Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி  டிரேடிங்!  மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் அம்பாலால் மல்டி கமாடிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரிசர்ச் அனலிஸ்ட் வி.அருண்.

கமாடிட்டி  டிரேடிங்!  மெட்டல் & ஆயில்



தங்கம்!


அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டத்துக்கு  முன்பே, அமெரிக்காவில் வட்டி விகிதம் குறித்த பதற்றம், தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வாரம் சிகாகோ மத்திய வங்கித் தலைவர் சார்லஸ் இவான்ஸ், அமெரிக்க மத்திய வங்கி தற்போது மற்றும் அடுத்த ஆண்டு இறுதியில் குறுகிய கால வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுமட்டுமின்றி, 2017-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க மத்திய வங்கி, மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளின் தங்கம் விலை உயர்வு மற்றும் பண்டிகை சீசன் காரணமாக உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இதன் விலை அதிகரித்து வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில், தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் பொறுத்தவரை, 29,600-க்கு கீழ் குளோஸ் ஆகும்போது 29,380 முதல் 29,100 வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், 30,000-யைத் தகர்க்கும்போது 30,280 முதல் 30,450 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டி  டிரேடிங்!  மெட்டல் & ஆயில்

வெள்ளி!

அமெரிக்க மத்திய வங்கி நிதிக் கொள்கை கூட்டம் மற்றும் வட்டி விகிதம் உயர்வு குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் வர்த்தகமாகி வருகிறது. வரும் நாட்களிலும் தங்கத்தின் விலைப் போக்கைப் பொறுத்தே வெள்ளியின் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில், அக்டோபர் மாத வெள்ளி கான்ட்ராக்ட் குறுகிய எல்லைகளுக்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியைப் பொறுத்தவரை, 41,700 என்ற நிலையில் நல்ல சப்போர்ட் நிலைமையில் இருக்கிறது. எனினும் இதை உடைக்கும்பட்சத்தில் இதன் விலை மேலும் சரிய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், வெள்ளியை 41,700-க்கு கீழே வர்த்தமாகும்போது விற்பனை செய்யலாம்.

கமாடிட்டி  டிரேடிங்!  மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

அக்டோபர் 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பின்படி, விநியோகம் 6,00,000 பீப்பாய்கள் வரை சரிவடைந்து இருந்ததாக அமெரிக்க எரிசக்தி அமைப்பு தெரிவித்து இருந்தது.

இதுமட்டுமின்றி, ஒபெக் நாடுகளுக்கு இடையே கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் தாக்கத்தினால் சில தினங்களாக கச்சா எண்ணெய் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை 3,280 என்ற விலையில் விற்கலாம்.

கமாடிட்டி  டிரேடிங்!  மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு!

கடந்த வாரம் புதன்கிழமை, இயற்கை எரிவாயுவின் விலை கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவாக கடும் சரிவைச் சந்தித்தது.

தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு கையிருப்பு 3.836 டிரில்லியன் க்யூபிக் ஃபிட்-ஆக இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் ஒப்பிடும்போது 4.8% அதிகரித்தும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.2% உயர்ந்தும் காணப்படுகிறது.

இயற்கை எரிவாயு நவம்பர் மாத கான்ட்ராக்ட், சமீபத்திய அதிகபட்ச உயர்வான 239 என்ற விலையில் இருந்து தற்போது சரிவடைந்துள்ளது. டெக்னிக்கல் படி, இயற்கை எரிவாயு விலை       211-க்கு மேலே குளோஸ் ஆகி வர்த்தகம் நடைபெறும் போது 216.50 மற்றும் 221 வரை வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு