Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்!

தங்கம் (மினி)

தங்கத்தின் விலைப்போக்கு பற்றி சென்ற வாரம் சொன்னது... “தற்போது தங்கம் 29450 முதல் 29500 என்ற எல்லை வரை முக்கிய எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. தங்கம் 29450 என்ற எல்லையை உடைத்து இறங்க ஆரம்பித்தால்,    ஆடம் மற்றும் ஈவ் என்ற உருவமைப்பைத் தோற்றுவிக்கலாம். அது நிகழ்ந்தால், வலிமையான இறக்கம் வரலாம். இந்த இறக்கம் 600 - 800 புள்ளிகள் வரை இறங்கலாம். தற்போதைய உடனடித் தடைநிலை 29950 ஆகும்.”    

கமாடிட்டி டிரேடிங்!

நாம் சொன்னதுபோலவே, முக்கிய ஆதரவான 29500 என்கிற எல்லை உடைக்கப்பட்டு, தங்கம் இறங்குமுகமாக மாறியுள்ளது. இந்த இறக்கம் இதுவரை 29258 என்ற எல்லை வரை இறங்கி யுள்ளது. இதுவரை சுமார் 250 புள்ளிகள் இறங்கி யுள்ளது. சென்ற வாரத்தில் திங்களன்று விடுமுறை தினமாக இருந்தது. பின்பு, செவ்வாயன்று கொஞ்சம் இறங்கி, சிறிய ஸ்பின்னிங் டாப் என்ற உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. இது இறக்கத்தைத் தடுப்பதற்கானதொரு முயற்சியாகும்.
ஆனால், அடுத்த நாளான புதனன்று வலுவாக இறங்கியது. அன்று குறைந்தபட்ச புள்ளியாக 29258 என்ற அளவைத் தொட்டு, பின் 29331 என்ற புள்ளியில் முடிவடைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்!



எனவே, தற்போது இந்த 29258 என்ற புள்ளி ஒரு வலுவான ஆதரவாக மாறியுள்ளது.  வியாழனன்று ஒரு கேப்அப்பில் துவங்கினாலும், தொடர்ந்து ஏறமுடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. 

இனி என்ன நடக்கலாம்? சென்ற வாரத்தில் இறங்குவதற்கான ஒரு முயற்சி நடந்துள்ளது. சுமார் 250 புள்ளிகளும் இறங்கியுள்ளது. ஆனால், அது ஒரு வலுவான இறக்கமாக மாற வேண்டு மானால், கீழே தற்போது எடுத்துள்ள ஆதரவான 29258-யை உடைக்க வேண்டும். அப்படி இறங்கினால் இறக்கம் கடுமையானதாக மாறலாம்.

அடுத்த முக்கிய எல்லைகள் 29100, 28950, மற்றும் 28800. பின்பு பெரிய வீழ்ச்சி வரலாம். மேலே 29600 என்பது மிக வலுவான தடை நிலையாக உள்ளது.  இதைத் தாண்டினால், புதிய ஏற்றம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி (மினி)

வெள்ளியின் விலைப்போக்குக் குறித்து, சென்ற வாரம் சொன்னது: “டெக்னிக்கல் அனாலிசிஸ்படி பார்த்தால், வரலாறு திரும்பத் திரும்ப வருவது தெரியும். அந்த வகையில், வெள்ளி யிலும் வரலாறு திரும்பியுள்ளது. எனவே, ஆதரவு 39500 என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.’’  

இதுவரை வலுவாக இருந்த ஆதரவு நிலையான 39500 என்ற எல்லை உடைக்கப்பட்டு, வெள்ளி இறங்கியது. இறங்கி, இறங்கி 39026 என்ற எல்லையைத் தொட்டது. பின், அடுத்தடுத்த நாள்களில் நடந்த வியாபாரம் மிகக் குறுகிய எல்லைக்குள் நடந்தது. எனவே, அடுத்த கட்டமாக மிகப் பெரிய நகர்வு வரலாம். 

கமாடிட்டி டிரேடிங்!

இனி என்ன நடக்கலாம்?   தற்போதைய ஆதரவு எல்லையான 39026 என்ற எல்லை உடைக்கப் படுமா என்று பார்க்கவேண்டும். அப்படி உடைக்கப்பட்டால், 28650 என்ற எல்லையை அடையலாம். அதன்பின், பெரிய அளவில் இறங்கி 800 - 1000 புள்ளிகளை இழக்கலாம். மேலே 39400 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.  இந்தத் தடையை உடைத்து ஏறினால், ஒரு புல்பேக் ரேலி வரலாம். இதன் அடுத்த எல்லை 40100 ஆகும்.  

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது... “நாம் சொன்னது போலவே கச்சா எண்ணெய் 3250 என்ற ஆதரவைத் தொட்டு உயர ஆரம்பித்தது. மேலே 3310-யை உடைத்தவுடன் வலிமையான ஏற்றம் நிகழ்ந்துள்ளது. இது 3490 வரையும் சென்றது. இனி 3380 என்பது வலிமையான ஆதரவாகும்.”  

கச்சா எண்ணெய் இந்த வலிமையான ஆதரவை உடைத்தது. பின்பு மளமளவென்று இறங்கியது. 3249 என்ற எல்லையைத் தொட்டது. 3250 என்பது முக்கிய ஆதரவு எல்லை என்று சொல்லி இருந்தோம். அந்த ஆதரவு எல்லை வரை இறங்கி லாபத்தைக் கொடுத்தது.  அதாவது, 3380-க்குக் கீழே விற்று வாங்கியவர் களுக்கு 130 புள்ளிகள் வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. இனி இந்த 3250 என்ற ஆதரவு எல்லை உடைக்கப்படாதவரை மீண்டும் மீண்டும் ஏறலாம்.  தற்போது 3350 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

மென்தா ஆயில் பற்றி சென்ற வாரம் சொன்னது. “இனி வியாபாரம் செய்வதற்கு நாம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம்.  அக்டோபர் மாத கான்ட்ராக்டிலும் தற்போது 1190 என்பது பலமான தடைநிலையாக உள்ளது.  இது உடைக்கப்படாதவரை விற்று வாங்கலாம்.   ஆனால், 1190 என்ற எல்லை உடைக்கப்பட்டு ஏற ஆரம்பித்தால், ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் உருவமைப்பு ஏற்பட்டு, தற்காலிக ஏற்றம் வரலாம்.”

அந்தத் தற்காலிக ஏற்றமும் வந்தது. மேலே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1190-யை  உடைத்து, வலிமையாக ஏற ஆரம்பித்தது.  கடந்த வாரம் செவ்வாயன்று தடைநிலையான 1190-யை உடைத்து 1203 என்ற எல்லை வரை நகர்ந்தது. அடுத்த நாளான புதன்கிழமை மிக வலிமையாக ஏறி, 1213 என்ற எல்லையைத் தொட்டது.  அடுத்து வியாழனன்று அதைவிடப் பலமாக ஏறி, 1227 வரை ஏறியது.  இது, குறுகிய காலத்தில் ஏறிய வலுவானதொரு ஏற்றமாகும்.   

ஆனாலும், சென்ற வாரம், நான் மென்தாயில் தடைநிலை பற்றி சொல்லும்போது 1228 என்ற எல்லை, சில வாரங்களாக வலிமையான தடைநிலையாக மாறியுள்ளதைக் கூறினேன்.    ஆகஸ்ட் மாதம், முக்கிய தடை நிலையாக இருந்த 1228 என்ற எல்லை, அடுத்தடுத்து வந்த ஏற்றங்களையும் அதே எல்லையில் தடுத்து நிறுத்தியது. சென்ற வாரத்தில் செவ்வாய் முதல் வியாழன் வரை தொடர் ஏற்றத்திலிருந்த மென்தா ஆயில்,  வெள்ளியன்று 1228 என்ற வலிமையான தடை நிலையைக் கடக்க முடியாமல் கீழ்நோக்கித் திரும்பியுள்ளது.

இனி என்ன செய்யலாம்? மென்தா ஆயில் 1228 என்ற எல்லையில் தடுத்து இறங்கும் நிலையில் அங்கு ஒரு பியரிஷ் என்கல்ஃபிங் உருவமைப்பைத் தோற்றுவிக்கலாம். அடுத்து 1200 என்ற எல்லை முக்கிய ஆதரவு எல்லையாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டு இறங்கினால், இறக்கம் சற்றே வலுவானதாக இருக்கலாம்.  கீழே முக்கிய ஆதரவு எல்லைகள் 1176 மற்றும் 1144 ஆகும்.   மேலே 1228 என்ற தடைநிலையை உடைத்தால் மிகப் பெரிய ஏற்றம் வரலாம்.  

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

சென்ற வாரம் சொன்னது... “இனி 18700 என்ற எல்லையைத் தாண்டி ஏறினால், அது ஒரு டபுள் பாட்டம் உருவமைப்பைத் தோற்றுவித்து, பெரிய ஏற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த டபுள் பாட்டத்தை அளவீடாக எடுத்தால், 18240 என்ற கீழ் எல்லைக்கும் 18700 என்ற மேல் எல்லைக்குமுள்ள இடைவெளி 460 புள்ளிகளாகும். ஆக, மேல் எல்லையான 18700 உடைக்கப்பட்டால், அது படிப்படியாக 18850, 19050 மற்றும் 19160 வரை ஏறலாம். கீழே 18240 என்பது இன்னுமொரு  வலிமையான ஆதரவாகவே உள்ளது.  இது உடைக்கப்படும்போது, பெரிய வீழ்ச்சி வரலாம்.”

இன்னமும்  இந்த எல்லைகளுக்கு இடையேதான் வியாபாரம் நடந்து வருகிறது.  சென்ற வாரத்தில் இந்த எல்லைகளின் ஆதரவு எல்லையை நோக்கி கொஞ்சம் நகர்ந்து, அதன் பின் படிப்படியாக மேலே ஏற ஆரம்பித்து, மேல் எல்லையை நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது மேல் எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டு வருகிறது. மேலே 18700 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டுவரும் நிலையில், அதை உடைத்தால் 18850, 19050-யை நோக்கி நகரலாம்.

அதே சமயம், கீழே இறங்கும்போது உடனடி ஆதரவாகவிருப்பது 18540 ஆகும். இது உடைக்கப்பட்டு இறங்கினால்,  முதல் கட்டமாக 18390 என்ற எல்லையை அடையலாம். அதையும் உடைத்து இறங்கினால், நாம் ஏற்கெனவே தந்துள்ள மிக முக்கிய ஆதரவு எல்லையான 18240 என்ற எல்லையை நோக்கி நகரலாம். கீழே  18240-யை உடைத்து இறங்கினால் பெரிய இறக்கம் வரலாம்.  அதே சமயம், அந்த ஆதரவு விலையை அடைந்தால்,  எடுக்கப்பட்டால், மீண்டும் மேல் எல்லையை நோக்கி நகரலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism