இந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவன தலைவர், தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

‘‘தங்கம் ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. 8.7.2016 அன்று 32,350 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் 30,500 என்ற எல்லையில் தடுக்கப் பட்டு, செப்டம்பர் 2016 வரை தாக்குப் பிடித்தது. அதன்பின் 30,500 என்ற ஆதரவு உடைக்கப்பட்ட வுடன் இறக்கம் வலுவாக இருந்து வந்தது. இந்த இறக்கமானது ஏப்ரல் 2016-ன் ஆதரவான 28,050 என்ற எல்லையில் ஆதரவு எடுக்க வாய்ப்பிருந்தது. ஆனால், கடந்த வாரம் இந்த முக்கிய ஆதரவு உடைக்கப்பட்டு, அடுத்த கட்ட இறக்கத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்த இறக்கமானது வலுவான இறக்கமாக மாறி, 27,050 என்ற எல்லையை நோக்கி இறங்கியுள்ளது.

தற்போது 27,050 என்பது மிகவும் முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது. இந்த ஆதரவை இப்போது சந்தை சோதனை செய்து வருகிறது. இந்த ஆதரவு எல்லையில் தாக்குப் பிடித்தால், மேலே ஒரு புல்பேக் ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலி 28,050 என்ற எல்லையை நோக்கி நகரலாம். இந்த எல்லை மிக வலிமையான தடைநிலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏனெனில், இந்த 28,050 என்ற எல்லை, கடந்த ஏப்ரல் 2016 மாதத்தில் இருந்து முக்கிய ஆதரவாக இருந்து வந்தது. இந்த நீண்ட கால ஆதரவு இப்போது நீண்ட தடைநிலையாக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்த 28,050 என்ற தடைநிலையை உடைத்து மேலே ஏறினால், இதுவரை இறங்குமுக மாக இருந்த தங்கம், ஒரு புதிய ஏற்றத்துக்குத் தயாராகலாம்.

ஆனால், அந்த ஏற்றம் நிகழவில்லை என்றாலும், கீழே தற்போது முக்கியமான ஆதரவான 27,050 உடைக்கப்பட்டாலும், மிக வலிமையான இறக்கம் வர வாய்ப்புள்ளது. அப்படி ஒரு இறக்கம் வந்தால், அடுத்த கட்டமாக 25,800 என்ற எல்லையில் முதல் கட்டமாக இறங்கலாம். அதற்கு அடுத்த இறக்கம், இதை 24,700 என்ற எல்லையை நோக்கி நகர்த்தலாம்.

பொதுவாக, தங்கம் ஒவ்வொரு ஆதரவை உடைத்து இறங்கும்போதும் குறைந்தபட்சம் 1,000 புள்ளிகள் இறங்குகிறது. வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகளாகவும், முதலீட்டாளர்களுக்குச் சோதனையான நாட்களுமாக தற்போது உள்ளது.

வெள்ளி!

சென்ற வாரம் தங்கம் இறங்குமுகமாக இருந்த போது, வெள்ளி ஏறுமுகமாக இருந்தது. இதை நாம் ஒரு டைவர்ஜென்ஸ் என்று சொன்னோம். வெள்ளியின் இந்த மாறுபட்ட நகர்வு தொடர்ந்து கொண்டு இருந்தாலும், அது தற்போது ஒரு முடிவுக்கு வந்ததுபோல்தான் உள்ளது. தங்கம் இறங்கியபோது முந்தைய வாரம்வரை ஏறுமுகமாக இருந்த வெள்ளி, சென்ற வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் மிகக் கடுமையான இறக்கத்தைச் சந்தித்தது. முந்தைய வாரத்தின் ஏற்றம் என்பது 42,200 என்ற தடைநிலையைத் தொட்ட பிறகு, ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. அதாவது, கீழே 41,000 என்ற ஆதரவை எடுத்து மேலே நகர்ந்தது.

ஆனாலும், 42,200 என்ற எல்லையில் தொடர்ந்து தடுக்கப்பட்டு வந்தது. இந்தப் பக்கவாட்டு நகர்வு வியாழக்கிழமை ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, முக்கிய ஆதரவான 41,000 என்ற எல்லை உடைக்கப்பட்டு இறங்கியது. இந்த இறக்கமானது ஒரே நாளில் 39,241 என்ற குறைந்த பட்ச புள்ளிகளைத் தொட்டது. இந்தக் கடுமையான இறக்கமானது, தற்போது ஓர் இறக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த 39,200 என்பது ஓர் இறக்கமாக உள்ளது. இந்த இறக்கம் சற்றே வலிமையாக மாறி, தற்போது ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது. இந்த புல்பேக் ரேலியானது மேலே 40,500 என்ற 50% ஃபிபனாசி எல்லையில் தடுக்கப்படலாம். தற்போது கீழே 39,200 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 40,500 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.”

கச்சா எண்ணெய்!

இந்த ஆண்டில் முதல் முறையாக அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தினை அதிகரித்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து, பிற்பாடு ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கியது. கச்சா எண்ணெய் கையிருப்பு, கடந்த வாரம் -1.4 மில்லியன் பேரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மிஞ்சி -2.6 மில்லியன் பேரலாகக் குறைந்துள்ளது. ‘ஒபெக்’ கூட்டமைப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் விளைவாக, ஜனவரியில் கச்சா எண்ணெய் விலை 60 டாலர் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இயற்கை எரிவாயு!

கடந்த வாரம் இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு -147 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் -42 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. கடந்த வாரம் இயற்கை எரிவாயு கையிருப்பு -126 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பையும் மீறி கையிருப்பு வெகு வாகக் குறைந்து காணப்பட்டது. டிசம்பர் மாதம் முழுவதும் சராசரி வெப்ப நிலையைவிட, குளிர்ந்த வெப்ப நிலையே நிலவும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இயற்கை எரிவாயு தேவை இந்த வாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரியில் தேவை அதிகரித்துக் காணப்பட்டது.

மஞ்சள்!

சமீபத்திய மாதங்களில் மஞ்சள் ஏற்றுமதி தேவை குறையும் என்ற கணிப்பும், வரும் அறுவடை பருவத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் மஞ்சள் விலையை நிர்ணயிக்கும் காரணிகளாக இப்போது உள்ளன.

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், மஞ்சளின் விலை குறைந்து வர்த்தக மாகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில், மஞ்சள் விளையும் பகுதிகளில், பெய்யும் கனமழை காரணமாக பயிர்கள் பாதிப்படையலாம். இப்போது மஞ்சள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து வரும் நடுத்தர மற்றும் தரமற்ற மஞ்சளினால் வருகையால் இதன் விலை குறைந்துள்ளது.

சோயாபீன்!

நம் நாட்டில் நடப்புப் பருவத்தில் 11 மில்லியன் டன் சோயாபீன் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன் விலை, உள்ளூர் சந்தையில் விநியோகம் அதிகரித்துக் காணப்படுவதால், குறைந்துள்ளது. என்சிடிஇஎக்ஸ்-ல் அங்கீகரிக்கப் பட்ட கிடங்கில் சோயாபீன் கையிருப்பு 851 டன் உயர்ந்து, 1,20,207 டன்னாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் மழை குறித்த கணிப்புகளால் சோயாபீன் விலை குறைந்து காணப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!