Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் மஞ்சள், சீரகம், ஏலக்காய், ரப்பர் எப்படி வர்த்தகமாகும் என்பதை செலிப்ரஸ் கேப்பிடல் லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாடு, உதவி துணைத் தலைவர் லிஜோ ஜோசப் விளக்குகிறார்.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மஞ்சள்

“என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் மஞ்சள் விலை நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சளைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக நெகட்டிவாகவே வர்த்தகமாகி வருகிறது. எனினும், கடந்த வாரம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மஞ்சள் விலையில் சரிவு ஏற்படவில்லை. மஞ்சள் விலையில் குவிண்டால் ஒன்றுக்கு சப்போர்ட் 6,340 ரூபாய் ஆகவும், ரெசிஸ்டன்ஸ் 6,600 ரூபாய் ஆகவும் இருக்கிறது. வரும் நாள்களில் மஞ்சளின் விலை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,000 வரை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி



சீரகம்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் சீரகத்தின் விலை சமநிலையாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில் சீரகத்தின் விலை 15%  வரை அதிகரித்து காணப்பட்டது.

அடுத்த வாரங்களில் சீரகத்தின் விலை சப்போர்ட் 18,900 ரூபாய்க்கு வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.19,700 முதல் ரூ.20,000 வரை வர்த்தகமாகலாம். உள்ளுர் சந்தைகளில் சீரகத்தின் வரத்து குறைந்து காணப்படுகிறது. அதே சமயம், சீரகத்தின் ஏற்றுமதித் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது.

சீரகம் உற்பத்தியைப் பொறுத்தவரை, முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது. சீரகம் குவிண்டால் ஒன்றுக்கு 18,900-க்குக் கீழ் வர்த்தகமாகும் பட்சத்தில் இதன் விலை, மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏலக்காய்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் ஏலக்காய் விலை நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் மே மாத கான்ட்ராக்ட், வரும் வாரங்களில் குவிண்டால் ஒன்றுக்கு 1,215 ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் ரெசிஸ்டன்ஸ் ரூ.1,370-ஆக இருக்கிறது. இந்த நிலையை உடைக்கும் பட்சத்தில் இதன் விலையில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சந்தைகளைப் பொறுத்தவரை, ஏற்றுமதி குறைந்து வருவதால் இதன் விலை சரிவடைந்து வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ரப்பர்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில் இந்த வாரம் ரப்பர் விலை நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரப்பர் விலை ரூ.14,650 முதல் ரூ.15,600 என்னும் ஒரு குறுகிய எல்லையிலேயே வர்த்தகமாகி வருகிறது. இந்த எல்லையை உடைத்து வெளியே வரும்போது குறுகிய காலத்தில் இதன் விலையில் வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

ரப்பர் விலை இறக்கத்தைப் பொறுத்தவரை, 14,650 ரூபாயை உடைக்கும்போது அடுத்த சப்போர்ட் நிலையான 13,700 ரூபாயை நோக்கி வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே 15,600 ரூபாயை உடைத்தெறியும்போது ரப்பர் விலை, 16,750 ரூபாயை நோக்கி வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல மழைப்பொழிவு காரணமாக இந்தப் பருவத்தில் ரப்பரின் உற்பத்தி அதிகரித்துக் காணப்படும். இதனால் ரப்பர் விலை  இதன் விலை இறக்கத்தைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ்-ல் பாம் ஆயில்!

இந்தியா, உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதி நாடாகத் திகழ்கிறது. ஒட்டுமொத்த தாவர எண்ணெய் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. 2015-16-ம் நிதி ஆண்டில் 5.75 மில்லியன் டன் பாம் ஆயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட பாம் ஆயிலின் தேவை மற்றும் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இதன் தேவை உணர்ந்து எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர் சந்தையில் புதிதாக பாம் ஆயில் டிரேடிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.