Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

வெயிலும், மழையும் மாறி மாறி அடிப்பதுபோல, தங்கம் மேலும் கீழும் நகர்ந்து கொண்டு இருக்கிறது. தங்கத்தின் விலைப்போக்கு பற்றி நாம் கடந்த  வாரம் சொன்னது...

“நன்கு ஏறிய நிலையில், 29250 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது. இதை உடைத்தால், இந்த எல்லை இன்னும் தொடர வாய்ப்புள்ளது. கீழே 29000 என்பது உடனடி ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், ஒரு ரிடிரேஸ்மென்ட் நிகழலாம்’’ என்று சொல்லி இருந்தோம்.

இது நடந்ததையொட்டி, தங்கம் 29000 என்ற ஆதரவை உடைத்து, 28727 வரை இறங்கியது. இந்த இறக்கம் வாசகர்களுக்கு விற்று வாங்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்பின், அங்கிருந்து மேலே திரும்பியுள்ளது. இந்தத் திருப்பம், நாம் முன்பு கூறிய தடைநிலையான 29250 என்ற எல்லையை மீண்டும் தொட்டுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்!



முந்தைய வாரத்தின் கடைசியில் தங்கத்தின் விலைப்போக்கில்  ஒரு டோஜி பேட்டர்ன்  உருவானது. இது நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், ‘இனியும் என்னால் ஏற முடியவில்லை’ என்பதே.

அடுத்து திங்களன்று, டோஜிக்குக் கீழே  தங்கம் இறங்கத் தொடங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் புதனன்றும் தொடர்ந்தது.

புதனன்று இறங்கியது மட்டுமல்ல, 28727 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டபிறகு, மேலே திரும்பியது. இதனால், அன்று சுத்தியல் போன்ற உருவமைப்பு தோன்றியது. 

இந்த நிலையில், இனி என்ன நடக்கலாம் என்கிற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

தங்கம் 29250 என்ற தடைநிலையை வலுவாக உடைத்து ஏறினால், சந்தையானது காளையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம்.   அப்போது தங்கத்தின் விலை அடுத்தகட்ட ஏற்றத்துக்கு நகரும். அந்த நகர்வு மேலும் வலுப்பெற்று, 29550 என்ற அடுத்த தடைநிலையை நோக்கி மெள்ள மெள்ள நகர ஆரம்பிக்கலாம்.

இந்தத் தடையை உடைத்து ஏறினால், அடுத்த முக்கியத் தடைநிலை 29750 ஆகும். ஒருவேளை 29250 என்ற அந்த முக்கிய எல்லையைத் தக்கவைக்க முடியாமல் இறங்கினால், தங்கம் மெள்ள மெள்ள இறங்கி, முந்தைய ஆதரவு எல்லையான 28727 என்ற புள்ளியை அடையலாம்.

இந்த இடம்தான் காளைகளின் கடைசி எல்லை. இது உடைக்கப்பட்டால், இதுவரை ஏறுமுகமாக இருந்த தங்கம், இறங்குமுகமாக இருக்க வாய்ப்புள்ளது.

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

வெள்ளி, தங்கத்தின் நகர்வில் இருந்து தள்ளி நின்று, ஏற்றத்தைக் காட்ட முயற்சி எடுத்தது. ஆனாலும், கடைசியில் தங்கம் இறங்கியபோது, கூடவே வெள்ளியும் ஒரு வலுவான இறக்கத்திற்குச் சென்றது.

சென்ற வாரம் நாம் சொன்னது... “தற்போது 39600 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. முன்பு தடையாக இருந்த 38700 என்பது உடனடி ஆதரவாக மாறியுள்ளது. இதில் தடைநிலை இன்னும் அதே தடைநிலையாகத்தான் உள்ளது.’’

ஆனால், வெள்ளி விலையானது, கீழே 38700-யை உடைத்து இறங்கி 38321-யைத் தொட்டது. ஆனால், கடந்த செவ்வாய் அன்று நமக்கு விடுமுறை தினமாக இருந்ததால், ஆதரவை உடைத்து இறங்கியதை உபயோகப்படுத்த முடியாமல் போனது. புதனன்று பெரிய கேப் டவுனில் துவங்கி, பின் வலிமையாக மேல்நோக்கி திரும்பியது. அதன்பின்பு தடைநிலையான 39600-ல் இடித்துக்கொண்டு இருக்கிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இனி  என்ன நடக்கலாம்?

வெள்ளி மேலே உள்ள தடைநிலையான 39600 என்ற எல்லையை உடைத்து ஏறினால், அது  மிகப் பெரிய ஏற்றத்துக்கு வழிவகுக்கும். ஒரு மணிநேர வரைபடத்தில் இது ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பை உருவாக்கும். இந்த அமைப்பு, காளைகளின் வலிமையைக் காட்டுவதாக அமையும். மேலே அடுத்த முக்கிய எல்லைகளான 40100 மற்றும் 40400 என்ற எல்லைகளை முதல் கட்டமாகத் தாண்டலாம். பின்பு இது காளைகளின் களமாக மாறிவிடலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

சென்ற வாரம் சொன்னது... “கச்சா எண்ணெய், தற்போதைய ஆதரவு எல்லையான 3100-ஐ உடைத்துக்கொண்டு இருக்கிறது. கரடிகள் அதில் வெற்றி பெற்றால், இறக்கம் கணிசமானதாக இருக்கும். கீழே உள்ள முக்கிய எல்லை 2980 ஆகும்.”

இந்த நகர்வு என்ன சொல்கிறது? சென்ற வாரம் 3100 என்ற எல்லையை உடைத்து இறங்கி, 2982 வரை சென்றது. அங்கிருந்து ஆதரவை எடுத்து மேல்நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. டெக்னிக்கல் அனாலிசிஸ் நமக்கு இந்த முறை மிகத் துல்லியமான ரிசல்ட்டைக் கொடுத்துள்ளது. இதுவும் டிரேடர்கள்  நன்கு பணம் பண்ணும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்!

கடந்த வாரம் திங்களன்று 3100-ஐ உடைத்து இறங்கியபிறகு, 2982 வரை சென்ற கச்சா எண்ணெய், ஒரு சுத்தியல் உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. அடுத்து, வெள்ளியன்று அந்தச் சுத்தியல் அமைப்பின் தலையைத் தாண்டியும் ஏற ஆரம்பித்துள்ளது.

அடுத்த செப்டம்பர் மாத கான்ட்ராக்ட்டின் முக்கியத் தடைநிலைகள் 3070 மற்றும் 3110 ஆகும். அதற்கு மேல் ஏறினால், காளைகளின் கைக்கு சந்தை வலுவாக மாறிவிடும். பின்பு, 3160 மற்றும் 3210-யை நோக்கி நகரலாம். ஆனால், 3000-யை உடைத்தால் மிகப் பெரிய இறக்கம் நிகழலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

கமாடிட்டி டிரேடிங்!

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த இறக்கம் 176.10 என்ற இடத்தில் ஒரு பாட்டத்தைத் தோற்றுவித்து ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் 193 வரைத் தொடர்ந்தது. அதன்பின் இறங்க ஆரம்பித்து 183.40 என்ற எல்லையைத் தொட்டபின் மேல்நோக்கித் திரும்பியது. இதனால் ஒரு ஹயர் பாட்டம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது கரடிகள் கையில் இருந்து காளைகள் கைக்குச் சந்தை  மாறுவதைக்  காட்டுகிறது. தற்போது உடனடித் தடைநிலையாக 189 உள்ளது. இதை உடைத்து ஏறும்போது 193 என்பது வலிமையான தடைநிலை. இதற்கு மேல் பெரும் ஏற்றம் வரலாம். கீழே 185.50 கடைசி ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

மென்தா ஆயில் ஒரு தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. இந்த ஏற்றம் 1228 என்ற இடத்தில் வலுவாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டினால், அடுத்து  ஒரு பெரிய ஏற்றத்துக்கு வழி செய்யலாம். முக்கிய எல்லைகள் 1240, 1258 ஆகும். கீழே 1190 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “தற்போது 18450 என்பது முக்கிய ஆதரவுநிலை. மேலே 18700 தடைநிலை ஆகும்.”  கடந்த வாரம் காட்டன் ஆதரவான 18450-யை  உடைத்து, 18200 வரை இறங்கியது. தற்போது இது ஒரு பக்கவாட்டு நகர்வில் உள்ளது. அதாவது, கீழே 18200 என்பதை ஆதரவாகவும், மேலே 18500 என்பதைத் தடைநிலையாகவும் கொண்டு இயங்கி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு