இந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம் (மினி)
“சென்ற வாரம் தங்கம், வலிமை குன்ற ஆரம்பித்தது. தற்போதைய நிலையில், 29,000 என்பது மிக முக்கிய ஆதரவாகப் பார்க்கலாம். இதுவும் உடைக்கப்பட்டால், கீழே 28,900 என்பது காளைகளின் கடைசி டார்கெட். அதன்பின் இறக்கம் இன்னும் வலுவாக மாறலாம். இந்த இறக்கம் அடுத்த இலக்குகளான 28,650 மற்றும் 28,400 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம் என்று நாம் சொன்னது நிகழ்ந்துள்ளது. தற்போது 28,400 என்பதையும் உடைப்பதற்குக் கரடிகள் இன்னும் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. எனவே, 28,400 என்ற எல்லைக்குக் கீழே கரடிகள் 28,150 வரை எடுத்துச்செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஆனால், 28,150 என்ற எல்லை, இந்த இறக்கத்தின் கடைசி எல்லையாகக்கூட இருக்கலாம். இந்த எல்லையிலிருந்து ஒரு புல்பேக் ரேலி வர வாய்ப்புள்ளது. இந்த புல்பேக் ரேலியானது மேலே ஏறினால், ஃபிபனாச்சி எண்கள் அடிப்படையில் பார்த்தால், 23.6% எல்லை என்பது 28,650 ஆகும்.
இதையும் தாண்டி ஏறும்போது அடுத்த எல்லை 38.2% என்பது 28,900 என்பதாகும். இந்த எல்லை ஒரு வலுவான தடைநிலையாகும். தற்போதைய நிலையானது, 28,150 என்பது ஒரு மையப்புள்ளியாகச் செயல்படுகிறது. இதை உடைத்து இறங்கினால், அடுத்தகட்ட பலமான இறக்கம் நிகழலாம். அதற்கு முன்பு ஒரு புல்பேக் ரேலி வரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளி (மினி)
கடந்த வாரத்தில் தங்கம் படிப்படியாக இறங்க, வெள்ளி ஒரே நாளில் பெரும் இறக்கத்தைச் சந்தித்தது. இனி, 42,300 என்பது உடனடி ஆதரவு, அதை உடைத்தால், 42,000 மற்றும் 41,600 என்ற எல்லைகளைத் தொடலாம் என நாம் சொன்னது அப்படியே நிகழ்ந்துள்ளது. கீழே 41,600 வரை இறங்கியதோடு மட்டும் அல்லாமல், இன்னும் இறங்கி 40,400 என்ற எல்லையை நோக்கி தற்போது நகர்ந்துள்ளது. பெரிய இறக்கத்துக்குப்் பிறகு, ஒரு புல்பேக் ரேலி எப்போது வேண்டு மானாலும் வரலாம்.
தற்போது 40,400 என்ற எல்லைக்கு அருகில் உள்ள வெள்ளி, தொடர்ந்து இறங்கும்போது 39,600 என்ற எல்லையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இன்னமும், கரடிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. புல்பேக் ரேலி வருமெனில், உடனடித் தடைநிலையாக 41,500 என்ற எல்லையைச் சொல்லலாம். இதற்கு மேலே 42,350 என்பது மிக வலுவான தடைநிலையாக உள்ளது. எனவே, வெள்ளியின் நகர்வு திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது.’’
கச்சா எண்ணெய்
கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு 1.1 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் கையிருப்பு 8.2 மில்லியன் பேரல்களாக மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு முந்தைய வாரத்தில் 1.5 மில்லியன் பேரல்களாக இருந்தது இது. கடந்த வாரம் வெளியான கச்சா எண்ணெய் கையிருப்பு டேட்டா இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துக் காணப்பட்டதால், இதன் விலை இந்த ஆண்டில் கடும் சரிவைச் சந்தித்தது. கடந்த 1982-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் வெளியான கச்சா எண்ணெய் கையிருப்பு டேட்டாவில், இதன் கையிருப்பு அதிகரித்துள்ளது.

இயற்கை எரிவாயு!
கடந்த வாரம், இயற்கை எரிவாயுக் கையிருப்பு -59 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு, எதிர்பார்ப்பை மீறி -68 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் 7 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது இது. அமெரிக்கா முழுவதும் அடுத்த 8 முதல் 15 நாள்கள் வரை மழை, பனி மற்றும் கடுமையான குளிர் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரணத்தினால் இயற்கை எரிவாயுவின் தேவை உயர்ந்து, இதன் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமாடிட்டியில் சந்தேகமா?
கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!
அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2mt1kOd