Published:Updated:

கமாடிட்டி டிரேடிங் !

கமாடிட்டி டிரேடிங் !
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங் !

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங் !

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங் !
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங் !
கமாடிட்டி டிரேடிங் !

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர்  தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!


“வாரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, தங்கம் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வலிமையான ஏற்றத்தில் உள்ளது. இந்த மூன்று வார நகர்வின் ஆரம்பமானது 27,101 என்ற எல்லை ஆகும். இந்த மூன்று வாரத்தில் 30 டிசம்பர் 2016-ல் முடிந்த வாரத்தில், இறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தங்கம் மேல்நோக்கித் திரும்பியது. இந்த வாரத்தின் உச்சமாக 27,889 என்ற எல்லையைத் தொட்டு, தங்கத்தின் விலை இன்னும் உயர்வதற்கான அறிகுறியாக அமைந்தது.  
அடுத்து, 6 ஜனவரி 2017-ல் முடிந்த வாரத்தில், காளைகள் ஒரு வலிமையான ஏற்றத்தை நிகழ்த்தி, முக்கியத் தடைநிலையான 28,500 என்ற எல்லையை உடைத்து மேலே கொண்டு சென்றன.  ஆனால், அவற்றால், 28,500 என்ற எல்லைக்கு மேல் தக்கவைக்க முடியவில்லை. மாறாக, 27,960 என்ற எல்லைக்கு இறங்கி முடிந்தது.

கமாடிட்டி டிரேடிங் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கடந்த வாரம், காளைகள் மீண்டும் தங்கத்தின் விலையை உயர்த்தின. தொடர்ந்து உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இனி, முன்பு தடைநிலையாக இருந்த 28,500 என்ற எல்லைதான் மீண்டும் தடைநிலையாக மாறி உள்ளது. எனவே, காளைகள் இந்த முறை 28,500 என்ற வலிமையான தடைநிலையை உடைத்து ஏறினால், அடுத்தகட்ட ஏற்றம் என்பது மிகவும் பலமானதாக இருக்கலாம். இந்த ஏற்றத்தின் அடுத்த கட்ட எல்லைகளாக 29,200 இருக்கலாம். ஒருவேளை தொடர்ந்து ஏறினால், 29,730 என்ற எல்லையை அடையலாம். தற்போதைய முக்கிய ஆதரவாக இருப்பது 27,800 ஆகும். இதை உடைத்து தங்கம் இறங்கினால், இனி பெரிய இறக்கத்தின் துவக்கமாக இருக்கலாம்.

வெள்ளி!

கடந்த 2016 டிசம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், தங்கம் மிக வலிமையான ஏற்றத்தைக் கொடுத்தது.  ஆனால், அந்த வாரத்தில் வெள்ளியின் விலை பெரிய அளவில் ஏறவில்லை. கடந்த ஜனவரி 6-ம் தேதியுடன் முடிந்த புத்தாண்டின் முதல் வாரத்தில் நல்ல வலிமை காட்டி, தங்கத்துக்கு இணையாக ஏறி நின்றது. இந்த வாரத்தில் 40,697 என்ற புள்ளியைத் தொட்டு, பெரிய திசை திருப்பத்தைக் கொடுத்தது. முந்தைய வாரத்தில் இருந்து இந்த ஏற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஏற்றத்தின் அடுத்த தடைநிலை என்பது 42,100 என்ற எல்லையில் உள்ளது. இந்த எல்லை மிக வலிமையான தடைநிலை ஆகும். இந்த எல்லையை உடைக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, காளைகள் 42,100 என்ற எல்லையில் அதிக வால்யூமுடன் உடைத்தால், அடுத்த மிகப் பெரிய ஏற்றம் நிகழலாம். இல்லையெனில், 42,100-ஐ தொட்டு இறங்கி, கீழே 40,000 என்ற எல்லை வரை இறங்கலாம். இந்த இறக்கத்தில் 40,000-த்தை ஆதரவாக எடுத்து,  இரண்டாம் கட்ட முயற்சியாக ஏற ஆரம்பித்தால், இது ஒரு வலுவான ஏற்றமாக அமையலாம். இந்த ஏற்றத்தில் 42,100 உடைக்கப் படலாம்.

அடுத்து, 43,500 மற்றும் 45,000 என்ற வலிமையான எல்லைகளைத் தொடலாம். கீழே 40,000 என்ற முக்கிய எல்லை உடைக்கப்பட்டு இறங்கினால், பின்னர் ஆதரவான 38,300 என்ற எல்லையை நோக்கி நகரலாம். இந்த எல்லை உடைக்கப்பட்டால் பெரிய வீழ்ச்சி காத்திருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங் !

கச்சா எண்ணெய்!

கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி, ஒபெக் நாடுகள், ஜனவரியில் இருந்து உற்பத்தியைக் குறைக்கப்போவதாக அறிவித்து இருந்தன.   இந்த அறிவிப்பினால்  நீண்ட கால தடைநிலையான 3450-ஐ உடைத்து கச்சா எண்ணெய் ஏறியது. அதன்பின் படிப்படியாக ஏறி, 3,779 என்ற உச்சத்தைத் தொட்டது. ஜனவரி மாதமும் வந்தது. ஒபெக் நாடுகள் சொல்லியபடி, சவூதி அரேபியா 4,86,000 பேரல்கள் அளவுக்கு உற்பத்தியைக் குறைத்துள்ளது.

ஆனாலும், அமெரிக்காவின் அதிகப்படியான கச்சா எண்ணெய் கையிருப்பு, விலையைக் குறைக்கக் காரணமாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் 3,450 என்ற தடை நிலையைத் தாண்டி ஏறியபிறகு, அதுவே தற்போது ஆதரவாக அமைந்துள்ளது. ஒருவேளை 3,450 உடைக்கப்பட்டால், மீண்டும் கச்சா எண்ணெய் ஒரு நீண்ட கால பெரிய இறக்கத்துக்குத் தயாராகலாம். தற்போது 3,450 என்பதை ஆதரவாகவும், மேலே 3,600 என்பதைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங் !

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயு என்பது, கவனமாகக் கையாள வேண்டிய ஒரு கமாடிட்டி. கடந்த 9 ஜனவரி வரை தொடர் இறக்கம்தான். இந்த இறக்கத்தில் குறைந்தபட்சப் புள்ளியாக 212.10 என்ற எல்லையைத் தொட்டது. அதன்பின் கீழே 212-ஐ ஆதரவாகவும், மேலே 230-ஐ தடைநிலையாகவும் கொண்டு இயங்க ஆரம்பித்தது. இனி 230-ஐ உடைத்தால், ஒரு பலமான ஏற்றம் காத்திருக்கிறது. இந்த ஏற்றம் அடுத்த எல்லைகளாக 238 மற்றும் 245-ஐ தொடலாம். கீழே 212-ஐ உடைத்தால், மிகப் பெரிய சரிவுக் காத்திருக்கிறது.

சோயாபீன்!  

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் சோயாபீன் விலை சரிவடைந்து காணப்பட்டதாலும், முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததாலும், இதன் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. தென் அமெரிக்காவில் வானிலை மேம்பட்டு வருவதால், அமெரிக்காவில் சோயாபீன் தேவை குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகளவில் சோயாபீன் உற்பத்தி செய்யப்படும் இந்தூர் சந்தையில் 100 கிலோ சோயாபீன் 3,027 ரூபாயாக உள்ளது.

கமாடிட்டி டிரேடிங் !

மஞ்சள்! 

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் விலை நெருக்கடியில் வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில், உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் மஞ்சள் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் இதன் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், தென் இந்திய சந்தையில் அடுத்த பயிர் பருவத்தில் விளைந்த மஞ்சள்கள் நுழைந்துள்ளன. இதனால் இதன் விலையேற்றம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மஞ்சள் உற்பத்தியில் முக்கிய சந்தையான, நிஜாமாபாத் சந்தையில் 100 கிலோ மஞ்சள் 7,312.5 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.     
              
சீரகம்!  

உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் சீரகத்தின் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக இதன் விலை உயர்ந்து வருகிறது. எனினும், நல்ல காலநிலை மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் சீரகத்தின் விலை ஒரளவுக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. குஜராத்தில் உள்ள உஞ்சாவில்  100 கிலோ சீரகம் 18,319.25-க்கு  வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism