
இந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தங்கம்!
கடந்த இரண்டு வாரங்களாக தங்கம், குறிப்பாக ஜனவரி 17-ம் தேதி அன்று 28,800 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல் கீழே இறங்கியதைப் பார்த்தோம். இதன் பின் இறங்கிக்கொண்டு இருந்த தங்கம், ஜனவரி 27-ம் தேதியன்று கீழே 28,150 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து முன்னேறியது. இந்த ஏற்றம் தொடர்ந்தபோது, மீண்டும் ஜனவரி 31-ம் தேதியன்று, ஒரு தயக்கம் காட்டி, இதுவரை தடைநிலையாக இருந்த 28,800 என்ற எல்லை தகர்த்து ஏறியப்பட்டது. காளைகள் தொடர்ந்து முன்னேறின.

காளைகள், தங்கத்தின் விலையை 28,800-க்கு மேல் வெற்றிகரமாக எடுத்துச் சென்றன. தொடர்ந்த எடுத்துச் செல்லும்போது, 29500 என்ற எல்லையில் கரடிகளால் தடுக்கப்பட்டன. காளை களால் 29,500-ஐ தாண்ட முடியாத நிலையில், இப்படி இறங்கும்போது, முன்பு காளைகள் உடைத்த தடைநிலையான 28,800 என்ற எல்லை, ஆதரவு எல்லையாக மாறியது. பிப்ரவரி 8-ம் தேதி அன்று மேலே 29,500 என்ற எல்லையை உடைக்க முயன்றபோது, மீண்டும் கரடிகள் தங்கள் பலத்தைக் காட்டி விலையை கீழே இறக்க ஆரம்பித்தன. பிப்ரவரி 10 (வெள்ளி) அன்று காளைகள் இந்த 28,800 என்ற என்ற ஆதரவு எல்லையை உடைக்கவிடாமல் முயற்சி செய்து கொண்டு இருந்தன. அது உடைக்கப் பட்டால், தங்கம் வேகமாக இறங்கலாம். 28,200 என்ற ஆதரவை நோக்கி நகர்த்தப்படலாம். அதுவும் உடைக்கப்பட்டால் தங்கம் பெரும் வீழ்ச்சியை அடையும். அதேபோல், மேலே கரடிகள் 29,500 என்ற தடைநிலையைத் தாண்ட விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். காளைகள் 29,500-ஐ உடைத்தால் பெரும் ஏற்றமாக 29,900, 30,300 என்ற எல்லைகளை நோக்கி நகர்த்தலாம்.

வெள்ளி!
வெள்ளி, தங்கத்தைப் போலவே நகர்ந்து வருகிறது. இருந்தாலும் அதில் ஒரு மெத்தனம் உள்ளது. ஜனவரி 17-ம் தேதி தங்கம் ஏற்றத்துக்கான முயற்சியில் களைகள் ஈடுபட்டன. பிப்ரவரி 1-ம் தேதி 42,100-ஐ தாண்டி 42,500 வரை ஏற முயன்று, மீண்டும் 42,100 என்ற எல்லைக்குக் கீழே முடிந்தது. தங்கத்தில் காளைகள் காட்டிய பலத்தை வெள்ளியில் காளைகளால் காட்டமுடியவில்லை. பிப்ரவரி 6-ம் தேதியன்று காளைகள், வெள்ளியின் விலையை 42,500 என்ற தடையைத் தாண்டி ஏற்றின. ஆனால் அவைகளால், தங்கத்தின் அளவுக்கு வெள்ளியைப் பலமாக ஏற்ற முடியவில்லை. வெள்ளியின் ஏற்றம் 42,600 என்ற எல்லைக்கு அருகில் தடுக்கப்பட்டது. இது இப்போது வலிமையான தடைநிலையாக உள்ளது. தற்போது இறங்கி வரும் வெள்ளி, முந்தைய ஆதரவான 42,100-ஐ சற்றே உடைத்து, அதன் அருகில் 41,700 என்ற ஆதரவை எடுத்துள்ளது. அதாவது, தங்கத்தில் காளைகள் காட்டிய வலிமையை, வெள்ளியில் இதுவரை இவை காட்டவில்லை. எனவே தற்போது 41,700 என்ற ஆதரவு உடைக்கப்பட்டால் 41,400 என்று முதல்கட்டமாகவும் அடுத்து ஆயிரம் புள்ளிகள் இறங்கி 40,400 என்ற அளவுக்கும் இறங்கலாம். மேலே 42,600 தாண்டினால், வலிமையான ஏற்றம் வரலாம்.

கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெய் விலைக்கு ஆதரவளிக்கும் வகையில், ஓபெக் மற்றும் ரஷ்யா போன்ற அதிக கச்சா எண்ணெய் உற்பத்தி மேகொள்ளும் 11 நாடுகள், கடந்த ஆண்டு முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதே சமயம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2016-ல் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேரல்களாக இருந்தது. இது 2018-ல் ஐந்து லட்சம் பேரல்களாக இருக்கும் என்று இஐஏ கணித்துள்ளது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், கையிருப்பு 2.7 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பைவிட மிக அதிகமாக கையிருப்பு, 13.8 மில்லியன் பேரல்களாக அதிகரித்துக் காணப்பட்டது.

இயற்கை எரிவாயு!
கடந்த சில வாரங்களாகவே இயற்கை எரிவாயு விலை, ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம், இயற்கை எரிவாயுக் கையிருப்பு 155 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு 152 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 87 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது.
கமாடிட்டியில் சந்தேகமா?
கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!
அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2kcdPtv