Published:Updated:

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

பிரவீன் ரெட்டி, செபி சான்றிதழ் பெற்ற முதலீட்டு ஆலோசகர்

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

பிரவீன் ரெட்டி, செபி சான்றிதழ் பெற்ற முதலீட்டு ஆலோசகர்

Published:Updated:
லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!
பிரீமியம் ஸ்டோரி
லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

ங்குச் சந்தையில் முதலீடு செய்யும் எல்லோரும் கற்றுக்கொள்ள விரும்புவது, முதலீட்டை எப்போது விற்க வேண்டும் என்கிற கலையைத்தான். ஏனெனில், முதலீட்டு மேலாண்மையில் மிகக் கடினமானது, பங்குகளை எப்போது விற்க வேண்டும் என்பதுதான்.

பங்குகளை விற்கும்போது செய்யும் தவறுகள்தான் ஒருவர் அடைய வேண்டிய லாபத்தைக் குறைத்துவிடுகிறது. பங்குகளை விற்பதற்கான சரியான ஒரு உத்தியை உருவாக்குவதைக்  காட்டிலும், பங்குகளை விற்கும்போது நாம் செய்யும் பொதுவான தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மிகவும் எளிது. பங்குகளை விற்கும்போது நாம் செய்யும் தவறுகளை நாம் தெரிந்துகொண்டாலே அதற்கான தீர்வுகளையும் நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

  பங்குகளை விற்பதில் நாம் செய்யும் தவறுகள்

சந்தைச் சரிவில் பதற்றத்தில் பங்குகளை விற்பது: சில மோசமான நிகழ்வுகளின்போது சிலர் அதிகமாகவே பதற்றப்படுவார்கள். அந்தப் பதற்றத்தில் முதலீடு நஷ்டமடைகிறதே என்கிற கவலையும் அவர்களது பதற்றத்தை அதிகமாக்கிவிடும். அந்தப் பதற்றத்தில் என்ன விலைக்குப் பங்குகளை விற்கிறோம் என்பதைப் பார்க்காமல், வந்த விலைக்குப் பங்குகளை விற்று, சந்தையை விட்டு வெளியேறிவிடுவார்கள். பங்குகளின் மதிப்பு தற்காலிகமாகக் குறைவதைப் பார்த்துப் பீதியடைவதால், நிரந்தர நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது.

முன்பே தீர்மானிக்கப்பட்ட லாபத்தை அடைந்ததும் விற்பது: சிலர், தங்கள் முதலீட்டின் மூலம் அடைய நினைக்கும் லாபத்தை முன்பே தீர்மானித்திருப்பார்கள். அந்த லாப விகிதத்தை அடைந்ததுமே பங்குகளை விற்றுவிடுவார்கள். இதனால் உண்மையில் கிடைக்கக்கூடிய லாபத்தை அடையும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!



டிவி அல்லது செய்தித்தாள்களில், ‘விற்றுவிடுங்கள்’ என்று சொன்னால் விற்பது: சொந்தமாக ஆராய்ச்சி ஏதும் செய்யாமல், யாரோ ஒருவர் ‘இந்தப் பங்கினை வாங்குங்கள் அல்லது இந்தப் பங்கினை விற்றுவிடுங்கள்’ என்று சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள். 

 பங்குகளை விற்காமல் செய்யும் தவறுகள்

குறிப்பிட்ட நஷ்டத்தை அடைந்தபிறகும்  தரமில்லாத பங்குகளை விற்காமல் தொடர்ந்து வைத்திருப்பது: தாங்கள் வைத்திருக்கும் பங்குகளின் விலை பெருமளவு இறங்கி நஷ்டம் அடைந்தபின்னும், மீண்டும் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக நினைத்துத் தரமில்லாத பங்குகளைத் தொடர்ந்து சிலர் வைத்திருப்பார்கள்.

சென்டிமென்டல் காரணங்களினால் பங்குகளை வைத்திருப்பது:  முந்தைய காலத்தில்  நல்ல லாபத்தைப் பெற்ற காரணத்துக்காக, இனி ஏற்றமே அடையாத பங்குகளை சென்டிமென்ட்-ஆக வைத்திருப்பார்கள்.

டிவி அல்லது செய்தித்தாள்களில் சொன்னதால், பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பது: டிவி-யில் அல்லது செய்தித்தாள்களில் சொன்னார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக, சிலர்  சில பங்குகளை விற்காமல் வைத்திருப்பார்கள்.

 பங்கு முதலீடு என்பது...


மேற்சொன்ன தவறுகளை நாம் செய்யாமல் இருக்க,  முதலீடு என்றால் என்ன  என்பதை முதலில் புரிந்து கொள்வோம். 

ஒரு நிறுவனத்தின் பங்கை நாம் வாங்கும்போது, நாமும் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக ஆகிறோம். நம்முடைய ஒரு பங்கின் மதிப்பு, அந்த நிறுவன பிசினஸின் மதிப்புடன் தொடர்புகொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், பங்குச் சந்தையில் இருப்பவர்களின் ஆசை மற்றும் எதிர்பார்ப்புகளினால் வாக்கு எண்ணும் இயந்திரம் போல குறுகிய காலத்தில் சந்தை ஏறி இறங்கிக்கொண்டே இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் எடை போடும் இயந்திரம் போல, பிசினஸின் அடிப்படை மதிப்புகளின்படி, சந்தையின் செயல்பாடு இருக்கும். சிறந்த முதலீட்டாளர்கள் பங்குகளின் மதிப்புகளில்தான் கவனம் செலுத்த வேண்டும்,  தினசரி ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் கவனம் செலுத்தக் கூடாது.     

 செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்

வெளிக் காரணங்கள்: பொதுவாக,  சந்தையில் பதற்றம் உருவானாலும், அதனால் ஒரு  நிறுவனத்தின் ஃபண்டமென்டல்கள்  பாதிப்படையாமல் இருந்தால் ஒருவர், தான் வைத்திருக்கும் பங்குகளை விற்காமல் தாராளமாக வைத்திருக்கலாம். உதாரணத்துக்கு, பிரெக்ஸிட் நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வினால்   ஐடிசி, ஹெச்எல்எல், டாபர் போன்ற நிறுவனங்களின் விற்பனைக்கு இந்தியாவில் எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே, பிரெக்ஸிட் ஏற்படுத்திய பதற்றத்தினால் இந்த நிறுவனப் பங்குகளை விற்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால் இந்த நிகழ்வை, அந்தப் பங்குகளின் விலை குறையும்போது, இன்னும் அதிகமாக வாங்கி முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே கருத வேண்டும்.

ஆனால், நிறுவனத்தின் நிர்வாகத்தினர் எடுக்கும் சில நடவடிக்கைகளால் அதன் பிசினஸ் மதிப்பில் நிரந்தரப் பாதிப்பு ஏற்படுமானால் அந்தப் பங்குகளை விற்காமல் வைத்திருப்பதில் அர்த்தமே இல்லை. உதாரணமாக,  பூஷன் ஸ்டீல் அல்லது கிங் ஃபிஷர் போன்ற நிறுவனப் பங்குகளை எடுத்துக் கொள்ளலாம். இவற்றின் பிசினஸ் என்ன ஆனது என்று நமக்கு நன்கு தெரியும். ஆனால், அந்தப் பங்குகளை விற்காமல் வைத்திருந்து எந்தப் பயனும் இல்லை.   

லாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை!

பங்குகளின் விலை, அந்த நிறுவனங்களின் பிசினஸ் மதிப்புடன் தொடர்புடையது என ஏற்கெனவே பார்த்தோம். முன்பே தீர்மானிக்கப் பட்ட லாபத்தை அடைந்ததும் பங்குகளை விற்பது, பங்குகளின் விலை அவற்றின் பிசினஸ் மதிப்புடன் தொடர்புடையது என்பதைப் புரிந்து கொள்ளாததால் செய்யும் தவறாகும்.  உதாரணமாக, எய்ச்சர் மோட்டார்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க் ஆகிய பங்குகளை ஒருவர் வாங்கி இருந்தால், அதன் விலை 15% உயர்ந்ததும் அவற்றை விற்றிருப்பார்கள். இதனால், அந்தப் பங்குகளால் கிடைக்கவிருந்த அதிக வருமானத்தைத் தவறவிட்டு, பிற்பாடு புலம்பித் தீர்ப்பார்கள்.    

நாம் செய்யும் இன்னொரு முக்கியமான தவறு, ஒரு பங்கு எப்போதோ நன்றாகச் செயல்பட்டு உச்ச வருமானத்தைக் கொடுத்த காரணத்துக்காக,  தற்போது அந்த நிறுவனத்தின் பிசினஸ் மோசமடைந்தபோதும், அந்தப் பங்கை விற்காமல் தொடர்ந்து வைத்திருப்பது. உதாரணமாக இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற பங்குகள் முன்னொரு காலத்தில் நல்ல வருமானம் தந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக  கணிசமான நஷ்டத்தையே அந்தப் பங்குகள் தந்திருக்கின்றன. 

தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் சொல்லப்படும் முதலீட்டு ஆலோசனை களின்படி  கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது கூடாது. எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் ஒருவர் எல்லோருக்கும் இலவசமாகப்  பணம் தருகிறார் என்றால், நாம் அவரைப் பற்றி சந்தேகப்படத்தானே செய்வோம்?

ஆனால், ஒருவர் இலவசமாக முதலீட்டு ஆலோசனைகள் சொல்லும்போது நாம் அவரைப் பற்றி சந்தேகப்படாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். எனவே, ஊடகங்களில் சொல்லப்படும் ஆலோசனைகளை எப்போதும் எச்சரிக்கையுடன் அணுகுவது நல்லது. ஏனெனில், இலவசமாக வழங்கப்படும் எந்த ஆலோசனையும்  பதிலுக்கு எதையாவது எதிர்பார்த்தே தரப்படுகின்றன.

 முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்


நினைவில் கொள்ளுங்கள்: பங்குகளில் நாம் முதலீடு செய்வதென்பது ஒரு நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடுகளின் மீது நாம் வைக்கும் பந்தயம்தான். எதிர்கால நிகழ்வுகளின் மீது பந்தயம் வைக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது நிலையற்றத்தன்மையையும், அதிக ரிஸ்க்கையும் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கற்றுக்கொள்ளுங்கள்: பங்குகளில் முதலீடு செய்வது, நிறுவனங்களின் பிசினஸ் வாய்ப்புகளையும், அவற்றின் மதிப்புகளையும் புரிந்துகொண்டு செய்வது. இந்தியாவில் நாமே மருந்துகளை வாங்கி உட்கொள்ளலாம் என்ற நிலைமை இருந்தாலும், நாமே நமக்கான மருந்துகளை வாங்கி உட்கொள்வது சரியானதாக இருக்காது. நோயைப் பற்றித் தெரிந்துகொண்டு அதனை எதிர்கொள்வது அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பதுதான் சரியானதாக இருக்கும். இதேபோல, பங்குகளை வாங்குவதையும், விற்பதையும் நாமே எளிதாக செய்துகொள்ள முடியும் என்றாலும் முதலீடு குறித்த அறிவில்லாமல் அவற்றை செய்வது சரியானதல்ல. முதலீடு செய்வது எப்படி என்பதை யார் வேண்டுமானாலும்  கற்றுக் கொள்ளலாம். அதற்கான நேரத்தை ஒதுக்கி, பல்வேறு விஷயங்களைப் படித்துப் புரிந்து கொண்டாலே போதும். முதலீடு என்பது தீவிரமான செயல்பாடு. அதை விளையாட்டாகவோ பொழுதுபோக்காகவோ செய்யாதீர்கள்.

  பங்குகளை வாங்குவதற்குமுன் விற்பதற்கான காரணிகளைக் கண்டறிதல்:

ஒரு பங்கை வாங்கும்முன் அதை விற்பதற்கான  காரணிகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல், பங்கினை வைத்திருக்கப்போகும் குறைந்தபட்ச கால அளவு, பங்குகளின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் ஃபண்டமென்டல்களில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் மற்றும் அதன் பிசினஸில் வெளிப்படையாகத் தெரியும் காரணங்களையும் அவ்வப்போது குறித்து வைத்துக்கொள்வது அவசியம். இப்படி செய்வதன் மூலம் நாம்  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தெளிவாகப் புரியும்.

 தவறு செய்யுங்கள், கற்றுக் கொள்ளுங்கள்


  முதலீடு என்பது நிலையற்றதும் ரிஸ்க் இருப்பதும் ஆகும். அனுபவமிக்க சிறந்த முதலீட்டாளர்களும் அவ்வப்போது தவறுகள் செய்வது உண்டு, எனவே, முதலீட்டு உத்தியில் தவறுகளுக்கும் இடமளிக்க வேண்டும். மேலும், ஒருவர் தனது சொந்த முதலீட்டு முடிவைக்கூட சந்தேகத்துடன் அணுக வேண்டும். அப்போதுதான் சொந்த முடிவுகளையே ஆய்வுக்கு உட்படுத்தி, சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

பங்குகளை வாங்குவதும், விற்பதும் மிகப் பெரிய கலை. இந்தக் கலையைத் கற்பதன் மூலமே நஷ்டத்தை நம்மால் தவிர்க்க முடியும். 

தொகுப்பு: ஜெ.சரவணன்

Disclosure:  The author and the clients of IndusWealth own some or all the stocks discussed in this article and may transact in them for their own portfolios.

Disclaimer: Examples cited in the article are for illustrative purposes only. The information provided here is based on our opinions plus our statistical and financial data and independent research. The article does not constitute individual investment advice and is not intended to be a solicitation for investment advisory services.  Authors do not guarantee any results that may be obtained from investing in the securities discussed above. Readers should note that investing involves risk and they should not make any investment decision without first consulting his or her own personal financial advisor and conducting his or her own research and due diligence.

About the Author: Praveen Reddy is a SEBI certified investment advisor. He is the founder and Principal advisor in IndusWealth, an Investment advisory firm. He has worked with financial services firms like RBS, Bank of New York Mellon, Credit Suisse First Boston. He has an MBA from IIM Calcutta and a B.Tech from IIT Kharagpur.