Published:Updated:

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?

கேள்வி-பதில்

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?

கேள்வி-பதில்

Published:Updated:
வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?
வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?

? வீட்டைப் புனரமைக்க ரூ.10 லட்சம் கடன் வாங்கலாம் என நினைக்கிறேன். வங்கியில் என்னுடைய வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைக்காமல் கடன் வாங்க முடியுமா?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?



மணிகண்டன், ஈரோடு
பிரபாகர பாபு, முன்னாள் துணை மண்டல மேலாளர், பாங்க் ஆஃப் இந்தியா


“வீட்டுப் புனரமைப்புக்கு அந்த வீட்டின் பத்திரத்தை  வங்கியில் அடமானமாக வைத்து வீட்டுக் கடன் வாங்குவது நடைமுறையில் இருக்கிறது. இது வீட்டை மேம்படுத்தும் வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வருவதால், கடன் பெற்றதுமே அந்த அடமானத்தைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டி வரும். எனவே, வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைக்காமல் கடன் வாங்க முடியாது.”

?கடந்த இரண்டு ஆண்டுகளாக மிட்கேப் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்துவருகிறேன். எனக்கு இதில் திருப்தியில்லை. என் முதலீட்டை ஆர்பிட்ரேஜ் ஃபண்டுக்கு மாற்றிக் கொள்ளலாமா?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?



சந்தோஷ், கரூர்
பாரதிதாசன், நிதி ஆலோசகர்


“நீங்கள் முதலீடு செய்திருக்கும் மிட் கேப் ஃபண்ட் ஆண்டுக்கு என்ன வருமானம் தருகிறது என்று நீங்கள் சொல்லவில்லை. பொதுவாக, நீண்ட கால இலக்கில்  முதலீடு செய்ய நினைத்தால், மிட்கேப் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் தாராளமாக முதலீட்டை மேற்கொள்ளலாம். மிட்கேப் ஃபண்டுகள் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானத்தை வழங்கும். ஆனால், உங்களுடைய இலக்கு குறுகிய காலம் எனில், மிட்கேப் ஃபண்டில் இருந்து வெளியேறி, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இவை ஆண்டுக்கு 8% வரை வருமானத்தைத் தரக்கூடியவை.’’

? எனக்கு 35 வயதாகிறது. என் குழந்தையின் கல்விக்காக எஸ்ஐபி மேக்னம் மிட்கேப் ஃபண்ட்- ரெகுலர் பிளான் - ரூ.2,000, டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்ட் - ரூ.1,000, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - ரூ.2,000, ஹெச்டிஎஃப்சி டாப் 200 - ரூ.2,000, ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் (இஎல்எஸ்எஸ்) ஃபண்ட் - ரூ.2,000, ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மல்டி கேப் ஃபண்ட் - ரூ.2,000 என கடந்த ஆண்டிலிருந்து மாதந்தோறும் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து வருகிறேன். அடுத்த பத்து ஆண்டு காலத்தில் ரூ.35 லட்சம் என்பது என் இலக்கு. இது சரியான அணுகுமுறையா?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?



செந்தில், காஞ்சிபுரம்
ச.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


“இளம் வயதில் உங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக பங்குச் சந்தை சார்ந்த  சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை, குறிப்பாக மல்டிகேப், மைக்ரோகேப், மிட்கேப், டைவர்சிஃபைடு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பாராட்டத்தக்கது.

அனைத்துத் திட்டங்களுமே ஆரம்பம் முதல் சராசரியாக ஆண்டுக்கு 16 - 23% கொடுத்துள்ளன. மாதம் ரூ.11,000 வீதம் பத்து ஆண்டுகளுக்கு ரூ.13,20,000 முதலீடு செய்வீர்கள். ஆண்டுக்கு 12% வளர்ச்சி பெற்றால், ரூ.24,64,000 கிடைக்கும். 15% என்றால் ரூ.28,93,000 கிடைக்கக்கூடும்.  விலைவாசியைக் கருத்தில் கொண்டு உங்களால் முடிந்தால் எல் அண்ட் டி இந்தியா வேல்யூ அல்லது கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்டில் கூடுதலாக ரூ.2,000 எஸ்ஐபி மூலம் ஒன்பது வருடங்களுக்கு முதலீடு செய்தால் இலக்கை அடையலாம்.’’

? ஐசிஐசிஐ மேக்சிமைசர் பிளான் அல்லது ஐசிஐசிஐ பேலன்ஸ்டு ஃபண்ட்  - இந்த இரண்டில் எது சிறந்தது, எதில் முதலீட்டை மேற்கொள்ளலாம்?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?



ராம்குமார், மதுரை
த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்


“ஐசிஐசிஐ மேக்சிமைசர் பிளான் என்பது யூலிப் (யூனிட் லிங்க் இன்ஷூரன்ஸ் பாலிசி) திட்டமாகும். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் என்பது மியூச்சுவல் ஃபண்ட். முதலீடு என்று வரும்போது மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் நீண்ட கால முதலீட்டில் நீங்கள் சொல்லும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் ஆண்டுக்கு சுமார் 12%  வரை வருமானம் தரும்.’’

? நான் 2015 முதல் பிர்லா சன்லைப் ஈக்விட்டி மற்றும் எம்என்சி ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்துவருகிறேன். ஈக்விட்டி ஃபண்டின் வருமானம் 14% இருக்கிறது. ஆனால், எம்என்சியின் வருமானம் மிகக் குறைவாக உள்ளது. இந்த ஃபண்டிலிருந்து வெளியேறலாமா அல்லது தொடர்ந்து இருக்கலாமா? வெளியேறினால் வேறு எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்?

வீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா?



செல்வ கணபதி, சென்னை
கா.முகைதீன் மாலிக், நிதி ஆலோசகர்


“பிர்லா எம்என்சி ஃபண்டில் இருந்து வெளியேறத் தேவையில்லை. ஏனென்றால், எம்என்சி ஃபண்டில் நீண்ட கால முதலீட்டு வருமானம் 17 சதவிகிதமாக உள்ளது. அதே சமயம், நிஃப்டி எம்என்சி இண்டெக்ஸ் வருமானம் 10.5% கொடுத்துள்ளது.

நீண்ட கால எஸ்ஐபி சராசரி வருமானம் 20 சதவிகிதமாக உள்ளது. எம்என்சி ஃபண்டில் எஃப்எம்சிஜி மற்றும் பார்மா கம்பெனி பங்குகள் சற்று அதிகம் இருக்கும். எனவே, கடந்த 1-2 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி உள்ளது. வரும் காலங்களில் இந்த நிலை சரியாகி, சராசரியாக நல்ல லாபத்தைத் தரும் வாய்ப்பு உள்ளது.”

தொகுப்பு:
சோ.கார்த்திகேயன்

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.