Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

  தங்கம் 

“தற்போது 28,400 என்பதை உடைப்பதற்குக் கரடிகள் இன்னும் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கின்றன. எனவே, 28,400 என்ற எல்லைக்குக் கீழே கரடிகள் 28,150 வரை எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதைப் போலவே, தங்கம் 28,400 என்ற எல்லையை உடைத்து இறங்கி, 28,150-யும் தாண்டி 27,932 வரை சென்றது. இந்த இறக்கம் கடைசி எல்லையாக இருக்கலாம் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.

மேலும், இந்த எல்லையில் இருந்து ஒரு புல்பேக் ரேலி வர வாய்ப்புள்ளது. இந்த புல்பேக் ரேலியானது மேலே ஏறினால், ஃபிபனாச்சி எண்கள் அடிப்படையில் பார்த்தால் 23.6%, அதாவது  28,650 ஆகும் என்று எழுதி இருந்தேன்.

அதுபோலவே, தங்கம் ஒரு புல்ரேலியில்(Bull Rally) ஏறி, 28,600-க்கு அருகாமையில் வந்துநின்றது. இந்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

புல்பேக் ரேலியை கேன்டில்கள் மூலம் பார்க்கும்போது, ஒரு மார்னிங் ஸ்டார் உண்டாகி உள்ளதையும் காட்டுகிறது.

இந்த மார்னிங் ஸ்டார் என்பது, ஒரு வலிமையான ரிவர்ஷல் பேட்டர்ன் ஆகும். இந்த ரிவர்ஷல் அமைப்பு மீண்டும் உறுதி செய்யப்படவேண்டும். அதாவது, 28,600 என்ற தற்போதைய தடைநிலையை உடைத்து, வலிமையாக உயரவேண்டும்.

ஆனால், சென்ற வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று 28,600-யைத் தாண்ட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தது. இந்த எல்லையைத் தாண்ட முடியவில்லை என்றால், இந்த புல்பேக் ரேலி முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு இறக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது.

இந்த இறக்கம் கீழே 28,250 என்பதை முதல் ஆதரவாகவும், 27,900 என்பதைக் கடைசி ஆதரவாகவும் கொண்டுள்ளது. இதுவும் உடைக்கப் பட்டால், தங்கம் அடுத்த பெரிய இறக்கத்துக்குத் தயாராகலாம். மேலே 28,600 என்ற தடைநிலை உடைக்கப்பட்டு ஏறினால், 28,750 மற்றும் 28,970 என்பதும் முக்கிய எல்லைகள்.

 வெள்ளி

‘‘தற்போது 40,400 என்ற எல்லைக்கு அருகில் உள்ள வெள்ளி, தொடர்ந்து இறங்கும்போது 39,600 என்ற எல்லையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதைப்போலவே, 39,850 வரை வெள்ளி இறங்கியது. புல்பேக் ரேலி வரும் என்றால், உடனடி தடை நிலையாக 41,500 என்ற எல்லையைச் சொல்லலாம்’’ என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம்.

நாம் சொன்னது போலவே, புல்பேக் ரேலி வந்தது. ஆனால், 41,243 வரை ஏறியது. பின் தொடர்ந்து ஏறமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

தற்போது 41,250 என்பது வலிமையான தடை நிலையாகவும், கீழே 40,400 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது. இந்த ஆதரவு உடைக்கப் பட்டால், இறக்கம் இன்னும் வேகம் எடுக்கலாம்.” 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு 3.3 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் கையிருப்பு -0.2 மில்லியன் பேரல்களாக மிகவும் குறைவடைந்து காணப்பட்டது. ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வருவது, தேவைப்பட்டால் நீடிக்கப்படும் என்று சவுதி அரேபியா எரிசக்தித் துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால்  இதன் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

 இயற்கை எரிவாயு!

கடந்த வாரம், இயற்கை எரிவாயுக் கையிருப்பு -60 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு, எதிர்பார்ப்பை மீறி -53 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இதனால் இயற்கை எரிவாயுவின் விலை சரிவடைந்து காணப்பட்டது.

இயற்கை எரிவாயு கையிருப்பைப் பொறுத்த வரை, முந்தைய ஆண்டைவிட 9.5% குறைந்து காணப்படுகிறது. ஆனால், ஐந்து ஆண்டு சராசரியை வைத்துப்பார்த்தால், 21.4% அதிகரித்திருக்கிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : http://bit.ly/2mQ2ZvX

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism