Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி  டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி

ந்த வாரம் மென்தா ஆயில், சோயாபீன்ஸ், மஞ்சள் மற்றும் சீரகத்தின் விலை எப்படி வர்த்தகமாகும் என்பதைப் பார்ப்போம்.

கமாடிட்டி  டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்!

மென்தா ஆயில் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் நிலவும் கட்டுப்பாடு, குறைந்த அளவிலேயே விநியோகம் காரணமாக இதன் தேவை அதிகரித்து வருவதால், மென்தா ஆயில் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மென்தா ஆயில் உற்பத்தி 35,000 டன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மென்தா ஆயில் 903.3 என்கிற அளவில் நல்ல சப்போர்ட் நிலைமையில் இருக்கிறது. எனினும் இதை உடைக்கும்பட்சத்தில், 894.7 என்ற நிலையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே மென்தா ஆயில் விலை 918-யைத் தாண்டும்பட்சத்தில் 924.1 வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மென்தா ஆயில் இந்த வாரம் 894.7 முதல் 924.1 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோயாபீன்ஸ்!

வெளிநாடுகளில் சோயாபீன்ஸ் விலை அதிகரிப்பு மற்றும் சீனாவில் இதன் தேவை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் சோயாபீன்ஸ் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. விவசாயிகளும் சோயாபீன்ஸ் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய இருப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

என்சிடிஇஎக்ஸ்-ன் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் சோயாபீன்ஸ் கையிருப்பு 1,711 டன் உயர்ந்து 9.282 டன்னாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சோயாபீன்ஸ் அதிகளவில் உற்பத்தி மேற்கொள்ளும் மத்தியப் பிரதேசத்தில் 100 கிலோ மதிப்பு கொண்ட மூட்டை ஒன்றின் விலை 3,035-ஆக அதிகரித்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து புதிய வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது சோயாபீன்ஸ் 3,104 என்ற விலையில் நல்ல சப்போர்ட் நிலையில் காணப்படுகிறது. ரெசிஸ்டன்ஸ் 3,139 என்ற நிலையில் உள்ளது. சோயாபீன்ஸ் இந்த வாரம் 3,085 முதல் 3,155 வரை வர்த்தமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி  டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மஞ்சள்!

பண்டிகை நாட்களினால்  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியால் மஞ்சளின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. முக்கியமாக, மஞ்சள் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இருந்து அதிக வரத்து இருப்பினும், மஞ்சளில் விலை உயர்ந்து காணப்படுகிறது.

என்சிடிஇஎக்ஸ் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் மஞ்சள் கையிருப்பு 10 டன் குறைந்து, 3,776 டன் ஆகக் குறைந்துள்ளது. மஞ்சள் விலை இந்த வாரம் 7,118 முதல் 7,414 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மஞ்சள் விலை 10,040 என்ற விலையில் நல்ல சப்போர்ட் நிலைமையில் காணப்படுகிறது. இதை உடைக்கும்பட்சத்தில், 7.118 வரை கீழே இறங்க வாய்ப்புள்ளது. ரெசிஸ்டன்ஸ் 7,340 என்ற நிலையில் உள்ளது.

சீரகம்!

உள்நாடு மற்றும் ஏற்றுமதியில் சீரகத்தின் தேவை குறைந்ததினால், இதன் விலை குறைந்து காணப்பட்டது.

வர்த்தகர்கள் நடப்பு நிதி ஆண்டில் சீரகத்தின் ஏற்றுமதி 1,20,000 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இது கடந்த நிதி ஆண்டில் 98,700 டன் ஆக இருந்தது.

என்சிடிஇஎக்ஸ்-ல் அங்கீகரிக்கப்பட்ட கிடங்கில் சீரகத்தின் கையிருப்பு 207 டன் குறைந்து, 2,164 டன்னாக குறைந்துள்ளது.

சீரகத்தின் விலை 16,645 என்ற நிலையில் நல்ல சப்போர்ட் ஆக இருக்கிறது. ரெசிஸ்டன்ஸ் 17,230 என்ற நிலையில் உள்ளது. சீரகம் இந்த வாரம் 16,435 முதல் 17,605 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு