இந்த வாரம் தங்கம் மற்றும் காப்பர் விலைப்போக்கு குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி

நிறுவனத்தின் இயக்குநர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

‘‘தற்போது ஒரு வலிமையான இறக்கத்தில் உள்ளது. டாலர் இண்டெக்ஸ் மிகப்பெரிய வலிமையான ஏற்றத்தில் உள்ளது. 2003, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தற்போது மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த ஏற்றம்தான், தங்கத்தைக் கடந்த ஐந்து மாதத்தில் குறைந்தபட்ச விலையைத் தொட வைத்துள்ளது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது, பங்குச் சந்தை மற்றும் கரன்சி சந்தையை வலிமையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, தங்கத்திலிருந்து முதலீடு வெளியேறி, பங்குச் சந்தைக்கும் கரன்சி சந்தைக்கும் மாறிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்க ஃபெட் தலைவர் ஜெனேட் யெல்லேன், வரும் டிசம்பர் மாதம் கண்டிப்பாக வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்ற தொனியில் பேசியிருப்பது, டாலரை மேலும் வலிமையாக மாற்றி உள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை மட்டும் சற்றே ஏறி நின்ற தங்கம், பின்னர் தொடர் இறக்கத்தில் உள்ளது. திங்கட்கிழமை உச்சமாக 29797 தொட்ட பின், ஒவ்வொரு நாளும் புதிய இறக்கத்தைத் தோற்றுவித்து வருகிறது.

தினசரி வரைபடத்தில் 29400 என்ற எல்லையை உடைத்த பிறகு, அதுவே வலிமையான தடைநிலையாக மாறி உள்ளது. இதை ஒரு ‘பிக் பிக்சர்’ அடிப்படையில் பார்க்கலாம்.

அடுத்து மணித்துளி வரைபடத்தில், 29180 என்பது தற்போது முக்கிய தடைநிலையாக உள்ளது. மேலே 29180-ஐ உடைத்து ஏறினால், 29400 என்ற எல்லையைத் தொடலாம். இறக்கம் தொடர்ந்தால், கீழே 28650 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.’’

காப்பர்!

காப்பர் வலிமையான ஏற்றத்துக்குப் பின், பக்கவாட்டு நகர்வில் உள்ளது. நவம்பர் 3-ம் தேதி, 330 என்ற தடைநிலையை உடைத்த பிறகு, மிகப்பெரிய தொடர் ஏற்றத்தைக் கொடுத்தது.

இந்தத் தொடர் ஏற்றம், உச்சமாக 405-ஐ தொட வைத்தது. அதன்பின், அந்த உச்சத்தைத் தக்க வைக்கமுடியாமல், ஒரு ஷூட்டிங் ஸ்டாரை தோற்றுவித்தது. பின் இறங்க ஆரம்பித்த காப்பர், மேலே 380-க்கும் கீழே 360-க்கும் இடையே சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கத்தை ஒரு கரெக்ஷன் அல்லது ரீடிரேஸ்மென்ட் என்றும் சொல்லலாம்.

தற்போது 360 என்பது மிக முக்கியமான ஆதரவாக உள்ளது. ஃபிபனாச்சியில் சொல்வதாக இருந்தால், தற்போதைய ஏற்றத்தின் 38.2% இறக்கத்தில் இருப்பதாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

இனி 360-ஐ உடைக்கவில்லை என்றால், அடுத்த கட்ட பெரிய நகர்வை நோக்கி எடுத்துச்செல்லலாம். கீழே 360 உடைக்கப்பட்டால், அடுத்து 345 மற்றும் 330 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம்.

கச்சா எண்ணெய்!

எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கச்சா எண்ணெய் இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 2.4 மில்லியன் பேரலாக இருந்தது.
கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு 0.4 மில்லியன் பேரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில் எதிர்பார்ப்பை மிஞ்சி அளவுக்கு அதிகமாக 5.3 பில்லியன் பேரலாகக் கையிருப்பு இருந்தது. இதன் தாக்கத்தினால் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது.

எனினும், கச்சா எண்ணெய் அதிகளவில் விநியோகம் செய்யப்படுவதால் ஒபெக் நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில், உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை செப்டம்பர் மாதத்தில் 7.812 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 7.305 பேரலாக இருந்தது.

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயு இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 54 பில்லியன் க்யூபிக் ஃபீட்டாக இருந்தது. கடந்த வாரம் இயற்கை எரிவாயு கையிருப்பு 34 பில்லியன் க்யூபிக் ஃபீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டா 30 பில்லியன் க்யூபிக் ஃபீட்டாக இருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, கூடுதலாக 30 பில்லியன் க்யூபிக் ஃபீட் சேர்ந்ததால், இயற்கை எரிவாயு விலை சரிவடைந்து காணப்பட்டது.

இன்னும் அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் சூடான வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இயற்கை எரிவாயு தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி!

அமெரிக்க டாலரின் விலை உயர்வால் தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் சரிவைச் சந்தித்து வருகிறது.

கடந்த வாரம் எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலை 2 சதவிகிதம் வரை சரிவடைந்து இருந்தது. அவுன்ஸ் 16.7 டாலரில் இருந்தது.

அமெரிக்கத் தேர்தல் முடிவு, வட்டி விகிதம் உயர்த்துவது குறித்த அமெரிக்க மத்திய வங்கியின் முடிவில் எந்தவித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக உச்சத்தை எட்டி வருகிறது. இது வெள்ளியின் விலையில் சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!