Published:Updated:

ஆண்டு பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும் உங்களுக்கான மேடை!

ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டு பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும் உங்களுக்கான மேடை!

விவேக் பாய், CFA, மீரா சிவா, CFA

ஆண்டு பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும் உங்களுக்கான மேடை!

விவேக் பாய், CFA, மீரா சிவா, CFA

Published:Updated:
ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டு பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும் உங்களுக்கான மேடை!
ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!

ங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பல முதலீட்டாளர்கள், ஆண்டுதோறும் நடக்கும் பங்குதாரர்கள் பொதுக்கூட்டத்தில் (Annual General Meeting) கலந்துகொள்வதே இல்லை. பங்குச் சந்தையில் முதலீடுசெய்யும் நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இது, மிக முக்கியமான நிகழ்வாகும். காரணம், அன்றைய தினத்தில்தான்  முதலீட்டாளராகிய நாம் முதலீடு செய்திருக்கும் பங்கு நிறுவனத்தின் நிர்வாகத்தினரை நேரில் சந்திக்கவும், அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளைத் தயங்காமல் கேட்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை நாம் தவறாமல் கவனிக்கிற மாதிரி, இந்தப் பொதுக் கூட்டத்திலும் நாம் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

இப்படியொரு கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது என்பதையும், அதில் ஏன் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள். சொல்லப் போனால், இந்த நாளானது தேர்தல் நாள்போல.  இங்கு முதலீட்டாளர்களாகிய நாம்தான்  வாக்காளர்கள். ஒருநாள் மட்டுமே நடக்கும் இந்த சபையில் கூடி, நம்முடைய கேள்விகளை நிர்வாகத்தை நோக்கி முன்வைக்கத்தான் இந்த பொதுக்கூட்டம். தேர்தல் நாளன்று வாக்குரிமையைச் செலுத்த நாம் தவறுவதில்லை. அதுபோல,  இந்தக் கூட்டத்தில் நாம் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது. 

இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன், முதலீட்டாளர்களாகிய நாம் நம்முடைய  உரிமைகள் பற்றியும், இந்தக் கூட்டத் தில் எந்தெந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

  ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் அஜெண்டா 

ஒவ்வொரு பொதுக்கூட்டமும் குறிப்பிட்ட அஜெண்டாவின் அடிப்படையில்தான் ஏற்பாடு செய்யப்படும். வழக்கமாக, இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட், லாப மற்றும் நஷ்டம்  குறித்த விவரங்கள் மற்றும் கேஷ் ஃப்ளோ உள்ளிட்டவை நிதிநிலை அறிக்கையாக வெளியிடப்படும்; இது தவிர, இயக்குநர் குழுவில் நியமனங்களோ, பதவி நீட்டிப்புகளோ நடந்தால், அது குறித்தும் அறிவிப்பு வெளியாகும்; நிர்வாகத்துக்குத் தரப்படும் ஊதியத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம். நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான சில முடிவுகளும் எடுக்கப்படலாம்.
 
ஒரு முதலீட்டாளராக, நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலையும் (Agenda), 

ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிறுவனங்கள் தொடர்பான தகவல்களையும் முன்கூட்டியே நீங்கள் தெரிந்துகொண்டு செல்வது அவசியம். நீங்கள்  கேள்விகளை எழுப்ப உங்களுக்கு முழு உரிமை உண்டு. உங்களுக்குத் தரப்படும்  நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், எந்தவொரு விவரங்கள் குறித்தும் நீங்கள் கேள்வி கேட்கலாம். 

உதாரணமாக, முதலீட்டாளர்களின் லாபம்  வீழ்ச்சி அடைந்தது குறித்தும், பொருள்களின் இருப்பு (Inventory) குறித்தும் நீங்கள் கேள்வி கேட்கலாம். நிறுவனத்துக்கு வரவேண்டிய தொகை (Receivable) குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். இந்தக் கேள்விகள், நிறுவனத்தின் தற்காலிக அல்லது நீண்ட காலப் பிரச்னைகளைப் பற்றி புரிந்துகொள்வதற்குப் போதுமான குறிப்புகளைத் தரும் வகையில் இருக்கும்.

மேலும், நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனம்,  குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு திரட்டிய நிதியை எப்படிப் பயன்படுத்தியது என்றும் கேள்வி எழுப்பலாம். உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தின் கையில் அதிக அளவில் பணம் இருக்கிறது எனில், அந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பது குறித்தும் கேட்கலாம். ஏதேனும் புதிய புராஜெக்ட்டுகள் வரவிருக்கின்றனவா,  இப்போது அந்த நிதியானது எங்கு முதலீடு செய்யப்பட்டி ருக்கிறது, பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கு (Share buy back) அல்லது டிவிடெண்டை அதிகப்படுத்து வதற்கு ஏதேனும் வாய்ப்புகள் உள்ளனவா என்பது போன்ற கேள்விகளையும் கேட்கலாம்.

மேலும், ஒரு நிறுவனம் தனது கடனை அதிகரிக்க முடிவெடுத்தால்,  எங்கிருந்து கடன் வாங்குகிறது,

ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!

அதற்கு வட்டி எவ்வளவு,  அந்தக் கடனை எப்படிப் பயன் படுத்தப்போகிறது, எப்போது அந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படும்   என்பது தொடர்பான  கேள்வி களை எழுப்பலாம். நீங்கள் பங்கு வாங்கி வைத்திருக்கும் நிறுவனத்தில் யாருக்கேனும் கூடுதல் சலுகைகள் வழங்கப் படுகின்றனவா என்பதையும், போதுமான தகுதி இல்லாத வர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறதா என்பதையும் கட்டாயம் பார்க்கவேண்டும்.

இந்தப் பொதுக் கூட்டங்களைப் பொறுத்தவரை இன்னுமொரு முக்கியமான நோக்கம், நிர்வாகத்தினர் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றியும், எதிர்கால பிசினஸ் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கும் இடமாகவும் இருக்கும். 

 பங்குதாரர்களின் உரிமைகள்


ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளரான நீங்கள், இந்தப் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவு குறித்தும் கேள்வி எழுப்ப உரிமை உள்ளவர். நீங்கள் எழுப்பும் கேள்விகள் உங்களுடைய அக்கறை சார்ந்து எதுபற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக,  ஒரு புரமோட்டர் தனது முதலீட்டை அதிகரித்து, பங்கு விகிதத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்கிறது  எனில், என்ன காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்று தாராளமாகக் கேட்கலாம். காரணம், இதுபோன்ற முடிவுகள் நிறுவனம் தன்னைக் கடனிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, தனது சொத்துகளை இழந்துகொண்டு இருப்பதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

மேலும், ஒரு முதலீட்டாளராக அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர் களின் பதிவேடு, ஆண்டு வருமான விவரங்கள், பங்குதாரர் கூட்டங்களின் குறிப்புகள் போன்ற ஆவணங்களைப் பார்க்கவும் உரிமை உண்டு. பங்குதாரர்கள், தங்களுக்கு உள்ள மனக்குறைகளையும் இந்தக் கூட்டத்தில் பதிவு செய்யலாம். 

 கூட்டத்துக்குத் தயாராவது எப்படி?

நாம் ஏற்கெனவே பார்த்தது போல, இந்த பொதுக் கூட்டங் களில் நிதிநிலை அறிக்கைகள், இயக்குநர் நியமனங்கள் மற்றும் பிற சிறப்பு முடிவுகள் இருக்கும்.

உதாரணமாக, பிற நிறுவனத்துடன் இணைவது அல்லது ஒரு நிறுவனத்தை வாங்குவது போன்றவை. இந்த முடிவுகள் அனைத்துமே முதலில் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும். இப்படிக் கலந்தாலோசிக்கும்போது, பங்குதாரர்கள் கேள்விகளைக் கேட்லாம். அந்த ஒப்பந்தத்துக்கு (Deal) நியாயமாக எவ்வளவு விலை கொடுக்கலாம் என்பது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதுமட்டுமல்லாமல், இதனால் என்னென்ன ரிஸ்க்குகள் நிறுவனத்துக்கு இருக்கின்றன, அந்த ரிஸ்க்குகளைச் சமாளிக்க நிர்வாகம் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பதையும் முதலீட்டாளர் என்கிற முறையில் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்டு பங்குதாரர்கள்  பொதுக்கூட்டம்... - உரிமைக் குரல் எழுப்பும்  உங்களுக்கான மேடை!

நீங்கள் சிறுபான்மை பங்குதாரராக இருப்பின், வரவு செலவுக் கணக்கைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை உங்களால் அதிக கவனத்துடன் ஆராய முடியும்.  எண்களை வைத்துத்தான், நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்திறனை அறியக்கூடிய வகையிலான கேள்விகளைக் கேட்க முடியும். நிதிநிலை அறிக்கைகளில் உள்ள பல்வேறு விவரங்களைக் கூர்மையாக ஆராயும்போதுதான் அவற்றில் முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.

உதாரணமாக, அதிக அளவிலான பணம் கையிருப்பில் வைத்திருக்கும் நிறுவனம், கூடுதல் வட்டி வருமானம் பெறுவதாக இ்ருக்க வேண்டும். கவனமாக ஆராய்ச்சி செய்து கேள்வி எழுப்பும்போதுதான், ஏதேனும் ஒரு நிறுவனத்துக்குக் குறுகிய கால கடன் தந்திருக்கிறதா என்பது போன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். இதன் மூலம் நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வர முடியும்.  வரவு செலவுக் கணக்கில் இருக்கும் நம்பர்கள் ஒருபக்கம் இருக்க, எண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கக் கூடிய காரணங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆடிட்டர்கள் சில கருத்துகளை முன்வைக்கவோ அல்லது நிறுவனத்தின் செயல்முறைகளில் உள்ள பிரச்னைகளைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்வார்கள். அவற்றை நாம் தவறவிட்டுவிடக் கூடாது.

 முதலீட்டாளர்களின் பொறுப்புகள்


இந்தக் கூட்டங்களில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைப் பற்றி பேசி, நேரத்தை வீணடிக்கக் கூடாது. முன்பே கொடுக்கப்பட்ட அக்கவுன்ட்ஸ் புத்தகம் மற்றும் பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை படிப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். கேட்கவேண்டிய கேள்விகளைத் தயார் செய்து கொண்டு செல்வது நல்லது. அந்தக் கேள்விகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், பிற முதலீட்டாளர் களுக்குப் பயன்படக்கூடியதாகவும் இருப்பது நல்லது. உதாரணமாக, பங்கு விலை ஏன் உயரவில்லை என்கிற கேள்வியைக் கேட்பதால் நேரம்தான் வீணாகும். இது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம். காரணம்,  சந்தை செயல்பாடு என்பது பல்வேறு காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாவது. எனவே, இது மாதிரியான கேள்விகளுக்குச் சரியான விளக்கம் தரப்படாமலே போகலாம்.  சில முதலீட்டாளர்கள், சில சலுகைகளைக் கேட்டு கோரிக்கை வைப்பார்கள்; சில வணிக யோசனைகளையும் முன்வைப்பார்கள். எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, முதலீட்டா ளர்கள் மிகவும் விரும்புவது டிவிடெண்ட். ஒரு நிறுவனத்தின் நிதிநிலை வளர்ச்சிக்கேற்ப டிவிடெண்ட் வளர்ச்சியும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இந்தக் கூட்டத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகள் மூலம், ஏதேனும் கூடுதல் தகவல்கள் தேவைப் பட்டால், உங்களுடைய கேள்விகளைக் கூட்டம் நடக்கும் நாளுக்கு முன்னரே நிர்வாகத்துக்கு நீங்கள் அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் நிர்வாகம்/ இயக்குநர்கள் குழு/ செயலாளர் தரப்பினருக்கு, விவரங்களைத் தயார் செய்து வழங்குவதற்கும், அதற்கான விளக்கத்தை தயார் செய்வதற்கும் கால அவகாசம்
கிடைக்கும்.

முதலீட்டாளர்களாகிய நாம் நம்மைத்  தயார் செய்துகொண்டு, இந்த பங்குதாரர் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் முதலீட்டாளர்கள், தங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 தொகுப்பு: ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism