மோடி பிரதமராகப் போகிறார் என்கிற செய்தி வந்தவுடன் பங்குச் சந்தை எவ்வளவு வேகத்தில் உயர்ந்ததோ, அந்த வேகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பினால் இப்போது பங்குச் சந்தை சரிந்துகொண்டிருக்கிறது.

கடந்த 8-ஆம் தேதி இரவு, ‘அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு வந்த அன்று நிஃப்டி 8543 புள்ளிகளாக நிறைவு பெற்றிருந்தது. அன்றிலிருந்து இன்று வரை 469 புள்ளிகள் குறைந்து (வெள்ளிக்கிழமை 17/11/16) 8074 புள்ளிகளாகக் குறைந்திருக்கிறது. நவம்பர் 8-ம் தேதி வரை அமெரிக்க அதிபர் தேர்தலை மட்டுமே பெரிதாகப் பேசியவர்கள், மறுநாள் முதல் இந்தியாவைப் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்தனர். இதன் விளைவாக பங்குச் சந்தையானது இறங்கியபடியேதான் இருக்கிறது.

இந்த இறக்கம் இன்னும் தொடருமா, அடுத்துவரும் வாரங்களில் சந்தையின் போக்கு எப்படி இருக்க வாய்ப்புண்டு, மோடியின் ஆபரேஷனால் பங்குச் சந்தைக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.

இந்த கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கும்முன், பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்கிற கேள்விக்கு பதில் சொன்னார் புது டெல்லியில் இருக்கும் பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய மையத்தின் (National Institute of Public Finance and Policy) பேராசிரியர் என்.ஆர்.பானுமூர்த்தி.

“2016 - 17-ம் நிதி ஆண்டு தொடக்கத்தில், விஐடிஎஸ் (VDIS) என்கிற பெயரில் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தைக் கணக்கு காட்டி வரி செலுத்தச் சொன்னபோது, நம் ஜிடிபியின் மொத்த தொகையில் வெறும் 0.5 சதவிகிதத்தை மட்டுமே வெளிக் கொண்டுவர முடிந்தது. சாத்வீக வழிகள் சரிபட்டு வராததால், உடனடியாக அதிரடித் திட்டத்தை அறிவித்துவிட்டது அரசு. தீவிரவாதத்துக்கு பயன்படும் கறுப்புப் பணம், கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணம், கள்ள நோட்டுகள் என்று ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்க, இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள் என்பதால் இது ஒரு தைரியமான முடிவுதான்.
பொருளாதாரத்தில் குவான்டிட்டி தியரி ஆஃப் மணி (Quantity Theory of Money) என ஒன்று உண்டு. இந்த தியரி, பொருளாதாரத்தில் புழங்கும் பணத்துக்கும், உற்பத்திக்கும் (அவுட் புட்), விலைக்கும் உள்ள தொடர்புகளை விளக்குகிறது.

2015- 16 -ம் நிதி ஆண்டில், இந்திய பொருளாதாரத்தில் ஆர்பிஐ வெளியிட்ட மொத்த பணத்தில், 13.2 சதவிகிதம்தான் மக்கள் கையில் இருந்தது. புழக்கத்தில் இருந்த பணத்தில் பெரும்பகுதி பணம், சுமாராக 75 சதவிகிதம் பணத்தை பெருக்கும் முதலீடுகளில்தான் இருந்தது.

இன்னொரு சிக்கலான விஷயம், நம் பொருளாதாரத்தில் புழங்கும் கறுப்புப் பணத்தை கணக்கிடுவது. கரன்சி டிமாண்ட் அணுகுமுறை என்கிற கருத்தாக்கத்தின்படி, இந்தியாவில் கணக்கு காட்டப்படாமல், நம் மொத்த ஜிடிபியில் 23 - 26% கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். கறுப்புப் பணம் உள்நாட்டு கரன்சி, வெளிநாட்டு கரன்சி, தங்கம் மற்றும் விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் அசையாத சொத்துக்களாக இருக்கின்றன.

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கையில் இருக்கும் பணம் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டு, மீதமுள்ள பணம் வங்கியிலேயே டெபாசிட் செய்யப்படும். ஆனால், பணத்தைப் பெருக்கும் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க அளவிலான கறுப்புப் பணம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதால், அவற்றை தற்போது கணக்கில் கொண்டு வரமாட்டார்கள். எனவே, இந்த மாற்றம் முழுமையாக மாறாது. இனி ஜிடிபி வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வித்தியாசமான தாக்கங்கள் உண்டாகும்.

இந்த அறிவிப்பினால், மேற்கூறிய தியரிப்படி பணப் புழக்கம் பாதிக்கப்பட்டு, குறுகிய காலத்துக்கு உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்டாலும், நீண்ட காலத்துக்கு விலைதான் பெரிதாகப் பாதிக்கப்படும். செல்லாமல் ஆக்கப்பட்ட பணத்தை மாற்றுவதினால், பணப் புழக்கம் குறையும். அதனால் இந்த ஆண்டின் ஜிடிபி 1.1% வரை குறையலாம். அடுத்த வருடம்கூட இந்த ஜிடிபி இறக்கம் தொடரலாம்.

இதுவரை கணக்கில் வராத பணம் எல்லாம், இந்த அறிவிப்புக்குப்பின் வங்கிக் கணக்கில் வரும். அதோடு பணத்தைப் பெருக்கும் முதலீடுகளுக்கும் சில முன்னேற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். இனிவரும் காலங்களில், நேர்வழியில் அரசு கண்காணிக்கும் முதலீடுகளில் மக்கள், பணத்தைப் பெருக்க முதலீடு செய்வார்கள் என்பதால், ஜிடிபி இறக்கம் 0.6 சதவிகிதத்துடன் தடுக்கப்படலாம். இந்த மாற்றங்களின் முழுமையான பலனை 2017 - 18 -ம் நிதி ஆண்டில் காணலாம். அடுத்த நிதி ஆண்டில் 0.7% ஜிடிபி வழக்கத்தைவிட கூடலாம். அதோடு பணவீக்கமும் குறையும். இதெல்லாம் மகிழ்ச்சியான செய்திதானே!

மத்திய அரசு எவ்வளவு விரைவாகவும் கச்சிதமாகவும் புதிய நோட்டுகளை கொடுத்து, பணப் புழக்கத்தையும், பணப் பரிவர்த்தனை களையும் சீராக்குகிறதோ, அந்த அளவுக்கு இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கும்.

ஆனால் நடைமுறையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் புதிய நோட்டுக்களை மாற்றுவதில் உள்ள பிரச்னைகள் காரணமாக, மக்களும் அரசும் வலியுடனேயே இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, செயல்பட்டு வருகின்றனர்’’ என்று முடித்தார்.

பொருளாதாரத்தில் ஏற்படும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விளைவுகளினால் பங்குச் சந்தை எப்படி பாதிக்கப்படும் என்பதை சொன்னார் இன்வெஸ்டார்ஸ் ஆர் இடியட்ஸ் டாட் காம் மற்றும் ஐ.என்.ஆர். பாண்ட்ஸ் டாட் காம்-ன் நிறுவனரும் பங்குச் சந்தை நிபுணருமான அர்ஜூன் பார்த்தசாரதி.

“தற்போது இந்திய சந்தையில் 17.5 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது. இது ஆர்பிஐ-ன் வலைதளத்தில் இருக்கும் அதிகாரபூர்வக் கணக்கீடு. பிரதமர் அறிவிப்பால் தற்போது மொத்த பணமும் மீண்டும் வங்கிகளுக்குள் வரும்.

வங்கிகளில் கையில் தாராளமாக பணம் புழங்கும். மக்களின் பணம் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு கணக்குக் காட்டப் படுவதால், கறுப்புப் பணம் புழங்கும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் விற்பனை குறைந்து தேக்கம் ஏற்படும். இதனால் செயற்கையான விலை ஏற்றப்பட்ட பொருட்களின் விலை குறையும். பொருட்கள் விலை குறைவால், பணவீக்கம் குறையும்.

பாசிட்டிவ் - நெகட்டிவ்!

பணவீக்கம் குறைவது மற்றும் வங்கியின் கையில் அதிகப்படியான பணப்புழக்கம் காரணமாக வங்கி வட்டி விகிதங்கள் குறையலாம்.

கிடைக்கும் டெபாசிட் பணத்தால், ஒரு ஆண்டுக்குத் தேவையான அரசின் நிதிப் பற்றாக்குறை குறையலாம். 2016-17-ம் நிதி ஆண்டுக்கு நம் ஜி.டிபியில் 3.5%, அதாவது ரூ.5.33 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையாக இருந்தது. இது ஒரு மிகப் பெரிய பாசிட்டிவ்.

இந்திய பொருளாதாரத்தில், பணப் பரிவர்த்தனைகள் குறைவதால், மந்தநிலை ஏற்படும். இதனால் பொருளாதார வளர்ச்சியும் தற்காலிகமாக தடைபடும். இது நெகட்டிவ்.

ஆர்பிஐமுன் உள்ள பிரச்னை!

ஆர்பிஐ-யின் பிரதான கடமைகளில் ஒன்று நோட்டுகளை அச்சடிப்பது. இந்தியாவில் புழங்கும் மொத்தத் தொகையில் சுமாராக 82% ரூ.500 மற்றும் ரூ1,000 நோட்டுகளாகவே இருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் கோடி. இந்த ரூ.14 லட்சம் கோடியையும் செல்லாது என்று அறிவித்து விட்டதால், அதே ரூ.14 லட்சம் கோடிக்குப் பணத்தை அச்சடிக்க வேண்டி இருக்கும். ஆர்பிஐ-யின் கணக்குப் புத்தகங்களில் இந்த ரூ.14 லட்சம் கோடி கடனாகக் காட்டப்படும். ஆர்பிஐ-யின் சொத்துக்களாகக் கருதப்படுவது, ஆர்பிஐ மற்ற வெளிநாட்டு கரன்சிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் ரூ.16 லட்சம் கோடிதான்.

சொத்து - கடன் பிரச்னை!

ஆர்பிஐ வெளியிடும் ரூ.14 லட்சம் கோடி புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களுக்கு இணையாக பழைய நோட்டுகள் சரியாகத் திரும்ப வந்து விட்டால் பிரச்னை இல்லை. அப்படி வந்தால் இந்தியாவில் கறுப்பு பணமே இல்லை என்றாகிவிடுமே!

ஏற்கெனவே மறைக்கப்பட்ட பணத்தை இப்போது கணக்கில் காட்டினாலும் எதுவும் மிஞ்சாது. சுமாராக 90% - 120% வரை வரி செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், அதே அளவுக்கு சரியாக நோட்டுக்கள் திரும்ப வருவது கடினமே.

ரூ.14 லட்சம் கோடியில் 50% அளவுக்கு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வருகிறது என்றே வைத்துக் கொள்வோம். ரூ.7 லட்சம் கோடிக்கு பழைய ரூ.500, ரூ.100 ரூபாய் நோட்டுகள் + ரூ.3 லட்சம் கோடிக்கு மற்ற நோட்டுகள் என்று மொத்தம் ரூ.10 லட்சம் கோடிதான் சரிகட்டப்படும். மேலும், ரூ.7 லட்சம் கோடி கடனாகவே இருக்கும்.

சொத்தை விற்கும்!

ஆர்பிஐ, ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் மற்ற நாட்டுகளின் கரன்சிகளை விற்றுக் கடன்களை சரிகட்ட நேரிடும். இதனால் அந்நிய செலாவணி குறையும். இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகராக கணிசமாகக் குறையலாம். இந்த நடவடிக்கைக்குப் பிறகு, மீண்டும் உடனடியாக ரூ.7 லட்சம் கோடிக்கு மற்ற நாட்டு கரன்சிகளை வாங்கவேண்டி இருக்கும்.

சொத்து விற்கவில்லை என்றால்..?

சொத்துக்களை விற்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆதாரமாக இருக்கும் பணப் பரிவர்த்தனைகள் தற்காலிகமாக முடங்கும். டிஜிட்டல் பேமென்ட் முறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு மக்கள் சீராக பயன்படுத்தும் வரை பிரச்னை தொடரும்.

சொத்துக்களை விற்பதினால் பல நிச்சயமில்லா சூழல்கள் நிலவத் தொடங்கும். சொத்துக்களை விற்கவில்லை என்றால் சில மாதங்களுக்குப் பிரச்னை தலைவிரித்து ஆடினாலும், நீண்ட காலத்துக்கு நல்ல பலன் அளிக்கும்.

இனி பங்குச் சந்தைதான்!

1. அரசின் இந்த அறிவிப்பினால், இதுவரை நேர்மையாக அரசாங்கத்திடம் உரிமை பெற்று, கச்சிதமாக வரி கட்டி கம்பெனி நடத்தியவர்கள் சந்தோஷம் அடைவார்கள். இனி சரியான கணக்கு வழக்கு இல்லாமல் யாரும் கம்பெனி நடத்த முடியாத சூழல் உருவாகும். எனவே, இனி எல்லோரும் கணக்குக் காட்டி தொழிலை நடத்த வேண்டி இருக்கும். இதனால், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், முன்னணியில் இருக்கும்.

2. ரொக்கமாகவே வைத்திருந்து, சொத்துக்களை வாங்குவது விற்பது எல்லாம் இனி பெரிய அளவில் குறையும் என்பதால், பிஸிக்கல் சொத்துக்களில் இருந்து, ஃபைனான்ஷியல் சொத்துக்களுக்கு முதலீடுகள் பெரிய அளவில் மாற்றப்படும். எனவே, கணிசமானதொரு தொகை ஃபைனான்ஷியல் சொத்துகளிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

3. ஏற்கெனவே சொன்னதுபோல, வங்கிகளின் வட்டி விகிதங்கள், பணவீக்கம் போன்றவை குறைவதால், சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். அதனால் அவர்களின் லாப வரம்புகள், நிகர லாபம் மற்றும் நிறுவனத்தின் மதிப்பீடுகள் அதிகரிக்கும்.

எனவே, குறுகிய காலத்தில் பங்குச் சந்தைக்கு பாதிப்பு உண்டானாலும் நீண்ட காலத்தில் நன்மையே விளையும்’’ என்று முடித்தார் அர்ஜூன் பார்த்தசாரதி.

இறுதியாக, சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொன்னார் கார்வி ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், டெக்னிக்கல் அனலிஸ்ட்டுமான ரெஜி தாமஸ்.

“நிஃப்டி தன்னுடைய 8968 என்கிற உச்ச புள்ளிகளைக் கடக்கவில்லை. அதோடு நடப்பு 2016-17 -ம் நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் கூட சொல்லும்படியாக இல்லை. பல நிறுவனங்கள் சந்தையின் கணிப்பைவிடக் குறைவான வருமானத்தையும், லாபத்தையுமே தந்திருக்கின்றன.

இப்படி ப பிரச்னைகள் இருக்கிற போதிலும், பங்குகளின் விலை, அதன் அடிப்படை மதிப்பீடுகளை ஒட்டியே இருக்கின்றன என்பது சந்தோஷமான விஷயம். எனவே, நல்ல, தரமான பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்கலாம்.

எவ்வளவு சரியும்?

சந்தை கடந்த டிசம்பர் 2011-ல் 4530 புள்ளிகளில் இருந்து மார்ச் 2015-ல் 9119 புள்ளிகளுக்குச் சென்றது. 2016 பிப்ரவரியில் 6825 புள்ளிகளில் இருந்து, செப்டம்பர் 2016-ல் 8968 புள்ளிகளுக்கு உயர்ந்தது. நாட்கள் கடந்திருந்தாலும், வலுவான ரெசிஸ்டன்ஸ்களை உடைத்து வர்த்தகமாக வில்லை என்பதையே இது காட்டுகிறது.

இப்போதைக்கு சந்தை கரெக்ஷனில்தான் இருக்கிறது. ஆனால், சந்தை சரிவது எப்போது நிற்கும் என்பதை சற்று நிலைபெற்ற வர்த்தகமான பின்பே சொல்ல முடியும்.

தற்போதைக்கு நிஃப்டியைப் பார்க்கும்போது, 8002, 7896, 7643 ஆகிய லெவல்களை சப்போர்ட் லெவல்களாக எடுத்துக்கொள்ளலாம். எனவே, இப்போதைக்கு 8596 - 7643 என்கிற ஒரு ரேஞ்ச் லெவல்களுக்குள் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த லெவல்களை குறுகிய காலத்துக்கு வைத்துக் கொள்ளலாம்.

2003-ம் ஆண்டுக்கு பிறகு, பல மாதங்களுக்கு எல்லாம் சந்தை கரெக்ஷன் ஆகி இருக்கிறது. அப்போது எல்லாம் மூன்று மாதங்களுக்குப் பிறகு நான்காவது மாத காலத்தில் ஒரு சிறிய ஏற்றம் கண்டு மீண்டும் கரெக்ஷன் ஆகலாம்.

இப்போது அப்படிப்பட்ட சிறிய ஏற்றம் டிசம்பர் 2016-ல் வரலாம். அதன் பிறகும் சந்தை கரெக்ஷனில் வர்த்தகமாகுமா அல்லது ஏற்றத்தை நோக்கி வர்த்தகமாகுமா என்பதை அன்றைய வர்த்தக சூழ்நிலைகளை வைத்துதான் சொல்ல முடியும்.

சந்தை ரெக்கவரி ஆகும்போது, அது V வடிவத்தில் ஆகுமா அல்லது U வடிவத்தில் ஆகுமா என்பதுதான் கேள்வி. V வடிவத்தில் சந்தை ரெக்கவரியானால், குறைந்த காலத்திலேயே மேலெழும்பும். தற்போதைய நிலையில், சந்தை ரெக்கவரி ஆக 6 - 10 வாரங்கள் வரை ஆகலாம்.

என்ன செய்யவேண்டும்?

இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் போர்ட் ஃபோலியோக்களை ரீபேலன்ஸ் செய்துகொள்வது, சரியான செக்டார்களை தேர்வு செய்வது, பங்குகளின் மதிப்புகளைக் கொண்டு நல்ல பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது, கையில் முதலீடு செய்ய வைத்திருக்கும் பணத்தில் 20-35 சதவிகித பணத்தை முதலீடு செய்யாமல், விலை குறையும்போது முதலீடு செய்ய வைத்துக் கொள்வது, எஸ்.ஐ.பி முறையில் நல்ல பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது போன்றவற்றை செய்ய வேண்டும்.

நல்ல துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில், என்டர்டெயின்மென்ட், பவர், ஏர்லைன்ஸ், கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம். என்றாலும், எச்சரிக்கையோடு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் நாம் நடந்துகொண்டாக வேண்டும்.

எஃப்.ஐ.ஐ நிலை!

கடந்த அக்டோபர் 2016 முதல் எஃப்.ஐ.ஐ-கள் தொடர்ந்து தங்கள் முதலீடுகளை விற்றுப் பணமாக்கி வருகிறார்கள். 2016 காலண்டா் ஆண்டில், நவம்பர் 18-ம் தேதி வரை கணக்கில் எடுத்துக்கொண்டால், பங்குச் சந்தையில் ரூ.38,095 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள்.

கடன் திட்டங்களில் அதே 2016 காலண்டர் ஆண்டுக்கு நவம்பர் 18-ம் தேதி வரை கணக்கில் எடுத்துக்கொண்டால் 11,546 கோடி ரூபாய் குறைவாக முதலீடு செய்திருக்கிறார்கள். ஆக, (38,095 - 11,546 = 26,549) ரூ.26,549 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட சற்றுக் குறைவு.

இருப்பினும், டிசம்பர் மாதத்தில் எஃப்.ஐ.ஐ முதலீடுகள் கூடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்று முடித்தார்.

நிபுணர்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, குறுகிய காலத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ரிஸ்க் எடுத்து நீண்ட காலம் காத்திருக்க நினைப்பவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள இறக்கம் பொன்னான வாய்ப்பு என்பதில் சந்தேகமே வேண்டாம்!