Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவன தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz



தங்கம்!

கடந்த இரண்டு வாரங்களில் தங்கத்தின் விலை நகர்வு, மிகவும் வலிமையாக இருந்தது. டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், வார வரைபடத்தை ஆராய்ந்தால், தங்கம் ஒரு ‘புல்லிஷ் என்கல்ஃபிங்’ பேட்டனை உருவாக்கி உள்ளதைக் காணலாம். ஒரு இறக்கத்தின் முடிவில், கடைசியாகத் தோன்றிய பியரிஷ் கேன்டிலை அடுத்து, ஒரு கேப் டவுனுடன் தோன்றிய விலை, மளமளவென மேலே ஏறி, முந்தைய பியரிஷ் கேன்டிலின் முழு உருவத்தையும் தாண்டி முடிவதே ‘புல்லிஷ் என்கல்ஃபிங்’ ஆகும்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தங்கத்தின் விலையானது குறைந்தபட்ச புள்ளியாக 27,670 என்ற புள்ளியைத் தொட்டு மிகப் பெரிய ஏற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த ஏற்றமானது, கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் படிப்படியாக ஏறி, அதிகபட்சமாக 28,925 என்ற புள்ளியைத் தொட்டது. இது ஒரு மிகப் பெரிய ஏற்றம் ஆகும்.ஆனால், இதுவரை வலிமையாக ஏற்றிய காளைகள் அந்த ஏற்றத்தைத் தக்கவைக்க முடியாத அளவுக்குச் சிரமப்படுகின்றன. இந்தச் சூழலில், இனி என்ன நடக்கலாம்?

தினசரி வரைபடத்தை ஆராயும்போது, தங்கம் 28,150 என்ற வலுவான தடைநிலையை உடைத்து ஏறினாலும், தொடர்ந்து ஏற முடியாமல் இறங்கி, முந்தைய தடைநிலையான 28,150-ஐ ஆதரவு எடுத்திருக்க வேண்டும். ஆனால், தங்கம் அந்த ஆதரவை உடைத்து இறங்க ஆரம்பித்துள்ளது. எனவே, இந்த 28,150 என்ற எல்லை மீண்டும் ஒரு வலிமையான தடைநிலையாக மாற வாய்ப்புண்டு. அடுத்த முக்கிய ஆதரவு நிலை 27,800 ஆகும். இது உடைக்கப்பட்டால் தங்கம் வலிமையாக இறங்கும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி!

கடந்த இரண்டு வாரங்களாக 38,300 என்ற ஆதரவு நிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. வார வரைபடத்தில் முந்தைய வாரம் பெரிய இறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, ஒரு ஸ்பின்னிங் டாப்பைத் தோற்றுவித்தது. மிகப் பெரிய இறக்கத்தைத் தடுத்து நிறுத்தியபின், அடுத்த கேண்டில் ஒரு பெரிய ‘புல் கேன்டிலாக’ மாறியது. இந்த ஏற்றமானது அதிகபட்ச புள்ளியாக 40,697 என்ற எல்லையைத் தொட காரணமாக இருந்தது.

வெள்ளி வலிமையாக ஏறி உள்ள நிலையில், மேலே 42,000 என்ற எல்லை வலிமையான தடை நிலை ஆகும். அதைத் தாண்டினால் பெரிய ஏற்றம் வர வாய்ப்புண்டு. கீழே 39,400 என்ற உடனடி ஆதரவு உடைக்கப்பட்டால், 38,300 என்ற ஆதரவை நோக்கி நகரலாம். இந்த முக்கியமான ஆதரவான 38,300 உடைக்கப்பட்டால், இறக்கம் கடுமையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், கையிருப்பு - 1.8 மில்லியன் பேரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மிஞ்சி கையிருப்பு - 7.1 மில்லியன் பேரலாக அதிகரித்துக் காணப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் விற்பனை 7% வரை குறைப்பது குறித்து சவுதி அரேபியா தனது வாடிக்கையாளர்களிடம் பேசி வருகிறது. சவுதி அரேபியா தினமும் 4,86,000 பேரல் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்வந்துள்ளது. இந்தக் காரணத்தினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இயற்கை எரிவாயு!


கடந்த வாரம் இயற்கை எரிவாயு கையிருப்பு -97 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு -49 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் -237 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டா, எதிர்பார்ப்பையும் மீறி கையிருப்பு அதிகரித்துக் காணப்பட்டதால், இதன் விலை குறைந்து காணப்பட்டது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2iQgTyJ