பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட காலத்தில் நம் முதலீடு மீதான ரிஸ்க் குறைகிறது அல்லது பரவலாக்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

மின்ட்வாக் (Mintwalk) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம், பங்கு முதலீடு மீதான லாபம் மற்றும் ரிஸ்க் எவ்வளவு எனத் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த 1995 ஜனவரி 1-ம் தேதி முதல் 2016 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான இருபது ஆண்டுகளில் நிஃப்டி இண்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்தால், என்ன ரிஸ்க், என்ன லாபம் என ஆராய்ந்தது.
இதில் ஒருவர் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், அந்த இருபது ஆண்டுகளில், ஓராண்டுக் காலத்தில் இழப்பதற்கான வாய்ப்பு 28 சதவிகிதமாக இருந்தது. இதுவே, மூன்றாண்டுகளில் ஐந்து சதவிகிதமாகக் குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், ஓராண்டு காலத்தில் 17.8% வருமானம் கிடைத்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதர காலகட்டங்களிலுள்ள லாபத்துக்கான வாய்ப்பு மற்றும் வருமான விவரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை, பங்கு சார்ந்த முதலீட்டில், நீண்ட காலத்தில் இழப்பதைவிட லாபத்துக்கான வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்துகொண்டு, இனியாவது எஸ்.ஐ.பி முறையில்
அதில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்!
- சேனா சரவணன்