Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவன தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்!

 தற்போது தங்கம் இரண்டு முக்கிய எல்லைகளுக்குள் நகர்ந்துகொண்டு இருக்கிறது.  எனவே, தங்கத்தில் வியாபாரம் செய்யவேண்டுமானால், ஆதரவாக உள்ள 28,500 என்ற எல்லையை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த எல்லையை உடைக்காதவரை, இதற்குக் கீழே ஸ்டாப் லாஸ் வைத்து வாங்கி விற்கலாம். அதைப் போன்று, மேலே தற்போது வலிமையான தடைநிலையாக இருப்பது 28,875 ஆகும்.

இந்த எல்லையைத் தொடும்போது இரண்டுவிதமான வியாபார வாய்ப்புகளைப் பார்க்கலாம். ஒன்று, 28,875 என்ற எல்லையை நோக்கி தங்கம் நகர்ந்து வந்து, அதை உடைக்க முடியாமல் திரும்பினால், 28,900 என்ற எல்லையை ஸ்டாப்லாஸாக வைத்து விற்று வாங்க முயற்சிக்கலாம்.

ஒருவேளை 28,900 உடைக்கப்பட்டால், தங்கம் அடுத்தகட்ட பெரிய ஏற்றத்துக்குத் தயாராகலாம். இது  மிகப் பெரிய ஏற்றமாக இருக்கலாம். அப்படி ஏறினால், முதலில் 29,250 என்ற எல்லையையும், அடுத்து 29,600 என்ற எல்லையையும் தொட வாய்ப்புள்ளது.

ஆனால், 28,500 என்ற எல்லையை உடைத்து இறங்கினால், கீழே 28,050 என்ற எல்லையை நோக்கி வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், சந்தையானது காளையின் கையில் இருந்து கரடிகள் கைக்கு மாறலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

வெள்ளி!

 நாம் ஏற்கெனவே சொன்னது போலவே, ஜனவரி     18-ம் தேதி அன்று 42,095 என்ற எல்லையைத் தொட்டுவிட்டு இறங்க ஆரம்பித்தது. இதை டிரேடர்கள் சரியாகப் பயன்படுத்தி இருக்கும்பட்சத்தில் நல்ல லாபம் பார்த்திருக்க முடியும்.

தற்போது வெள்ளியானது 42,095 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு இறங்கி, கீழே 40,851 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டுவிட்டு, திரும்ப ஏற முயற்சிக்கிறது. ஆனாலும், ஏறுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், 41,650 என்ற எல்லையைத் தாண்டினால் ஏற்றம் தொடரும். இல்லையெனில், தற்போதைய ஆதரவான 40,851-ஐ நோக்கி வந்து,  உடைக்கலாம். அப்படி உடைத்தால், இறக்கம் கடுமையாக இருக்கும் என்பதை மட்டும் மனதில் கொள்வது நல்லது.

கச்சா எண்ணெய்!

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், கையிருப்பு 0.1 மில்லியன் பேரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மிஞ்சி கையிருப்பு 2.3 மில்லியன் பேரலாக அதிகரித்துக் காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 4.1 மில்லியன் பேரலாக இருந்தது.

கச்சா எண்ணெய் கையிருப்பு அதிகரித்துக் காணப்படுவதால் இதன் விலை, இறக்கத்தில் வர்த்தகமாகலாம். எனினும் ‘ஒபெக்’ கூட்டமைப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முன்வந்துள்ளன என்பதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு!

கடந்த வாரம் இயற்கை எரிவாயுக் கையிருப்பு -235 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு - 243 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் -151 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது.

கடந்த சில வாரங்களாகவே இயற்கை எரிவாயு கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு, எதிர்பார்ப்பையும் மீறி வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

எனவே, இயற்கை எரிவாயு விலை இந்த வாரமும் இறங்குமுகத்திலேயே வர்த்தகமாகும்!

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க :
http://bit.ly/2iJiSFRbit.ly/2iJiSFR#innerlink

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு