Published:Updated:

டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!

டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!

நாணயக்காரன்

டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!

நாணயக்காரன்

Published:Updated:
டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!
பிரீமியம் ஸ்டோரி
டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!

‘‘செபியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றி ருக்கும் அஜெய் தியாகி, பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். உதாரணமாக, பங்குச் சந்தையில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் பங்குக்கு, டிவிடெண்ட், போனஸ் பங்குகள் மற்றும் உரிமைப் பங்குகள் போன்றவை பரிவர்த்தனை செய்யும் நாளில் உண்டா, இல்லையா என்பதை தெரிந்து செயல்பட முடிவதில்லை. தரகர்களுக்கும் சில சமயங்களில் இதுகுறித்து சந்தேகம் வருகிறது. இதைத் தவிர்க்க, முடிவுத் தேதியைப் பங்கு ஒப்பந்தங்களில் ஏன் குறிப்பிட மறுக்கிறார்கள்? செபியின் புதிய தலைவர் இதனைக் கவனிக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்  நாணயம் விகடன் வாசகரான வி.கிருஷ்ணமூர்த்தி. இதற்கான விளக்கத்தைத் தந்தார் சென்னையைச் சேர்ந்த ஓரியண்டல் ஸ்டாக்ஸ் சபா அருணாசலம்.

டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!

“சந்தையில் நாம் வாங்கும் பங்குகள், அதற்கான டிவிடெண்ட் அல்லது உரிமைப் பங்குகளை விண்ணப்பிப் பதற்கான உரிமை அல்லது இலவசப் பங்குகளுடன் சேர்த்துதான் வாங்குகிறோமா, இல்லையா என்று தெரியாமல் நாம் குழம்ப வாய்ப்பிருக் கிறது. அவை பற்றிய விவரங்களைச் சரியாகத் தெரியாமல், அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு, பின்னர் நமக்கில்லை எனத் தெரிய வரும்போது வருந்த நேரிடலாம். விற்கும்போதும் இதே நிலை நமக்கு ஏற் படலாம். அதனால்தான், நிறுவனங்களும் பங்குச் சந்தைகளும் தங்களது இணையதளத்தில், இதற்கான கடைசித் தேதி என்ன என்கிற தகவலை வெளியிடும்.  பொதுவாக, ஒரு பங்கை வாங்கவோ, விற்கவோ முயலும்போது, இதுமாதிரியான தகவல்கள் ஏதும் இருக்கிறதா என்பதை அறிய, முடிந்தவரை பிஎஸ்இ அல்லது என்எஸ்இ இணயதளத்தில் ஒருமுறை பார்த்தபிறகு ஆர்டர் கொடுக்கலாம்.

இது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமா என்கிற கேள்வி எழுவது இயற்கையே. பிஎஸ்இ / என்எஸ்இ டிரேடிங் டெர்மினலில் தனியாக ஒரு இடம் (Column) கொடுத்து அதில் தெளிவாகத் தெரியும்படி செய்தால், ஒவ்வொரு வாடிக்கை யாளரும் ஆர்டர் கொடுக்கும்போது, டீலரிடம் கேட்டு அதற்குத் தகுந்தாற்போல், முடிவுசெய்து ஆர்டர் கொடுக்கலாம். பங்குச் சந்தைகள் இதற்கான ஏற்பாட்டைச் செய்யவேண்டும். ஏற்கெனவே, டிரேட் டு டிரேட் வகை பங்குகளுக்கு இந்த வகையான எச்சரிக்கை கொடுக்கும் முறையைப் பங்குச் சந்தைகள் கடைப்பிடித்து  வருகின்றன. அதைப் போலவே, இதற்கும் ஆர்டர் போடும்போதே எச்சரிக்கை கொடுக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிவிடெண்ட், போனஸ், உரிமைப் பங்குகள்... குழப்பங்களும் தீர்வுக்கான வழிகளும்!பொதுவாக, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ டெர்மினல்களில் எந்தப் பங்கை ஆர்டர் செய்கிறோமோ, அந்த டிரேடிங் சிஸ்டத்திலேயே ‘Shift F7’ என்கிற ‘கீ’யை சொடுக்கிப் பார்த்தால், அனைத்து விவரங்களும் கிடைக்கும். ஆனால், இதை ஒவ்வொரு முறையும் பார்ப்பது சிரமம். ஆகையால், மேற்சொன்ன வகையில் டச்லைனில் (Touchline) இந்த வசதியிருந்தால், டீலர்கள் வாடிக்கையாளர்களிடம் உடனே சொல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், சில முதலீட்டாளர்கள், இந்த டிவிடெண்ட் அல்லது இலவசப் பங்குகள் அல்லது உரிமைப் பங்குகள் பற்றிய தகவல், கான்ட்ராக்ட் நோட்டிலும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இது நல்ல யோசனைதான். ஆனால், விற்கும்போது, விற்றவருக்கு அது வர்த்தகம் முடிந்தபின்னர் வந்த தகவலாகவே இருக்கும். வணிக நாள் முடிந்தால், அதை மாற்றவும் முடியாது.

இந்த அறிவிப்பை (டிவிடெண்ட் அல்லது இலவசப் பங்குகள் அல்லது உரிமைப் பங்குகள் பற்றிய தகவல்) அவரவர் டீமேட் கணக்கு வைத்திருக்கும் டிபியோ அல்லது சிடிஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் போன்ற அமைப்புகளோ ஒரு எஸ்எம்எஸ் மூலம் முன்கூட்டியே அறிவித்தால், அது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

பங்கு முதலீட்டாளர்கள் பலருக்கும் உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க சபா அருணாசலம் சொல்லும் யோசனைகள் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும். எனவே, செபியானது இந்த யோசனைகளை தயவுசெய்து பரிசீலிக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism