றால்..?

ஒரு பொருளைத் தயாரிப்பதில், இதன் பங்களிப்பு அளவில் சிறியதாக இருந்தாலும், நிறைவுத்தன்மை அடைவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேதியல் பொருளாகக் காணப்படுவதால், இது  ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. சொல்லப்போனால், இவற்றின் பயன்பாட்டு சதவிகிதம் எவ்வளவு  என்பதைவிட அவற்றின் செயல்கள்தான் முக்கியமாக அளவிடப்படுகின்றன அல்லது  முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் குணாதிசயங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

பயன்படுத்தப்படும் துறைகள்..!

ஸ்பெஷாலிட்டி பாலிமர்ஸ் :  வாகனத் துறை, கட்டுமானம், மருத்துவம், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு துறைகளில்,வெவ்வேறுவிதமான அளவில் சேர்க்கப்படுவதால், இதன் செயல்திறனானது  நீட்புத்திறன், வெப்பத்தை தாங்கும்திறன் என்று பல்வேறு வடிவங்களைப் பெறுவதால், இதன் பயன்பாடு சந்தைகளில்  அதிகரித்துக் காணப்படுகிறது.

வாகனத் துறை :  ரப்பர் கெமிக்கல் களின் பயன்பாடு   மோட்டார் வாகன டயர்கள், சைக்கிள் டயர் மற்றும் டியூப்ஸ், கன்வேயர் பெல்ட், காலணிகள், குழாய்கள் மற்றும் கேபிள் வகைகளில் இதன் பயன்பாடு காணப்படுகிறது.

நீர் சுத்திகரிப்பு : தொழில் சார்ந்த கழிவு நீரை மறு சுழற்சி முறையில் சுத்தப் படுத்துதலிலும், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றின்  தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குறிப்பிடத்தக்க  மாற்றங்கள் இந்தத் துறையில் நடந்து வருகின்றன.

உலக அளவில் (2016-ல்) தற்போதைய 28.5 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு இன்னும் ஐந்து வருடங்களில் 38.2 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கக் கூடும்  என மதிப்பிடப்பட்டு உள்ளது. சீனா மற்றும் இந்தியா போன்ற  நாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும், தொழில் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டப்படுவதால், இந்தத் துறை பெரிய அளவில் விரிவாக்கம் காண வாய்ப்புள்ளது.

ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

சுகாதாரம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் : இன்றைய காலகட்டத்தில்  சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அரசாங்கமும், சமூக விழிப்பு உணர்ச்சி காரணமாக தனிநபர் செலவினங்களும் இந்தத் துறையில் அதிகரித்து உள்ளன. இன்றைய இளைய தலைமுறையினர்  உடல்நலத்தைப் பேணுவதிலும், அழகுபடுத்திக்கொள்வதிலும் அதிக அக்கறையுடன் உள்ளனர். சந்தையில் வலம் வரக்கூடிய அதிநவீன தயாரிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதிலும் அதிக அளவு நாட்டம் காட்டி வருகின்றனர். இதனை நம் உள்நாட்டு நிறுவனங்களும், மல்டி நேஷனல் நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு  பயன்படுத்திக்கொண்டு வருகின்றன.

அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்க  பல்வேறு வகையான வேதியல் பொருட்களை    மூலப்பொருளாக வைத்து தயாரிப்பதால், ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  மற்ற துறைகளைக் காட்டிலும்,  இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், இந்த அழகு சாதனப் பொருட்கள் துறையானது வளர்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

டெக்ஸ்டைல் துறை : குறிப்பாக, டிசைன்களை அச்சிடுவதற்கான  மை , சாயம் சேர்ப்பது இந்த இரண்டிலும் ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’களின்  பங்களிப்பு காணப்படுகிறது. டெக்ஸ்டைல் துறைக்குத் தேவையான இடைநிலை சாயப் பொருட்களான ஹெச் ஆசிட் போன்றவற்றின் விலைகள் 2015-ல் ஒரு கிலோ ரூ.300-ஆகக் காணப்பட்டது. தற்போது இது ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை அதிகரித்துள்ளது.

பெயின்ட் மற்றும் பூச்சு :
கட்டுமானத் துறையில் ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’கள்  பயன்பாடு அதிக இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நீர் புகுதலைத் தடுக்கும் விதமாக பூச்சுவேலைக்கான கரைப்பனாகவும், வெப்பத்தை  உள்அனுப்புதலை தடுக்கும் விதமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில்..!

‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’களின் உலகச் சந்தை  மதிப்பு 2015-ல் 830 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2024-ல் இது 1,273 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைச்சரிவு ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ துறையிலும் எதிரொலித்துள்ளது. 2014-ல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலராக காணப்பட்டது, தற்போது  50 டாலருக்கும் குறைவாக வர்த்தக மாவது, இந்தத் துறையின் செயல்பாட்டுத்திறன்   அதிகரிக்க   ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இந்தியாவின் பங்கு..!

இந்தியாவைப் பொறுத்தவரை, வருடாந்திர அடிப்படையில் 9%  என்கிற அளவில் வளர்ச்சி  அடைந்து, 2019-ல் 219 பில்லியன் டாலர்களாக  (அதாவது ரூ 13,91,000 கோடிகள்)  உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகக்  கணிக்கப்பட்டு உள்ளது.  இந்தத் துறை கடந்த ஐந்து வருடங்களாக 13% வளர்ச்சியை உள்நாட்டு நுகர்தலின் அடிப்படையில் சந்தித்துள்ளது. இந்தியாவின்  மக்கள் தொகை  அடிப்படையில் பார்க்கும்போதும், உலக அளவில் ‘ஸ்பெஷல் கெமிக்கல்’களின் சராசரி நுகர்தலுடன்   ஒப்பிடும்போதும், தனிநபர் நுகர்தல் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தியாவின் ஜி.டி.பி.யானது வரும் ஆண்டில் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாலும், இந்தத் துறை மேலும் சிறந்து விளங்க வாய்ப்பு இருக்கிறது.

ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!

1) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் இருக்கக்கூடிய ஏற்ற இறக்கங்கள்,  ஏற்றுமதி  செய்யும் நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். ஏனென்றால், சந்தைப் போட்டியில் சீனாவின் போட்டியை இந்திய நிறுவனங்கள் கடுமையாகச் சந்திப்பதற்கு வாய்ப்புண்டு.

2) தொழில் சார்ந்த தொய்வின் காரணமாக, விற்பனை சரியவும், ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ என்பது தொழில்நுட்ப மேம்பாடு, மூலப் பொருட்களை  எளிதாகத் தருவிப்பது,  எரிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருப்பதாலும் நிறுவனங்கள் அதிக சவால்களைச் சந்திக்கின்றன.
 
3)  ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியில் தடைகள் ஏற்படுமேயானால்,

ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’கள் கடைநிலை பயன்பாட்டுத் தொழில் துறையில் இருப்பதால், வளர்ச்சி குறைய வாய்ப்புண்டு.

4) சுற்றுப்புறச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடுகள் காரணங்களுக்காக, நிறுவனங்கள் ஏற்கெனவே அதிக முதலீடுகள் செய்துள்ள  நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டு வருமேயானால், நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிகர லாபம் சரிவடையும். எனவே, இந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும்முன் ஒன்றுக்கு இருமுறை நன்கு யோசிப்பது நல்லது.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களைத் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் இந்திய நிறுவனங்கள்!

ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

ஸ்பெஷாலிட்டி பாலிமர்     -     எஸ்.ஆர்.எப்.

ரப்பர் கெமிக்கல்ஸ்     -     நோசில்

அழகு சாதனப்பொருட்கள்    -     இமாமி லிமிடட்

நீர் சுத்திகரிப்பு     -      வாடெக் வபாக் தெர்மேக்ஸ், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ்

டெக்ஸ்டைல்     -      அதுல், கிளாரியண்ட், பாடல் கெமிக்கல்ஸ், சுதர்ஷன் கெமிக்கல்ஸ் மற்றும் கிரி இண்டஸ்ட்ரீஸ்

பெயின்ட், பூச்சு     -     பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு