Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவன தலைவர், தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


“தங்கம், வாரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் தங்கம் பெரும் சரிவை சந்தித்து குறைந்தபட்ச புள்ளியாக 27,950 என்ற அளவைத் தொட்டது. இது பெரும் வீழ்ச்சி ஆகும். இந்தக் குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டபிறகு மீண்டது. ஆனால், அடுத்தடுத்து நடந்த உலக நிகழ்வுகள் பங்குச் சந்தைக்கு சாதகமாக மாறியது. முதலில் அமெரிக்கச் சந்தை வலுவாக மாறிக்கொண்டே இருந்தது. அமெரிக்காவின்  பொருளாதார  புள்ளிவிவரங்கள், பங்குச் சந்தைக்கு சாதகமாகவே மாறி வந்தது. அமெரிக்க பங்குச் சந்தை வலுவாக மாறியதோடு மட்டும் அல்லாமல், டாலர் இண்டெக்ஸும் உறுதியாக இருந்து வருகிறது.  

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பியா வின் பொருளாதாரமும் சற்றே வலிமையாக மாறிவருவது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் வரை மாதம் 80 பில்லியன் யூரோவையும், அதன்பின் மாதம் 60 பில்லியன் யூரோவையும், சந்தையில் புழக்கத்தில் விடவிருக்கிறது. எனவே, நிதி நிறுவனங் களின் பணமும், கவனமும் தங்கத்தைவிட்டு நகர்ந்து பங்குச் சந்தைக்கும், டாலருக்கும் மாறிவருகிறது.

தங்கமானது, 28,100 என்ற ஆதரவை உடைத்து இறங்கியது, தங்கத்தை இன்னும் வலிமை குன்ற வைப்பதற்கான அறிகுறியாகவே காணப்படுகிறது. தங்கம் சமீபத்திய உச்சமான 31,000 என்ற நிலையைத் தொட்டபிறகு 28,000 என்ற எல்லை வரை இறங்கி உள்ளது. இந்த இறக்கம் இன்னும் வலிமையாகவே வாய்ப்புள்ளது. இந்த இறக்கம் 26,700 என்ற எல்லை வரைகூட இறங்கலாம். ஆனாலும், ஒரு புல்பேக் வந்தால், 29,000 வரை ஏற வாய்ப்புள்ளது. எனவே, பொஷிசன் டிரேடர்கள், இந்த புல் முடியும் வரை காத்திருந்து ஷாட் போகலாம்.

வெள்ளி!

தங்கம் விலை கொஞ்சம் இறங்கினாலும், வெள்ளி விலை இன்னும் வலிமை காட்டியே வருகிறது. குறிப்பாக, கடந்த புதன்கிழமை தங்கம் மிகக் குறைந்த இடைவெளியில் நகர்ந்து இருந்தது. ஆனால், அதே நாளில் 41,194 என்ற எல்லையில் ஆரம்பித்து, 42,067 என்ற உச்சத்தைத் தொட்டது. அதாவது, 44,800 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு இறங்கி, 44,000 என்ற எல்லைக்கு இறங்கியது. அதன் பிறகு, தொடர்ந்து பத்து நாட்களாக 44,000 என்ற ஆதரவைத் தக்கவைத்து, மெள்ளமெள்ள இறங்க ஆரம்பித்தது. தற்போது உடனடி ஆதரவு 41,000 ஆகும். கீழே 41,000 என்பதையும் மேலே 42,000 என்ற தடைநிலையையும் கொண்டுள்ளது.  எந்த திசையில் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் அடுத்த கட்ட நகர்வு வலிமையாக இருக்கலாம்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

ஒபெக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க திட்டமிட்டு வருகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பாக, ஒபெக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளுடன் ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வியன்னாவில் கலந்து ஆலோசிக்க முடிவெடுத்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது. கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில் இதன் கையிருப்பு, மைனஸ் 2.4 மில்லியன் பேரல் என வெகுவாகக் குறைவடைந்து காணப்பட்டது. இது முந்தைய வாரத்தில் மைனஸ் 0.9 மில்லியனாக இருந்தது. இதன் காரணத்தினாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இயற்கை எரிவாயு!

கடந்த டிசம்பர் 2014-க்கு பிறகு எம்சிஎக்ஸ் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 253.20- ஆக அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்கா முழுவதும், வரும் நாட்களில் சராசரி வெப்ப நிலையைவிட குறைவான வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தினால் இயற்கை எரிவாயு விலை உயர்வுடன் உள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த வாரம் இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டாவில் இதன் கையிருப்பு மைனஸ் 42 மில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் மைனஸ் 50 பில்லியனாக இருந்தது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2gifxrb

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism