Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்!
கமாடிட்டி டிரேடிங்!

ங்கம்

சென்ற வார ஆரம்பத்தில் ஒரு கேப் டவுனில் தொடங்கியது.  28,750 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.  இந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி இப்போது ஆதரவு எடுத்துள்ள 28,400 என்ற எல்லையை நோக்கி வரலாம் என கடந்த வாரம் சொன்னோம்.

நாம் சொன்னபடியே ஏறக்குறைய நடந்துள்ளது.  தங்கம் ஒரு கேப் டவுனில் இறங்கி, நாம் சொன்ன இலக்கை நோக்கி இறங்கியது.  குறைந்தபட்சப் புள்ளியாக 28,379-யைத் தொட்டு, அதன்பின் ஏற ஆரம்பித்தது.   இந்த ஏற்றமானது மேலே 28,765 வரை தொடர்ந்துள்ளது.

இதே எல்லைதான் ஆதரவாக இருந்ததாக முன்பு நாம் குறிப்பிட்டோம். அதே எல்லை தற்போது தடை நிலையாக மாறி உள்ளது. எனவே, தற்போது எல்லைகள் ஆதரவாக 28,400-ம், தடை நிலையாக 28,750-ம் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த விரிவான இரண்டு எல்லைகளுக்குள்ளாக ஒரு நெருங்குதல் நிகழ்ந்து வருகிறது.  அதாவது,  கடந்த சில தினங்களில் தங்கம் நகரும் போது, அதனுடைய உச்சம் மற்றும் நீச்சம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் அடுத்து வருகிற நாள்களில் ஒரு வலிமையான பிரேக் அப் அல்லது பிரேக் டவுன் நிகழ வாய்ப்புள்ளது. இந்தக் குறுகிய நகர்வின் முக்கியமான ஆதரவு எல்லை  28,450 ஆகும்.  மேலே குறைந்துகொண்டே வரும் தடைநிலை என்பது 28,620 ஆகும்.   எனவே, அடுத்து ஒரு பெரிய நகர்வுக்குத் தங்கம் காத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

சென்ற வாரத்தில் வெள்ளி விலை மேலே நகர்ந்தாலும், 39,375-க்கு மேலே செல்ல முடியவில்லை. கீழ்நோக்கித் திரும்பினால், வெள்ளி இறங்கி முந்தைய பாட்டமான 38,400 என்ற எல்லையை நோக்கி நகரலாம் என்று கூறியிருந்தோம்.  அது இன்னமும் வலிமையாகவே உள்ளது.  

தற்போது வெள்ளி மேலே 39,600 என்பதை வலிமையான தடைநிலையாகவும், கீழே 38,400-ஐ வலிமையான ஆதரவு நிலையாகவும் கொண்டுள்ளது. 

ஆனால், வெள்ளிக் கிழமையன்று, வியாபாரம் இந்த இரண்டு எல்லை களுக்குள்ளாகவே நடந்து வருகிறது.  38,400 என்ற  ஆதரவு நிலையை உடைத்தால், வெள்ளி பெரிய அளவில் இறங்க வாய்ப்புள்ளது.   ஆனாலும், 38,400  என்ற ஆதரவு எல்லை வலிமை யாகவே உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்க்கு  சென்ற வாரம் ஒரு பம்பர் வாரமாகும். சென்ற வாரம் நாம் குறிப்பிட்டது போல, 2,732 என்கிற லெவலை உடைக்காமல் இருக்கிறது. எனவே, இது ஒரு தற்காலிக பாட்டமாக மாறலாம். ஆனாலும், ஒரு புல்பேக் ரேலிக்கு இன்னும் வாய்ப்புண்டு. அவ்வாறு நகர்ந்தால், மேலே 2,850 என்ற முந்தைய ஆதரவு நிலை தடைநிலையாக மாறலாம். அதையும் தாண்டி ஏற ஆரம்பித்தால், 2,960 என்று மிக மிக முக்கியத் தடைநிலை ஆகும். அதைப் போலவே கச்சா எண்ணெய் 2,732 என்ற ஆதரவை எடுத்து மேலே ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமும் 2,948-க்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இனி, இந்த 2,960 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இந்த இடத்தைத் தாண்டும்போது, ஏற்றம் இன்னும் சூடுபிடிக்கலாம். அடுத்த கட்டமாக 3,040 என்ற எல்லையும், அதையும் தாண்டும்போது 3,135 என்ற எல்லையையும் அடைய வாய்ப்புண்டு. இந்த வலிமையான தடைநிலையைத் தாண்டினால், மிகப் பெரிய ஏற்றத்துக்கு வழிவகுக்கும். ஆதரவு எல்லைகள் 2,840 மற்றும் 2,730 ஆகும்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் தற்போது வலிமையாக இறங்கி உள்ளது.  தற்போது 900 என்பது முக்கிய ஆதரவு.   அது உடைக்கப்பட்டால் 887 அடுத்த முக்கிய ஆதரவு என்றோம். அதுவும் நடந்தது.

 மென்தாயில்  கடந்து செவ்வாய் அன்று,       900-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்சமாக 870 வரை இறங்கியது.   இனி ஜூலை கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். இதன் உடனடித் தடை நிலை 902 ஆகும். ஆதரவு எல்லை  885 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

காட்டன் நல்ல இறக்கத்தில் இருந்துவந்தது.  இதன் உடனடி தடை நிலை 20,100 என கடந்த இதழில் சொன்னோம். இன்னமும்  20,100 என்பது வலிமையான தடை நிலையாகவே உள்ளது.  ஆனால், இப்படி கேப் ஆகும்போது இறங்கி முடிவது சகஜம். அதுதான் கடந்த வியாழனன்று நடந்தது.

தற்போது இறக்கத்தின் புல்பேக் ரேலி முடிந்து மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்துள்ளது. உடனடி ஆதரவாக 19,650 உள்ளது. இதையும் உடைத்தால், 19,450 மிக மிக முக்கிய ஆதரவு ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism