Published:Updated:

தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?

தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?
பிரீமியம் ஸ்டோரி
தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?

கமாடிட்டி சந்தை...தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி நிபுணர், Ectra.in

தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?

கமாடிட்டி சந்தை...தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி நிபுணர், Ectra.in

Published:Updated:
தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?
பிரீமியம் ஸ்டோரி
தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?
தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?

மது பங்குச் சந்தை போலவே, நமது கமாடிட்டி சந்தையும் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. அடுத்த ஓராண்டு காலத்தில் முக்கியமான கமாடிட்டிகளின் விலைப்போக்கு எப்படி இருக்கும், விலையை பாதிக்கக்கூடிய காரணிகள் எவையெவையாக இருக்கும் என்பதை சுருக்கமாக சொல்கிறேன்.

தங்கம்!

தங்கத்தின் விலையானது அதன் டிமாண்ட் மற்றும் சப்ளையைப் பொறுத்தே அமையும். அமெரிக்காவின் வட்டி விகிதம், அமெரிக்காவின் பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களான வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்தி அளவு, ஒட்டுமொத்த ஜி.டி.பி வளர்ச்சி, பணவீக்க அளவு, டாலர் இண்டெக்ஸ் அளவு, உலக அரசியல் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்றவை.

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம்               (10 கிராம்) சென்ற வருடம் இதே காலகட்டத்தில் குறைந்தபட்ச புள்ளியாக சுமார் ரூ.24,900 என்ற விலையில் வியாபாரம் ஆனது. அதன்பின் 2016 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் விலையானது சுமார் ரூ.30,000 என்ற எல்லையைத் தொட்டது. இந்த ஏற்றமானது ஜூலை 2016 வரை தக்கவைக்கப்பட்டு, (அதிகபட்ச விலை ரூ.32,455) பின் இறங்குமுகமாக மாறியது. இந்த உச்சத்தில் இருந்து இறங்கி, தற்போது ரூ.29,000 என்ற புள்ளிகளுக்கு அருகாமையில் வியாபாரம் ஆகி வருகிறது.

தற்போதைக்கு தங்கத்துக்கு ரூ.28,500-ல் நல்ல ஆதரவு(support) இருக்கிறது. இது உடைக்கப் படாதவரை, தங்கத்தின் புதிய ஏற்றம் தொடரலாம். அப்படி தொடரும்பட்சத்தில் அடுத்தடுத்த முக்கிய எல்லைகளான ரூ.29,500, ரூ.30,600 மற்றும் ரூ.32,500 ரூபாயைத் தொடலாம். ரூ.28,500 ரூபாயை உடைத்து தங்கம் இறங்கினால், அடுத்த கட்டமாக ரூ.27,500 என்ற எல்லையில் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம். அதுவும் உடைந்தால், தங்கம் வீழ்ச்சியடைந்து எங்கிருந்து உயரத் தொடங்கியதோ, அந்த எல்லையான ரூ.24,500 என்ற எல்லையை அடையலாம். இது மிகவும் வலிமையான ஆதரவு எல்லை. இதை டெக்னிக்கலாக பார்த்தாலும், அடுத்து வரும் அமெரிக்க ஃபெட் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் கூட்டுவது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

வெள்ளி!

வெள்ளியானது, தொழிற்சாலை உபயோகத்துக்கு பயன்படுவது தற்போது அதிகமாகி வருகிறது. குறிப்பாக, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் செல்போன்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. சீனா அதிக அளவு வெள்ளியை உபயோகப்படுத்தி வருகிறது.

தற்போது தங்கத்துக்கும் வெள்ளிக்குமான விகிதம் சுமார் 70-ஆக இருக்கிறது. கடந்த 10 வருடத்தின் அளவை எடுத்து பார்க்கும் போது குறைந்தபட்சமாக 31.68 என்ற அளவையும் (பிப்ரவரி 2011) அதிகபட்சமாக 83.73 (டிசம்பர் 2008) என்ற எல்லைகளைத் தொட்டது. இதில் கவனிக்கவேண்டியது, வெள்ளியானது 80-யைத் (தங்கம்/வெள்ளிக்கான விகிதம்) தாண்டும்போது, அதிக அளவில் வாங்க வாய்ப்பிருக்கிறது. பின் 50 என்ற எல்லையை நோக்கி நகரவும் வாய்ப்பிருக்கிறது, காலப்போக்கில். இது ஒரு நாளிலோ அல்லது ஒரு சில மாதத்திலோ நடக்கக்கூடிய விஷயமல்ல. இருந்தாலும் எந்தத் திசையை நோக்கி நடக்க வாய்ப்பி ருக்கிறது என்பதைக் காண முடியலாம்.

கமாடிட்டி சந்தையில் வெள்ளி (ஒரு கிலோ) தற்போது ரூ.40,000 என்கிற நிலையைத் தொட முயற்சிக்கிறது. இந்த எல்லை உடைக்கப்படவில்லை எனில் மேலே ரூ.42,700, ரூ.45,000 மற்றும் ரூ.48,000 என்ற அளவைத் தொடலாம். ரூ.40,000 என்ற எல்லையை உடைத்து கீழே இறங்கினால், வலிமையான இறக்கம் வந்து, ரூ.38,800 என்பதை முதல் கட்டமாகவும், பின் மெள்ள இறங்கி ரூ.33,000 என்ற எல்லையை அடையலாம்.

தங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..?


நிக்கல்!

நிக்கல் 2014 மே மாதம் அதிகபட்சமாக 1,281 என்ற விலையைத் தொட்டபிறகு, படிப்படியாக வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. பிப்ரவரி 2016-ல் குறைந்தபட்சமாக 520 என்ற புள்ளிகளைத் தொட்டது. அதன்பின் ஜூன் 2016 வரை இறக்கத்தை தக்கவைத்து, ஜூலை 2016-ல் உடனடி தடை நிலையான 640-யை உடைத்து ஏற ஆரம்பித்தது. இந்த எல்லையைத் தாண்டி ஏறினால், அடுத்து 50% எல்லையான 900 என்ற எல்லையைத் தொட வாய்ப்பிருக்கிறது. இதற்கடுத்து 61.8% எல்லையான 990 என்பது மிக முக்கிய தடைநிலை. தற்போது 690 என்பது முக்கிய ஆதரவாக உள்ளது. இதை உடைத்தால் மீண்டும் இறங்குமுகமாக மாறலாம்.

லெட்!

லெட் சென்ற வருடம் நவம்பரில் 102 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டபிறகு, அந்த ஆதரவை தக்கவைத்து படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் தற்போது 151 என்ற எல்லை வரை கொண்டு வந்துள்ளது. தற்போது 155 என்பது 2007 முதல் இன்றுவரை ஒரு வலிமையான தடைநிலையாக உள்ளது. இந்த 155 எல்லையை உடைக்காவிட்டால், பின் மெள்ள இறங்குமுகமாக மாறலாம். இறங்கினால் ரூ.167, 180 என்ற எல்லைகளை நோக்கி நகர்த்தலாம்.

ஜிங்க்:

பொதுவாக, ஜிங்க், லெட் இரண்டும் இரட்டையர்கள் போல் ஒன்றாக செல்வது வழக்கம். ஆனால், தற்போது இதிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜிங்கானது, லெட்டை விட வலிமையாக ஏறி, ஒருபடி அதிகமாக ஏறியுள்ளது. சென்ற நவம்பரில் 97.90 என்ற எல்லையை தொட்டபிறகு படிப்படியாக ஏறி, தற்போது 179 என்ற அதிகபட்ச எல்லையைத் தொட்டுள்ளது. தற்போது 180 என்ற எல்லையில் தடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையைத் தாண்டினால் 200 - 205 வரைகூட ஏறுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது மிக முக்கிய ஆதரவு 150 ஆகும்.

காப்பர்:தடை நிலையை உடைக்குமா?

காப்பர் மற்ற எல்லா அடிப்படை உலோகங்ளைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான நகர்வில் உள்ளது. சென்ற வருடம் நவம்பரில் குறைந்தபட்சமாக 293.50 தொட்டபிறகு, இந்த வருடம் 2016 அக்டோபர் வரை கீழே சுமார் 300 மேலே 343 என்ற எல்லைகளுக்கு இடையே சுற்றி வந்தது. ஆனால், 2016, நவம்பர் மாதம் 343-ஐ உடைத்து, ஒரே மாதத்தில் 405 என்ற எல்லையைத் தொட்டுள்ளது. இனி 420 என்பது மிக மிக முக்கியதடைநிலை ஆகும். இந்த தடையை உடைத்து ஏறினால், இனி இறங்கும் என்று சொன்ன அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களின் கருத்துக்களும் பொய்த்து போகும். முக்கிய ஆதரவு நிலை 360. இது உடைக்கப்பட்டால், ஏற்றம் முடிவுக்கு வந்து இறக்கம் தொடரலாம்.