இந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம் மினி

“தங்கம், சென்ற வாரம் 29,500 என்ற முக்கிய தடைநிலையை உடைத்து ஏறியது. இந்த ஏற்றம் 29,778

வரை சென்று பின், தொடர்ந்து ஏற முடியாமல் இறங்க ஆரம்பித்தது. தங்கம், செவ்வாய் முதல் வலுவிழக்க ஆரம்பித்தது. கடந்த வாரம் புதனன்றும் இறங்கியது.

இந்த இறக்கம், பின்பு வியாழனன்று அதிக வலுப்பெற்று 29,165 வரை இறக்கியது. இந்த இறக்கம், அடுத்த இலக்குகளாக 28,650 மற்றும் 28,400 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். இந்த பலமான இறக்கத்துக்கு, ஆதரவு என்பது 29,000 என்று பார்த்தோம். அந்த ஆதரவு எடுத்தால், மேலே 29,240 என்பது உடனடி தடைநிலை ஆகும். இந்த எல்லை உடைக்கப்பட்டால், ஒரு புல் ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலி 29,420 என்ற 50% ஃபிபனாச்சி எல்லை வரை ஏறலாம். இது வலுவான தடைநிலை ஆகும்.

வெள்ளி மினி

வெள்ளி சென்றவாரம், தங்கத்தைப் போலவே, ஒரு பிரேக் அவுட்டுக்கு தயாரானது. திங்களன்று ஏறுவதற்கு எடுத்த முயற்சி, வெற்றியடையவில்லை என்றாலும், பெரிதாகக் கீழே இறங்கவில்லை. முந்தைய வாரம் 43,650 என்ற முக்கிய தடைநிலையை உடைத்து ஏறியது. உச்சமாக 44,156 என்ற எல்லையையும் தொட்டது. ஆனால், அடுத்தடுத்த இரண்டு நாட்கள் செவ்வாய் மற்றும் புதனன்று முந்தைய ஏற்றமான 44,156 என்ற எல்லையைத் தாண்ட முடியவில்லை. ஆனாலும், முன்பு உடைத்த தடைநிலையான 43,650 என்ற எல்லை, தற்போது ஆதரவு எல்லையாக மாறியது. இதனால், வெள்ளி ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்து வந்தது. ஆனால், வியாழனன்று 43,650 என்ற ஆதரவைப் பலமாக உடைத்து, 42,510 என்ற எல்லையை நோக்கி இறங்கியது. தங்கம் படிப்படியாக இறங்க, வெள்ளி ஒரே நாளில் பெரும் இறக்கத்தைச் சந்தித்தது. இனி, 42,300 என்பது உடனடி ஆதரவு, அதை உடைத்தால், 42,000 மற்றும் 41,600 என்ற எல்லைகளைத் தொடலாம். மேலே உடனடி தடைநிலை, 42,750 மற்றும் 43,050 ஆகும்.”

கச்சா எண்ணெய்

ஒபெக் மற்றும் மற்ற நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வரும் சமயத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில் இதன் கையிருப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இந்தக் காரணத்தினால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து காணப்பட்டது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு 1.5 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப்போலவே கச்சா எண்ணெய் கையிருப்பு 1.5 மில்லியன் பேரல்களாக இருந்தது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.6 மில்லியன் பேரல்களாக இருந்தது. ரஷ்யா, பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கிட்டத்தட்ட 11.10 மில்லியன் பேரல்களாகக் குறைத்துள்ளது.

இயற்கை எரிவாயு

கடந்த வாரம், இயற்கை எரிவாயு கையிருப்பு -5 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு எதிர்பார்ப்பை மீறி 7 பில்லியன் க்யூபிக் பீட்டாக அதிகரித்துக் காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் -89 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து முதன் முறையாக, கடந்த வாரம் கையிருப்பில், இயற்கை எரிவாயு கையிருப்பு அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ததால் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துக் காணப்பட்டது. இந்த ஆண்டில் கடுமையான குளிர் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரித்து, இதன் விலையில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.