Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் மஞ்சள், ஏலக்காய், கொத்துமல்லி, சோயாபீன் எப்படி வர்த்தகமாகும் என்பதை செலிப்ரஸ் கேப்பிடல் லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாடு, உதவி துணைத் தலைவர் லிஜோ ஜோசப் விளக்குகிறார்.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மஞ்சள்

“என்சிடிஇஎக்ஸ் சந்தையில், மே மாத மஞ்சள் கான்ட்ராக்ட் இந்த வாரம் சமநிலையாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் மஞ்சள், குறைந்தபட்சமாக 6,050 ரூபாய் வரை சரிவைச் சந்தித்தது. எனினும் அதன் பின்பு, ஷார்ட் கவரிங் நடவடிக்கையால் மேல்நோக்கி வர்த்தகமானது. மஞ்சளைப் பொறுத்தவரை, இந்த வாரம் சப்போர்ட் நிலையான 6,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்தில் 6,350 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும்பட்சத்தில் மட்டும் இதன் விலையில் முன்னேற்றத்தைக் காணலாம்.

  ஏலக்காய்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் ஏலக்காய் விலை நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களாக ஏலக்காய் விலை, பலவீனத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இதன் சப்போர்ட் நிலையான 1,200 ரூபாய்க்குக் கீழ் வர்த்தகமாகிறது.

வரும் நாள்களில் ஏலக்காய் விலை 1,100 ரூபாய் வரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஏலக்காய் ரெசிஸ்டன்ஸ் 1,200 ரூபாயாக உள்ளது. கடந்த சில வாரங்களாக போதிய கையிருப்பு மற்றும் அதிக விநியோகம் காரணமாக உள்ளூர் சந்தைகளில் ஏலக்காய் விலை குறைந்து காணப்படுகிறது.

  கொத்துமல்லி (தனியா)

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் கொத்துமல்லி விலை நெகட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களாக மிகவும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. மேலும், கொத்துமல்லி விலை சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

வரும் வாரங்களில் விலை ரூ.6,650 முதல் ரூ.6,700 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்தில் ரூ.7,300-க்கு மேல் வர்த்தக மாகும்பட்சத்தில், இதன் விலையில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம். அதிக வரத்து மற்றும் குறைந்த தேவை காரணமாக கொத்துமல்லி விலை நெருக்கடியில் வர்த்தகமாகி வருகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சோயாபீன்

என்சிடிஇஎக்ஸ் சந்தையில், இந்த வாரம் சோயாபீன் விலை பாசிட்டிவாக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்கத்திலிருந்த சோயாபீன், குறுகிய காலத்தில் ஏற்றத்தில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்தில் சோயாபீன் விலை ரூ.3,050-க்கு மேல் வர்த்தகமாகும்பட்சத்தில், இதன் விலை அடுத்த ரெசிஸ்டன்ஸ் நிலையான ரூ.3,220-யைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்கத்தைப் பொறுத்தவரை, சோயாபீன் சப்போர்ட் ரூ.2,980 மற்றும் ரூ.2,950 ஆக உள்ளது. இதை உடைத்தெறிந்து வர்த்தகமாகும்பட்சத்தில் இதன் விலை, மேலும் சரிவடைய வாய்ப்பு இருக்கிறது.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!