Published:Updated:

வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், wisdomwealthplanners.com

வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், wisdomwealthplanners.com

Published:Updated:
வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

ருமான வரிச் சேமிப்பு என்றவுடன் நம்மில் பலரும் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடுத் திட்டங்களையே எடுப்போம்.  இதன் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவு. இதேபோல், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் வருமானமும் சுமார் 5% மட்டுமே. 

நீண்ட கால முதலீடாக வருமான வரியைச் சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்தவையாக இருக்கின்றன. மூன்று வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். 1.பங்குச் சந்தை சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்) 2. மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டங்கள் 3. ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்.

வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!



  இஎல்எஸ்எஸ்


பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு, நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். இதில் செய்யப்படும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்குத் திரும்ப எடுக்க முடியாது. இந்த ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. மேலும், மூன்றாண்டுகள் கழித்து யூனிட்களை விற்றுக் கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. டாப் 10 ஃபண்டுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 25%-30% வரையும், கடந்த ஐந்து ஆண்டு களில் ஆண்டுக்கு சராசரியாக 18%-20% வரையும் வருமானம் தந்திருக்கின்றன. இஎல்எஸ்எஸ் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் 3 ஆண்டுகளில் 23%, 5 ஆண்டுகளில் 16%, 10 ஆண்டுகளில் 11 சதவிகிதமாக இருக்கிறது. 

வரிச் சேமிப்புக்கு கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

  மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அளித்துவரும் ரிட்டயர்மென்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில், அதிகபட்சம் ரூ.1.5 லட்சத்துக்கு வரி விலக்குப் பெறமுடியும். இந்த ஃபண்டுகளிலும் குறைந்தபட்ச லாக் இன் பீரியட் மூன்று ஆண்டுகள் ஆகும். ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் ஃபண்ட், யூடிஐ ரிட்டயர் பெனிஃபிட்  பென்ஷன் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி ரிட்டயர்மென்ட் சேவிங் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

  ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (ஆர்ஜிஇஎஸ்எஸ்), சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டு, வருமான வரிச் சலுகையும் கொடுக்கப்பட்டது. இதில், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்கள் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.50,000 முதலீடு செய்து, அதில் பாதி ரூ.25,000 வரிச் சலுகைப் பெறலாம். இப்படி வரிச்சலுகை பெற, இதுவரைக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாதவர்களாக இருக்கவேண்டும். இந்த முதலீட்டுக்கு 80 சிசிஜி பிரிவின் கீழ் தனியே வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

பங்குச் சந்தை முதலீடு அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், சில குறிப்பிட்ட பிரத்யேக மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கும் இந்த வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆர்ஜிஇஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்பவர்களுக்கு டீமேட் கணக்கு இருப்பது அவசியம்.

இந்தத் திட்டத்தை பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்துகின்றன. இந்த ஃபண்ட் பிரிவு, மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 16% வருமானம் தந்திருக்கிறது. மதிப்பீட்டு ஆண்டு 2018-19-ன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இல்லை என 2017-18-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உங்கள் முதலீட்டுக் காலம், தேவை போன்றவற்றின் அடிப்படையில் உங்களுக்கேற்ற வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.