மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஹலோ வாசகர்களே! இளைஞர்களே! எப்படியிருக்கீங்க?

என் பெயர் கணேஷ். சென்னை ஐ.ஐ.டி.யில டிபார்ட்மென்ட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்ல அசிஸ்டன்ட் புரபசரா இருக்கேன். அடுத்த சில மாதங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்களோட பேசப் போறேன். எதைப் பத்தின்னு கேக்குறீங்களா?

ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி அமைதியா யோசிங்க. உங்க வாழ்க்கையில் அடைய நினைக்கிற ஐந்து விஷயங் களைப் பட்டியல் போடுங்க. அதில் முதல் மூன்று இடத்துக்குள் 'நல்ல வேலை கிடைக்க வேண்டும்’ என எழுதியிருந்தீங்களா? அதைப் பற்றிதான் பேசப் போகிறேன்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ம் வாழ்க்கையில் 'வேலை’ மிக முக்கியமான இடம் பிடிச்சிருக்கு. வேலை (Career) பணம் சம்பாதிப்பதற்கான கருவி மட்டுமல்ல, அது நம் சுயஅடையாளத்தின் (Self-Identity) அங்கமும் கூட. சில பேருக்கு அது அவர்களின் வாழ்க்கையின் அர்த்தமும்கூட. வேலை தருகிற விசிட்டிங் கார்டு உங்கள் முகவரி அட்டை மட்டுமல்ல, அது உங்கள் வாழ்க்கையின் தற்போதைய அடையாளம்.

ஆனால், நம் இளைய தலைமுறையில் பல பேர் தம் வேலை குறித்த தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நமக்கு எந்த மாதிரியான வேலை வேண்டும்? அந்த வேலையை அடைய தேவையான திறன்கள் என்ன? அந்த திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? என்கிற  கேள்விகளுக்குப் பதில் தேடி பல இளைஞர்கள் காத்துக் கிடக்கின்றனர். அது போன்றவர்களுக்கு வழிகாட்டவே இந்த தொடர்.

ஏற்கெனவே படித்து முடித்தவர்களோடு, இந்த ஆண்டு படித்து முடிக்கப் போகிறவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ எப்படி அட்டென்ட் செய்ய வேண்டும்?   புதிதாக வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த தொடரில் சொல்கிறேன்.

இதில் நான் பேசப் போகிற விஷயங்களை விவரமாகப் பகிர்ந்து கொள்வதற்கு முன், உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கப் போறேன்! போச்சுடா, எடுத்தவுடனே டெஸ்ட்டான்னு நினைக்காதீங்க.  இந்த டெஸ்ட்ல நீங்க நிச்சயம் பாஸ் ஆவீங்க!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பின்வரும் கருத்துகளில் எது சரி, எது தவறுன்னு நினைக்கிறீங்க?

1. தற்போதைய சூழலில் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.

2. நல்ல வேலை கிடைக்க வேண்டுமெனில், நல்ல கல்லூரியில் படித்திருக்க வேண்டும்.

3. அதிக கல்வி தகுதியும், நல்ல அறிவுக்கூர்மை உள்ளவர்களுக்கே நல்ல வேலை கிடைக்கும்.

4. நல்ல நிறுவனத்தில், நல்ல வேலையில் சேர்வதே நம் கேரியரின் முடிவாக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை குறிச்சிக் கிட்டீங்களா? ஓகே, இப்ப இந்த அபிப்பிராயங்கள் (Opinions) எந்த அளவுக்கு சரின்னு பார்ப்போம்.

முதல் ஸ்டேட்மென்ட் தவறுன்னு பல பேர் சொல்லி இருப்பீங்க. ஆம், சந்தைப் பொருளாதாரமும் உலகமயமாக்கலும் நகர்ப்புறங்களில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றன என்பது நிதர்சனமான உண்மை.

நல்ல வேலை கிடைக்க நல்ல கல்லூரியில் படித்திருக்க வேண்டும் என்பதோ, நிறைய கல்வித் தகுதியும், அறிவுத்திறனும் இருக்க வேண்டும் என்பதோகூட முழுவதும் உண்மையில்லை. நல்ல கல்வி நிறுவனத்தில் பெற்ற உயர் கல்வித் தகுதி மற்றவர்களுடன் போட்டி போடுவதிலிருந்து சற்று விலக்கு தரும் என்றாலும், அதை தக்க வைத்துக் கொள்ள வேறு பல திறன்கள் தேவை.

அதேபோல அறிவுக்கூர்மை மட்டுமே நல்ல வேலையில் உங்களை கொண்டு போய் சேர்த்துவிடாது. அறிவு முதிர்ச்சி, எமோஷனல் இன்டெலிஜன்ஸ், சரியான அணுகுமுறை போன்றவையும் வெற்றிக்கு அவசியம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
##~##
கடைசி ஸ்டேட்மென்ட், தவறு. நல்ல கம்பெனியில் நல்ல வேலை கிடைப்பது உங்கள் கேரியரின் முடிவல்ல. அது உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு. அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் எதிர்கால வாழ்க்கை அமையும்.

இதுபோல பல விஷயங்களை இந்த தொடரில் ஆராய்ந்து, நிறைய விஷயங்களைப் பார்க்கப் போகிறோம். இது வெறும் ஆலோசனை தருகிற தன்னம்பிக்கைத் தொடரல்ல,  உங்கள் கேரியர் ஆஸ்பிரேஷனை அடைய உளவியல் ரீதியாக உங்களை தயார்படுத்தும் ஒரு முயற்சி.  

வேலைவாய்ப்பு தொடர்பாக  உங்களுக்கு இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். சோ, நான் ரெடி, நீங்க ரெடியா?!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மீபத்தில் கெல்லி சர்வீஸஸ் எனும் நிறுவனம் நடத்திய சர்வேயில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் மேலதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஜூனியர்களை சிறப்பாக வழி நடத்துவதாகச் சொல்லி இருக்கின்றனர்.

கலக்குறீங்க பாஸ்!

டந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் இரண்டு மில்லியன் பேர் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்களாம். 2008 பொருளாதாரச் சிக்கலுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இத்தனை பேர் ராஜினாமா செய்வது இப்போதுதான். சம்பளத்தை உயர்த்தாததே இதற்கு காரணம்!

அங்கேயும் இதே பிரச்னையா!?

ம்பள உயர்வு என்பது மற்ற துறைகளை ஒப்பிடும்போது சுகாதாரத் துறையில் குறைவாக  இருப்பதாகச் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அட பாவமே!

பேங்க் ஆபீஸர்

எப்படித் தயாராவது?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (institute of banking
personnel selection) என்கிற அமைப்புதான் இந்தத் தேர்வை நடத்துகின்றன. இந்தத் தேர்வில் பொதுத்துறை வங்கிகளான 19 வங்கிகளுக்கும் தேர்வு எழுதலாம். (எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் அதன் அசோசியேட் வங்கிகள் தவிர).

இந்த ஐ.பி.பி.எஸ். தேர்வு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது, வங்கித் தேர்வு என்பது கிளார்க் மற்றும் அதிகாரிகள் பணி என இரண்டுக்கும் தனித்தனியான தேர்வு இருக்கிறது. இதில் நவம்பர், மே மாதத்தில் கிளார்க் பணிக்கும், செப்டம்பர், மார்ச் மாதத்தில் அதிகாரிகள் பணிக்கும் தேர்வு நடக்கும். இதில் பாஸாகிவிட்டால், நேர்முகத் தேர்வு நடக்கும். இதில் தேர்வாகிவிட்டால் வேலைதான்!

ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ், ரீசனிங் ஆகிய பாடங்களிலிருந்து தலா 50 கேள்விகள் வீதம் 250 கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விகளுக்கு இரண்டரை மணி நேரத்திற்குள் விடையளிக்க வேண்டும். ஓ.எம்.ஆர். ஷீட்டில்தான் விடையளிக்க வேண்டும். கேள்விகள் சுலபமானதாக இருந்தாலும், சரியான நேரத்திற்குள் பதிலளிப்பதில்தான் நம் திறமை இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திலும் சராசரியாக பதிலளிப்பது முக்கியம். கணிதம் மற்றும் ரீசனிங் கேள்விகளை வேகமாக போட பழகிக் கொண்டால் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம்.''  

- பானுமதி அருணாசலம்

எப்படி ஜெயித்தோம்?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பிரவீன் குமார்: ''ஐந்து மாசம்தான் படிச்சேன். கணக்குல புலியா இருந்ததால பரிட்சையில அசால்ட்டா பாஸ் பண்ணினேன்!''

முனிராசு: '' இந்த பரிட்சையில கணிதம் மற்றும் ரீசனிங் கேள்விகளுக்கு வேகமாக பதில் அளித்தேன்!''  

செல்வகுமரன்:  ''கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் வாழ்நாள் பூரா நல்லா இருக்கலாம் என்கிறதுக்காக ராத்திரி, பகல்னு பார்க்காம படிச்சேன். வேலையும் கிடைச்சுடுச்சு.'' 

- படங்கள்: பொன்.காசிராஜன், ச.இரா.ஸ்ரீதர்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!