Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

தங்கம்

‘‘கடந்த வாரத்தில் தங்கம் மினியின் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வந்தது. தற்போது மே மாத கான்ட்ராக்ட் ஆரம்பித்துள்ளது. சென்ற இதழில் 28,400 என்பது முக்கிய ஆதரவு என்று கூறியிருந்தோம். அதுபோலவே 28,400 என்ற ஆதரவு விலையை எடுத்து மேலே திரும்பியது.

இந்தத் திருப்பம் ஒரு புல்பேக் ரேலியாக மாறலாம் என்றும் கூறியிருந்தோம். அதுவும் அப்படியே ஆனது. 28,400 என்ற ஆதரவு விலையை எடுத்து மேலே திரும்பி, முதல் தடைநிலையான 28,700-ஐயும் உடைத்து ஏறியது. இந்த ஏற்றம், அடுத்த கட்டமாக, அதன் முந்தைய தடைநிலையான 29,100-க்கு அருகாமையில் சென்றது. அதன்பின், தங்கத்தினால் தொடர்ந்து ஏற முடியவில்லை.

இதன் பின்பு கடந்த புதன், வியாழன் என்று தொடர்ந்து தங்கம் விலையிறங்க ஆரம்பித்தது. சென்ற வாரத்தின் கடைசி நாளான வெள்ளி அன்று, இறக்கம் 28,650 என்ற எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு மேலே திரும்பியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்



தற்போது தங்கம் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருப்பதாக எடுத்துக்கொள்ள லாம். மேலே தொடர்ந்து 29,100 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப் பட்டிருக்கிறது. இந்த எல்லையானது, தற்போதைய பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையாக உள்ளது.
கீழே முதல்கட்ட ஆதரவாக 28,600 உள்ளது. ஒருவேளை 28,600 உடைக்கப்பட்டால், அடுத்து 28,400 என்பது மிக முக்கியமான ஆதரவு எல்லை ஆகும். இந்த எல்லை உடைக்கப்படாத வரை, தங்கம் 28,400 என்ற கீழ் எல்லைக்கும், மேலே 29,100 என்ற தடைநிலைக்கும் இடையே சுழல வாய்ப்பிருக்கிறது.

இந்த எல்லையில் ஏதாவது ஒருபக்கம் உடைக்கப்படும்போது, பலமான நகர்வு காத்திருக்கிறது. குறிப்பாக, கீழ் எல்லையான 28,400 உடைக்கப்பட்டால், பலமாக இறங்கி 28,000 என்ற மிக மிக முக்கியமான ஆதரவு எல்லையை நோக்கி நகரலாம்.

வெள்ளி

முந்தைய வாரம் வெள்ளியானது, தங்கத்தைவிட அதிக அளவில் ஏறியது. சென்ற வாரத்தின் முதல் இரண்டு நாள்களுக்கு அது தொடர்ந்தது. வெள்ளியின் முக்கிய தடைநிலை 42,450 ரூபாயாக இருந்தது. செவ்வாய் அன்று பலமாக ஏற முயற்சித்து, அதன் தடைநிலையான 42,450-யைத் தாண்டி 42,829 வரை ஏறியது. ஒருவேளை இந்த ஏற்றம் தொடர்ந்திருந்தால், வெள்ளி விஸ்வரூபம் எடுத்திருக்கும்.

ஆனால், கரடி முதலீட்டாளர்கள் களத்தில் இறங்கி வெள்ளியை இறக்க ஆரம்பித்தார்கள். இதனால், அந்த நாள் ஒரு ஷூட்டிங் ஸ்டாரை தோற்றுவித்தது. ஷூட்டிங் ஸ்டார் தோன்றினால் விலை இறங்க வாய்ப்புண்டு.

கடந்த புதன் மற்றும் வியாழன் அன்று வெள்ளி, தொடர் இறக்கத்தில் இருந்தது. வாரத்தின் கடைசி நாளான அன்று, சந்தை சற்றே ஏற முயற்சி செய்தது. இந்த நிலையில், வெள்ளி கீழ் எல்லையாக 41,950 என்பதையும், மேல் எல்லையாக 42,450 என்பதையும் கொண்டு இயங்கி வருகிறது. எந்த எல்லையை உடைக்கிறதோ, அந்தத் திசையில் வலிமையான நகர்வு இருக்கலாம்.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு -0.1 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் கையிருப்பு 1.6 மில்லியன் பேரல்களாக அதிகரித்துக் காணப்பட்டன. இதற்கு முந்தைய வாரத்தில் 0.9 மில்லியன் பேரல்களாகக் காணப்பட்டன.

கச்சா எண்ணெய்யைப் பொறுத்தவரை, கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும், கச்சா எண்ணெய் கையிருப்பு வரலாறு காணாத அளவில் அதிகரித்துக் காணப்பட்டதால், இதன் விலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு

கடந்த வாரம், இயற்கை எரிவாயுக் கையிருப்பு 10 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் கையிருப்பு 2 பில்லியன் க்யூபிக் பீட்டாக குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய வாரத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு -43 பில்லியன் க்யூபிக் பீட்டாக இருந்தது. இயற்கை எரிவாயு கையிருப்பு எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்து காணப்பட்டதால், இதன் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

அமெரிக்கா முழுவதும் பருவ நிலை மாறி வருவதால், வரும் நாள்களில் இதன் தேவை மற்றும் விநியோகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!