Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

ந்த வாரம் தங்கம், வெள்ளி எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத் தலைவர் தி.ரா.அருள்ராஜன் விளக்குகிறார்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம்

‘‘சென்ற இதழில் நாம் சொன்னது தடை நிலையாக இருந்த 29,100 என்ற எல்லை, ஆதரவாக மாற வாய்ப்புள்ளது. இந்த ஆதரவை நிலைப்படுத்த மேலும் 100 புள்ளிகளைக் குறைத்துக்கொள்ளலாம். அதாவது, தற்போதைய ஆதரவு நிலையாக 29,000 - 29,100 என்ற எல்லைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஏற்றம் மேல் நோக்கித் தொடர்ந்தால் அடுத்த தடைநிலையாக 29,500-ஐ நோக்கிச் செல்லலாம். மேலே 29,500-க்கும் 29,600-க்கும் இடையே நல்ல இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி, ஒரு வலிமையான தடைநிலையாக மாறலாம். இதுதான் சென்ற வாரமும் நடந்தது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் தொடர்ந்து மேலே ஏறும்போது, தற்போதைய தடைநிலை 29,500 - 29,600 என்ற எல்லைகளாகும். இது ஒரு வலிமையான தடைநிலை ஆகும். இதைத் தாண்டினால், தங்கம் மிக வலிமையாக ஏறி, அடுத்தகட்டமாக 29,800 என்ற எல்லையைத் தொடலாம். இதுதான் சமீபத்திய உச்சம். இந்த உச்சம் உடைக்கப்பட்டு ஏறினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம். அப்போது பங்குச்சந்தை கீழே இறங்குகிறதா என்றும் பார்க்க வேண்டும். கீழே, தற்போதுள்ள ஆதரவு நிலை 29,200 ஆகும். இதற்கு கீழே மிக முக்கியமான ஆதரவு 29,100 ஆகும். இதை உடைத்து தங்கம் இறங்கினால், இனி இறங்குமுகமாக மாறலாம். இந்த இறக்கம் அடுத்துப் படிப்படியாக இறங்கி 28,400 மற்றும் 28,000 என்ற பழைய ஆதரவை நோக்கி நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

  வெள்ளி

சென்ற வாரத்தில் வெள்ளியானது 42,100 என்ற எல்லையை உடைத்து இறங்கி, 41,222 வரை இறங்கியது. இப்படி இறங்கிய நிலையில், 41,000 என்பது உடனடி ஆதரவாக உள்ளது. இது ஒரு வலுவான ஆதரவு ஆகும். இந்த ஆதரவு நிலை ,கடந்த மார்ச் 2017-லிருந்து காக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆதரவை நாம் மிக முக்கிய எல்லை யாகப் பார்க்கவேண்டும். இந்த எல்லையில் இருந்து வெள்ளி மேலே திரும்பலாம். மாறாக, 41,000-த்தை உடைத்து இறங்கினால், அடுத்து 39,900 என்ற மிக முக்கிய ஆதரவை நோக்கி இறங்கலாம். தற்போது கீழே 41,000 ஆதரவு, மேலே 42,800 தடைநிலை ஆகும்.’’

  கச்சா எண்ணெய்

கடந்த வாரம் கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்த டேட்டாவில், இதன் கையிருப்பு -1.0 மில்லியன் பேரல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப்போல, கச்சா எண்ணெய் கையிருப்பு -1.0 மில்லியன் பேரல்களாக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் -2.2 மில்லியன் பேரல்களாக மிகவும் குறைந்து காணப்பட்டது. ரஷ்யா மட்டுமின்றி, ஓபெக் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளான சவூதி மற்றும் குவைத், கச்சா எண்ணெய் உற்பத்தியை வரும் ஜூன் வரை கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

  இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு கையிருப்பு எதிர்பார்க்கப் பட்டதைவிட, அதிகமாகக் காணப்பட்டதால், இதன் விலை நெருக்கடியில் வர்த்தகமானது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், அடுத்த வாரம் புதன்கிழமை வரை குளிர்ச்சியான வானிலை நிலவும் என்பதால், இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.