தங்கம்

தங்கம் ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது. 29,050 என்ற எல்லையையும் உடைத்து இறங்கும் முயற்சி நடக்கிறது. இதனை உடைத்து இறங்கும் நிலையில், தங்கம் 28,900-த்துக்கும் 29,050-க்கும் இடையே போராடிக்கொண்டு இருக்கிறது. கீழே இறக்கம் தொடர்ந்தால், 28,750 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும். சென்ற வாரம் அதையும் உடைத்து குறைந்தபட்சமாக 28,640- ஐத் தொட்டது.

கடந்த வாரத்தில் இறக்கம் வரும்போதெல்லாம், ஓர் ஏற்றமும் நிகழ முற்பட்டது. ஆனால், அந்த ஏற்றம் என்பது 29,050-ல் வலிமையாகத் தடுக்கப் பட்டது. இதனால், மேலே ஏறும்போதெல்லாம் 29,050-ல் தடுக்கப்பட்டு கீழே தொடர்ந்து தள்ளப்பட்டது. அதுவும் கடந்த வியாழன் அன்று வலிமையான இறக்கத்தைத் தங்கம் சந்தித்தது. இந்த நாளில் தங்கம், காளையின் கையிலிருந்து கரடியின் கைக்கு மாறியது.

இந்த நிலையில், தங்கம், தற்போது 28,640 என்ற முந்தைய பாட்டத்தை ஆதரவாக எடுக்க முயல்கிறது. இதை இன்னும் கொஞ்சம் தள்ளி 28,600 என்ற எல்லையை ஆதரவு எல்லையாக எடுக்கலாம். இதுவும் உடைக்கப்பட்டால், தங்கம் வலிமையான இறக்கத்தைச் சந்திக்கலாம். இந்த இறக்கம் அடுத்தடுத்த எல்லைகளான 28,450 மற்றும் 28,250 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.

மேலே 28,800 என்பது உடனடி தடைநிலையாக உள்ளது. இந்தத் தடையை உடைத்தால், இது முந்தைய தடைநிலையான 29,050 என்ற எல்லையை நோக்கி நகரலாம். இது ஒரு வலிமையான தடை நிலை ஆகும்.

வெள்ளி

வெள்ளியும் தொடர்ந்து இறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது, 40,450 என்ற ஆதரவை உடைத்து இறங்கினால், 39,000 என்ற எல்லையை நோக்கி இறங்கலாம் என்று சென்ற வாரம் எச்சரிக்கை விடுத்தோம். அதுவும் நடந்ததேறியது. சென்ற வாரம் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் இறங்குமுகமாவே இருந்தது. புதன் அன்று மட்டும் ஒரு ஏற்றத்தைக் கண்டது. ஆனால், அது ஒரு புல்பேக் ரேலியாகவே இருந்தது. அடுத்து வியாழன் அன்றும் இறங்கியது.

இத்தனை இறக்கத்துக்குப் பிறகும், வெள்ளி ஓர் ஆதரவை எடுத்துக் கொஞ்சம் மேலே செல்ல வாயப்புள்ளது எனில் 38,400-க்குச் செல்லும். இதை உடைக்காத வரை மேலே 39,100 மற்றும் 39,600-ஐ அடைய வாய்ப்புண்டு. அதுவே 38,400-ஐ உடைத்து இறங்கினால், பெரிய இறக்கத்தை அது கொடுக்கலாம். அடுத்த முக்கிய எல்லை 37,800 ஆகும்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது. மே மாதம் 2017ல் இருந்து கச்சா எண்ணெய் இறங்கு முகமாவே உள்ளது. மேலே 3,344 என்ற எல்லையைத் தொட்டபிறகு, அதைத் திரும்பியே பார்க்கவில்லை. சந்தை முழுவதும் கரடிகள் கைக்கு மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும், கச்சா எண்ணெய் சிறிய ஸ்பின்னிங் டாப்புகளை உருவாக்கி மேலே ஏறினால், ஒரே ஒரு பியர் கேண்டில் ஒட்டுமொத்தமாக விலையை ஒரே நாளில் இறக்கிவிடுகிறது. இதனால் கச்சா எண்ணெய் தற்போது முழுவதும் கரடிகள் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டுகிறது. இந்தத் தொடர் இறக்கம் 2,850 வரை இறக்கம் காட்டியுள்ளது.

இவ்வளவு பெரிய இறக்கத்துக்கு உண்டான புல்பேக் ரேலி இதுவரை வரவில்லை. அதையும் தாண்டி தற்போது மே 2017-ன் முக்கிய ஆதரவு எல்லையான 2,850 என்ற எல்லைக்கு வந்துள்ளது. எனவே, இந்த இடத்தில் ஒரு வலுவான பாட்டத்தைத் தோற்றுவிக்கும் முயற்சி வரலாம். அப்படி நடந்தால் அடுத்து மேலே 2,940 என்ற எல்லையை முதல் கட்டமாகவும், அடுத்து 3,060 என்ற எல்லையையும் அடையலாம். அதையும் தாண்டும்போது வலுவான ஏற்றமாக 3,250-யைத் தொடலாம். ஆனால், 3850 உடைக்கப் பட்டால் பெரிய இறக்கம் வரலாம்.

மென்தா ஆயில்

தற்போது மென்தா ஆயில் மேலே 940-ல் தடுக்கப்படுவதும், கீழே இறங்கும் போது 896-ல் ஆதரவு எடுப்பதும் நடந்து வருகிறது. சென்ற வாரம் 905 என்ற எல்லையில் இருந்து மேலே 940- ஐத் தொட்டு, தடுக்கப்பட்டுள்ளது. இனி 940 - 942 என்ற எல்லையைத் தாண்டினால், இதுவே ஒரு ஹெட் அண்ட் ஹோல்டர் அமைப்பை உருவாக்கி, பலமாக ஏறி 960 மற்றும் 975 என்ற புள்ளிகளைத் தொடலாம் என்று ஏற்கெனவே சொன்னோம். அதை இப்போதும் சொல்கிறோம். உடனடி ஆதரவு 914 ஆகும். இது உடைக்கப்பட்டால் முந்தைய ஆதரவான 890-ஐத் தொடலாம்.

காட்டன்

காட்டனும் நல்ல ஏற்ற இறக்கத்துடன் வியாபாரம் ஆகிறது. சென்ற வாரம் சொன்ன ஆதரவு எல்லையான 20,800 உடைக்கப்பட்டது. பின் வலிமையான இறக்கம் நிகழ்ந்தது. இந்த இறக்கத்தில் குறைந்தபட்சமாக 19,820 என்ற புள்ளியைத் தொட்டது. தற்போது 19,800 என்ற எல்லையை ஆதரவாக எடுத்துள்ளது. உடனடி தடைநிலை 20,100 ஆகும். இதைத் தாண்டினால், ஒரு புல்பேக் ரேலி வரலாம்.