நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

தங்கம் மினி

தங்கத்தின் நகர்வை நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அதன் நகர்வு, டவுன் டிரெண்ட் சேனலுக்கு உட்பட்டே இருப்பதைப் பார்த்தோம். ஆனால், இதில் ஒரு மாற்றம் உண்டு. அதாவது, தங்கம் டவுன் டிரெண்ட் சேனலின் கீழ் எல்லையை ஆதரவாக எடுத்து மேலே நகர தொடங்கியதைப் பார்த்தோம். அதேபோல் சேனலின் மேல் எல்லையில் இன்னும் தடுக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் பார்த்தோம். தங்கம் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த வேளையில், காளைகள் அதை மேலே திருப்ப ஒரு முயற்சியை எடுத்தார்கள். ஆனால், தங்கம் மீண்டும் ஒரு பக்கவாட்டு நகர்வுக்குள் சென்றது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற இதழில் சொன்னது... “தங்கம் ஒரு நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, ஒரு பக்கவாட்டு நகர்வில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கீழே தற்போது 29350 என்ற எல்லையை உடனடி ஆதரவாக எடுத்துள்ளது. உடைத்தால் இறக்கம் தொடரலாம். மேலே 29800 என்பது இன்னும் வலுவான தடைநிலையாக உள்ளது.”

நாம் சென்ற இதழில் கொடுத்த ஆதரவுநிலையான 29350 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும். கரடிகள், சென்ற வாரம் புதனன்று அந்த ஆதரவு நிலையான 29350-ஐ உடைத்து பலமாக இறங்கின. தங்கம் வேகமாக இறங்கி 29301-ல் முடிந்தது. அடுத்து வியாழனன்று அந்த இறக்கம் பலமானதாகவே இருந்தது. கீழே 29067 வரை இறங்கி, பின் 29101-ல் முடிந்தது. தற்போது 29100 என்பது 2017 ஆகஸ்ட் மாதம் முதல் தக்கவைக்கப்பட்ட ஆதரவுநிலையாகும்.  எனவே, காளைகள் இந்த ஆதரவைத் தக்கவைக்க மீண்டும் முனையலாம்.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? தங்கம் 29800 என்ற முந்தைய தடைநிலையில் இருந்து தொடர்ந்து இறங்கி வருகிறது. தற்போது 29100 என்ற எல்லைவரை இறங்கிய நிலையில், ஒரு புல்பேக் ரேலி வரலாம். இந்த புல்பேக் ரேலியால் முந்தைய ஆதரவுநிலையான 29350 என்ற எல்லை தற்போது தடைநிலையாக மாற வாய்ப்பிருப்பதால், அதுவரை ஏறி, அங்கு வலிமையாகத் தடுக்கப்படலாம். அதைத் தாண்டினால் 29650 வரை ஏறி பக்கவாட்டு நகர்வுக்கு மாறலாம். கீழே 29100 உடைக்கப்பட்டால் அடுத்து பெரும் இறக்கம் வரலாம்.    

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்வெள்ளி மினி

வெள்ளியானது காளைகளுக்கும், கரடிகளுக்கும் இடையே மாட்டித் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற சூழலில், யார் வெற்றி பெற்றாலும், அந்த நகர்வு வலிமையானதாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியது  நடந்துவிட்டது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது... “தற்போதைய முக்கிய ஆதரவு நிலை 39450 ஆகும். உடைத்தால் நல்ல இறக்கம் வரலாம்.”  சென்ற வாரம் செவ்வாயன்றே இறக்கம் பலமானதாக இருந்தது. அடுத்து புதன், வியாழன் என்று தொடர் இறக்கம் நிகழ்ந்தது. இதனால் வியாழனன்று 38310 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு வலிமைகுன்றியே காணப்பட்டது. 

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி தொடர் இறக்கத்தில் இருக்கிறது. உடனடி ஆதரவுநிலை என்பது 38150 ஆகும். இது உடைக்கப்பட்டால், ஆயிரம் புள்ளிகள் வரைகூட இறங்கி 37000-த்தை தொடலாம். அதன்பின் படிப்படியாக 36450 -ஐ நோக்கி நகரலாம். மேலே 38900 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இதைத் தாண்டினால், ஒரு புல்பேக்ரேலி வரலாம்.

கச்சா எண்ணெய் மினி

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு நாடுகள் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்திருந்தன.  இந்த நிலையில், நவம்பர் 30-ம் தேதி நடந்த கூட்டத்தில் உற்பத்திக் குறைப்பை டிசம்பர் 2018 வரை நீடிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற இதழில் சொன்னது... “கச்சா எண்ணெய் தற்போதைய ஆதரவு நிலை 3579 ஆகும். இருந்தாலும், நாம் இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்து 3570 என்று வைத்துக்கொள்ளலாம். அதாவது, நம்முடைய எல்லா வாங்குதலுக்கும் 3570-ஐ ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளலாம்.”

இன்னும் 3570 என்ற ஆதரவுநிலை வலுவாகவே உள்ளது. இந்த வலுவில்தான் கச்சா எண்ணெய் 3815 வரை ஏறியது. அதன்பின், சென்ற வாரம் 3660 வரை இறங்கியது. தற்போது ஓபெக் நாடுகளின் முடிவின் அடிப்படையில் மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தற்போது உடனடி ஆதரவு 3640. மிக முக்கிய ஆதரவு 3570 ஆகும். இவற்றை ஸ்டாப்லாஸாக வைத்து வியாபாரம் செய்யலாம். தற்போது 3815 என்பது தடைநிலை ஆகும்.

அக்ரி கமாடிட்டி பகுதியைப் படிக்க: http://bit.ly/2Br9Dio