Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம் (மினி)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


 
“டெக்னிக்கலாகப் பார்த்தால், தங்கம் ஜனவரி முதல் இன்று வரை, மேல் எல்லையான 29,500-ஐத் தாண்ட முடியாமல் தடுக்கப்பட்டு வந்தாலும், கீழ் எல்லையில் தொடர்ந்து மாற்றங் கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜனவரி 27-ம் தேதி முடிவில் 28,170 என்ற எல்லை ஆதரவாக இருந்தது. அதன்பின் அதன் ஆதரவு எல்லைகள் படிப்படியாக ஏற ஆரம்பித்தன. ஜனவரி முடிவில் அந்த எல்லை 28,700 என்று உயர்ந்து, பிப்ரவரி 21 அன்று 29,088 என்று பலமாக உயர்ந்தது. எனவே, அடுத்தடுத்து ஆதரவு எல்லைகள் உயர்ந்துகொண்டு இருந்தாலும், தடைநிலையானது தொடர்ந்து 29,500 என்ற நிலையில் வலுவாக இருந்துவருகிறது.

இந்த மாதிரியான நகர்வைத்தான் நாம் ‘உயரும் முக்கோணம்’ என்று அழைப்போம். இதில் மேல் எல்லையான 29,500 உடைக்கப்பட்டால், மிகப் பெரிய ஏற்றம் நிகழலாம். இதன்படி, மேல் எல்லை உடைக்கப்பட்டால், இதன் அடுத்த இலக்கு 30,100ஆக இருக்கலாம். ஆக, தங்கம் 29,500-ஐ உடைத்து ஏறும் போது, 29,300-ஐ ஸ்டாப் லாஸாக வைத்துக்கொள்ளலாம். நஷ்டத் தடையாக (stop loss) வைத்துக்கூட வாங்கலாம். அதிமுக்கிய ஆதரவு 29,100 ஆகும். இது உடைக்கப் பட்டால், தங்கம் விலை சரியலாம்.

வெள்ளி (மினி)

கடந்த ஒரு வாரத்தில், வெள்ளி ஒரு நெருக்கமான பக்கவாட்டு நகர்வில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த நெருக்கமான நகர்வின், கீழ் எல்லை என்பது 43,000 ஆகவும், மேல் எல்லை 43,650 ஆகவும் உள்ளது. இனி, தங்கம் மேலே வலிமையாக ஏற ஆரம்பித்தால், வெள்ளியும் ஏற ஆரம்பிக்கலாம். அப்போது மேலே உள்ள தடை நிலையான 43,650 உடைக்கப்படலாம். இதை ஒரு பிரேக்அவுட் டிரேடுக்கு ஒப்பிடலாம். இந்த பிரேக்அவுட் நடந்தவுடன், வெள்ளியானது வலிமையாக ஏற ஆரம்பிக்கலாம். இந்த ஏற்றம், அடுத்தடுத்த மிகப் பெரிய ஏற்றங்களுக்கு வழி வகுக்கலாம். இந்த ஏற்றத்தின் முக்கிய எல்லைகள் 44,400 மற்றும் 45,600 ஆகும்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த எதிர்பார்ப்பால், இதன் விலை சரிவடைந்து காணப்பட்டது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு 3.4 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பைவிட மிகக் குறைந்த அளவான 0.6 மில்லியன் பேரல்களாக சரிவடைந்து காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 9.5 மில்லியன் பேரல்களாக இருந்தது. கடந்த வாரம், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இறக்குமதி 1.5 மில்லியன் பேரல் சரிந்து, 7.398 மில்லியன் பேரல்களாக குறைவடைந்து காணப்பட்டது.

இயற்கை எரிவாயு


சமீபத்திய வாரங்களில், அமெரிக்கா முழுவதும் நிலவும் மிதமான வெப்பநிலையால், இயற்கை எரிவாயுவின் விலையில் நெருக்கடி நிலவுகிறது. இயற்கை எரிவாயுவை முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால், இதன் விலை, வீழ்ச்சியில் இருந்து மீண்டு காணப்பட்டது. கடந்த வாரம், இயற்கை எரிவாயுக் கையிருப்பு 86 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இதன் கையிருப்பு, 89 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 114 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இந்த ஆண்டு, அமெரிக்காவில் கடுமையான குளிர்காலம் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை எரிவாயுவின் தேவை, கிட்டத்தட்ட 20% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க: http://bit.ly/2l70gMp

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு