இந்த வாரம் ஏலக்காய், மஞ்சள், மிளகு மற்றும் ரப்பர் எப்படி வர்த்தகமாகும் என்பதை செலிப்ரஸ் கேப்பிடல் லிமிடெட், தமிழ்நாடு, உதவி துணைத் தலைவர் லிஜோ ஜோசப் விளக்குகிறார்.

ஏலக்காய்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ஏலக்காய் விலை, இந்த வாரம் நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று

எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய், அதன் முக்கிய சப்போர்ட் நிலையான ரூ.1,413 என்ற விலையின் அருகில் வர்த்தகமாகி வருகிறது. தினசரி வர்த்தகத்தில் இந்த விலையின் கீழ் வர்த்தகம் நடைபெறும்பட்சத்தில், இதன் அடுத்த சப்போர்ட் நிலையான ரூ.1,315 என்ற விலையில் அடுத்த வாரத்தில் வர்த்தகமாகலாம். ஏலக்காயைப் பொறுத்தவரை ரெசிஸ்டன்ஸ் ரூ.1,530 என்ற விலையில் உள்ளது. இதைத்தாண்டி வர்த்தகம் நடைபெறும்பட்சத்தில், ஏலக்காய் விலை பாசிட்டிவாக வர்த்தகமாகலாம். ஏலக்காய்க்கான, நிலையான விலை, தேவையின்மை மற்றும் அதிகரித்துவரும் விநியோகம் காரணமாக இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இதன் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

மஞ்சள்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மஞ்சள் விலை இந்த வாரம் நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் விலையைப் பொறுத்தவரை இந்த வாரம் கிலோ ஒன்று, ரூ.7,070 முதல் ரூ.6,600 இடையே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல்படி, குறுகிய காலத்தில் மஞ்சள் விலை உச்சத்தில் வர்த்தகமாகலாம். எனினும் வாங்கும் வாய்ப்பு என்பது ரூ.7,070 க்கு மேலே மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தைகளில் மஞ்சள் விலை நிலையாக இருக்கிறது. புதிதாக வரத்துத் துவங்கி உள்ளதால், மஞ்சளின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி மஞ்சள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிளகு

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் மிளகு விலை, இந்த வாரம் நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் மிளகு, குறுகிய வரம்பில் வர்த்தகமானது. ஆனால், இந்த வாரம் மிளகு விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிளகு விலையில் சப்போர்ட், குவிண்டாலுக்கு ரூ.58,400 என்ற நிலையிலும், ரூ.58,000 என்ற நிலையிலும் காணப்படுகிறது. ரெசிஸ்டன்ஸ் ரூ.63,000 என்ற நிலையில் இருக்கிறது. பருமவமழை ஏமாற்றியதால் இந்தப் பருவத்தில், உள்ளூர் சந்தைகளில் குறைந்தளவே வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தைகளில் இருப்பு இருக்கும் சூழ்நிலையில் இதன் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரப்பர்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் ரப்பர் விலை, இந்த வாரம் நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரப்பர் விலை, கடந்த இரண்டு வாரங்களாக இறக்கத்தையே சந்தித்து வருகிறது. ரப்பர் விலை கிட்டத்தட்ட 13 சதவிகிதம் சரிவடைந்து காணப்படுகிறது.

தற்போது ரப்பர் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14,400 என்ற விலையில் சப்போர்ட் எடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து அடுத்த ரெசிஸ்டன்ஸ் நிலையான ரூ.15,400க்கு வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சப்போர்ட் உடைத்தெறிந்து வர்த்தகமாகும் பட்சத்தில், அடுத்த சப்போர்ட் நிலையான ரூ.13,800-க்கு வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!