Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவன தலைவர், தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

“உலக சந்தையில் தங்கம் வலிமை குன்றிக் காணப்படுகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைய ஒரு காரணம், சீனா தொடர்ந்து உலகச் சந்தையில் தங்கத்தை விற்று வருகிறது.  சீனாவின் தங்க விற்பனை அதிக அளவில் இருந்ததால், தங்கத்தின் விலை வீழ்ச்சி அதிகமானது. மேலும், டாலர் இண்டெக்ஸ் வலிமையாக இருப்பதும் தங்கத்தின் தேவையைக் குறைத்தது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தற்போது அமெரிக்கப் பொருளாதாரம் வலிமையாக மாறி வருவதும், அங்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதும், தங்கம் விலை குறையக் காரணமாக உள்ளது. இந்த நிலையில், தங்கம் ரூ.26,900 என்ற குறுகிய கால ஆதரவைக் கொண்டுள் ளது. இந்த ஆதரவு எல்லை மிக மிக முக்கிய எல்லை. இந்த ஆதரவை எடுத்து தங்கம் மேலே திரும்பினால், அது புல்பேக் ரேலியாக மாறலாம். இந்த புல்பேக் ரேலி ஃபிபனாச்சி விகிதத்தில் பார்க்கும்போது, அடுத்தடுத்த தடைநிலைகள் 27,260 மற்றும் 28,420 ஆகும். மாறாக 26,900 என்ற இந்த ஆதரவு எல்லை உடைக்கப்பட்டால், தங்கத்தின் விலை இறக்கம் மிகக் கடுமையாக இருக்கலாம். இந்த இறக்கமானது, 25,800 என்ற எல்லையை நோக்கிக்கூட இறங்கலாம். எனினும், தங்கமானது தற்போது 10 மாதத்தின் குறைந்தபட்ச எல்லையில் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி!

டிசம்பர் 2016-ல் தங்கம் விலை தொடர்ந்து இறங்கிக்கொண்டு இருந்ததையும், அந்த இறக்கத்துக்கு ஈடு கொடுத்து வெள்ளியும் இறங்க ஆரம்பித்தது. அதோடு மட்டும் அல்லாது, டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு, மிக வலிமையான இறக்கத்தைச் சந்தித்தது.

வெள்ளியின் விலை நகர்வை உற்றுநோக்கும் போது, நவம்பர் 11-ம் தேதி 44,820 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் நவம்பர் 25-ம் தேதி, குறைந்தபட்ச புள்ளியாக 39,870 என்ற எல்லையைத் தொட்ட பிறகு ஏற ஆரம்பித்துள்ளது. இந்த ஏற்றத்தைத்தான் ‘புல்பேக் ரேலி’ என்கிறோம்.

இந்த ஏற்றம் டிசம்பர் 9-ம் தேதி அன்று 42,067 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டு பின் வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கத்தின் முக்கிய ஆதரவு நிலை 38,250 ஆகும். இந்த ஆதரவு உடைக்கப்பட்டால், வெள்ளி ஒரு பெரிய வீழ்ச்சியை அடைய வாய்ப்புள்ளது.

வெள்ளி படிப்படியாக இறங்கிவரும்  வேளையில், தற்போதைய முக்கிய ஆதரவான 38,250-ல் இருந்து மேல் திரும்பி ஒரு ‘புல்பேக் ரேலி’யாகக்கூட மாறலாம். இந்த ரேலி, மேலே ஏறும்போது 40,600 என்ற உடனடி தடைநிலையில் தடுக்கப்பட்டு இறங்கலாம்.

ஒருவேளை 40,600 என்ற தடைநிலை உடைக்கப்பட்டுத் தொடர்ந்து ஏறினால், முந்தைய உச்சமான 42,067 என்ற எல்லையை நோக்கிக்கூட நகரலாம். இனி 38,250 என்ற எல்லை தக்க வைக்கப்படுமா அல்லது உடைக்குமா என்று பார்க்கவேண்டும்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி குறித்த டேட்டா மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், இதன் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் நிலையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தினால் எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.

ஒபெக் மற்றும் ஒபெக் கூட்டமைப்பு இல்லாத நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்வந்துள்ள போதிலும், இதன் விநியோகம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்த மூன்று மாதங்களில் லிபியாவில் இருந்து கச்சா எண்ணெய் 2.7 மில்லியன் பேரல் தினமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

மாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2insstj

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism