Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 6

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 6

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

பிசினஸ்மாடல்களில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட் பிளேஸ் (Marketplace) வகை பிசினஸ். இதற்குச் சரியான உதாரணம், உபெர் நிறுவனம். உலகமெங்கும் கால் டாக்ஸி துறையில் கலக்கிவரும் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக ஒரு கால் டாக்ஸிகூட கிடையாது. அனைத்துமே டிரைவர்களின் டாக்ஸிகள்தான். வாடிக்கையாளருக்கும், டிரைவருக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவது மட்டும்தான் உபெரின் பணி. இதுதான் மார்க்கெட் பிளேஸ் வகை பிசினஸ். இதற்கு உள்ளூர் உதாரணங்களாக ஃப்ளிப்கார்ட், ரெட் பஸ், மிந்த்ரா, ஸொமேட்டோ போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதேபோல முதல் முறையாக பிரின்ட்டிங் துறையில் புதிய மார்க்கெட்பிளேஸை உருவாக்கி அசத்தி வருகிறது இங்க்மாங்க் நிறுவனம். இந்த நிறுவனம் அடைந்த வெற்றிக்கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்  அதன் நிறுவனர்களான ஐசக் ஜான் வெஸ்லி மற்றும் சூர்யா சங்கர் இருவரும். 

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

இன்ஸ்பிரேஷன்

“சில ஆண்டுகளுக்குமுன் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். நான் அங்கே இருந்த சமயம், பேருந்து டிக்கெட் முன்பதிவு, தியேட்டர் டிக்கெட் முன்பதிவு, கால்டாக்ஸி சேவைகள் எனத் தொடர்ந்து பல துறைகள் இணையமயமாகிக் கொண்டிருந்தன. இதனை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் விரைவாகவும் வளர்ந்தன.

என் அப்பா ஊரில் ஒரு பிரின்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எனவே, பிரின்ட்டிங் குறித்து ஏற்கெனவே எனக்குத் தெரியும். இந்திய வர்த்தகத்தில் அதிகளவில் பங்கு வகிக்கும் துறைகளில் ஒன்று பிரின்ட்டிங். ஆனால், இது மட்டும் ஆன்லைன் பக்கமே வராமல் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. இந்தப் பிரச்னையை ஏன் தீர்க்கக்கூடாது என யோசித்தோம். அப்படி உருவானதுதான் இங்க்மாங்க்.

அடித்தளம்

அச்சுத்தொழிலுக்கான ஒரு மார்க்கெட்பிளேஸை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். சூர்யா சங்கரும், நானும் இணைந்து அதற்கான பணிகளைத் தொடங்கினோம். முதல்கட்டமாக குறைந்தபட்சம் 20 ஸ்டிக்கர்கள் முதல் ஆர்டர் செய்யலாம் என அறிவித்தோம். இவ்வளவு குறைவான எண்ணிக்கையில், குறைவான விலையில் டைகட்டிங் ஸ்டிக்கர்கள் வேறு எங்கும் கிடைக்காது. எனவே, எங்கள் விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்த திட்டமிட்டு செயல்படத் தொடங்கினோம். எங்களுடைய இந்த யோசனை பிடித்திருந்ததால், நிறையபேர் முதலீடு செய்ய முன்வந்தனர். பிற நிறுவனங்களின் நிறுவனர்கள் கூட முதலீடு செய்தனர். இது எங்களுக்கு மேலும் ஊக்கமாக இருந்தது.

பின்னர், பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினோம். வாடிக்கையாளர்களைச் சம்பாதிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை முழுமையாக பயன்படுத்தினோம். ஆன்லைனில் ஆர்டர் கொடுப்பதிலிருந்து அவற்றை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது வரைக்கும் எல்லாவற்றிற்கும் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கினோம். அச்சகங்களைச் சந்தித்து எங்கள் திட்டத்தை எடுத்துக் கூறினோம். அவர்கள் உடனே இதை ஏற்றுக்கொண்ட தால், விரைவாக அவர்களை உள்ளே கொண்டு வந்தோம்” என்கிறார் ஐசக்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - அச்சகங்களை இணைக்கும் அசத்தல் ஸ்டார்ட் அப்

இந்த நிறுவனத்தை வளர்த் தெடுப்பதில் சந்தித்த சவால்கள் குறித்தும், அதைச் சமாளித்தவிதம் குறித்தும் தொடர்ந்து சொன்னார் சூர்யா.

சவால்கள்

“அச்சுத்தொழிலானது இந்தியா வின் மிகப் பெரிய துறைகளில் ஒன்று. மிக எளிதாக இதனை ஆன்லைனுக்கு கொண்டுவந்துவிட முடியும் என நினைத்தோம். அது தவறு என்பது பின்பு புரிந்தது. ஒருவருக்குத் திடீரென விசிட்டிங் கார்டு தேவையெனில், உடனே அருகில் இருக்கும் ஒரு அச்சகத் திற்கு செல்வார். எத்தனை கார்டு கள், என்ன விலை, என்ன டிசைன், எப்போது வேண்டும் போன்ற அனைத்து விவரங்களையும் அங்கே தெரிவித்துவிட்டு ஆர்டர் தருவார். நேரில் செல்லும்போது இது சுலபமாக முடியும்.  சவாலான இந்த வேலையைத் தொழில் நுட்பத்தின் மூலம் ஆன்லைனில் சரியாக செய்து முடித்தோம். 

இந்தச் சேவை பற்றி எடுத்துக் கூறியதும் உடனே நிறைய வணிகர்கள் எங்களுடன் இணையத் தயாராக இருந்தனர். ஆனால், அவர்களின் நகரம், தரம் போன்றவற்றைச் சரிபார்த்தபின்பே இணைத்தோம். தற்போது 70 வணிகர்கள் நிரந்தரமாக எங்கள் நெட்வொர்க்கில் இருக்கின்றனர். சுமார் 1000 பேர் வரை தற்காலிகமாக இருக்கின்றனர்.

முதலில் தனிநபர்கள் மட்டும்தான் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பின்பு நிறுவனங்களையும் இலக்காக கொண்டுவந்தோம். ஒவ்வொரு வருடமும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக டி-ஷர்ட்கள், பிசினஸ் கார்டுகள், கோப்பைகள், காகித பைகள், தொப்பிகள், டைரிகள் என நிறைய பொருட்களை அச்சிடு கின்றன. இவையனைத்தையும் ஆர்டர் களாக மாற்றி, வெற்றியடைந்தோம்.

வெற்றி

பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதுபோலவே, பிரின்ட்டிங் தொடர்பான பணிகளை ஆன்லைன் மூலமே செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். உதாரணமாக, ஒருவர் விசிட்டிங் கார்டு ஒன்றை அச்சிட வேண்டும் என வைத்துக்கொள்வோம். இங்க்மாங்க் தளத்திற்குச் சென்று மிக எளிதாக ஆர்டர் செய்துவிடமுடியும். எந்தக் காகிதம், எத்தனை கார்டுகள், எது மாதிரியான டிசைன், எவ்வளவு தொகை என அத்தனை அம்சங்களையும் இணையத்திலேயே செய்துவிடமுடியும்.

இதேபோல, டைரிகள், டி-ஷர்ட், லெட்டர் ஹெட், பேனர்கள், தொப்பிகள் என மொத்தம் 30 வகையான பொருள்களை ஆன்லைனிலேயே அச்சிட முடியும். எந்த நிறுவனம் குறைவான செலவில் அச்சிடும், எது விரைவில் டெலிவரி செய்யும், எதற்கு அதிக ரேட்டிங் இருக்கிறது என எல்லா விஷயங்களையும் வாடிக்கையாளரே பார்த்துக்கொள்ள முடியும். இதன்மூலம் வாடிக்கையாளர் மட்டுமல்ல, அச்சுத் தொழிலில் இருப்பவரும் பயனடைவர். அச்சுத்தொழிலில் இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று, குறைவான ஆர்டர்கள் மட்டும் வருவது. ஆனால், ஆன்லைன் மூலம் நிறைய ஆர்டர்கள் வருகிறது என்பதால் அவர்களுக்கும் லாபம் கிடைத்தது.

இலக்கு

ஏற்கெனவே கூறியது போல, இந்தியாவில் அச்சுத்தொழில் என்பது மிக மிகப் பெரியது. தற்போது, ஆன்லைனில் நாங்கள் தீவிரமாக இயங்கிவந்தாலும்கூட இன்னும் மொத்த வணிகத்தில் ஒரு சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை. இதனை மாற்றி, கூடியவிரைவில் ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிப்பதே எங்கள் இலக்கு” என உற்சாகமாகக் கூறுகிறார் சூர்யா.

சரியான நேரத்தில்...


“ஒரு பொருள் என்னதான் சிறப்பானதாக இருந்தாலும், அதைச் சரியான இடத்தில், சரியான நபரிடம் விற்றால்தான் விற்கும். அதேபோல்தான் ஸ்டார்ட்அப்பும்; சரியான நேரத்தில் தொடங்கப்பட வேண்டும்” என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தனர் இருவரும்.

ஞா.சுதாகர்,

படங்கள்: ப.பிரியங்கா

டிஜிட்டல் மார்க்கெட்டிங்  ஏன் முக்கியம்?

இங்க்மாங்க் நிறுவனத்தின் சூப்பர்ஹிட் ஃபார்முலாக்களில் ஒன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங். ஏன் இது அவசியம் என்பது குறித்து விளக்குகிறார் ஐசக்.

“எங்களுடைய பெரும்பாலான ஆர்டர்கள் பகலில் நடப்பதில்லை; இரவு 11 மணிக்கு மேல்தான் நடக்கின்றன. அதாவது, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ரிலாக்ஸாக இருக்கும்போது ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலமாகவோ, கூகுள் மூலமாகவோதான் எங்களிடம் நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். நம் பிராண்டின் மதிப்பை உயர்த்தவோ, வாடிக்கையாளருக்கு நம் நிறுவனம் குறித்து நினைவுபடுத்தவோ வேண்டுமானால் சாதாரண விளம்பரங்கள் உதவலாம். ஆனால், நிறைய வாடிக்கையாளர் களைச் சென்று சேர்வதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்தான் சரியானது. மேலும், சரியான நேரத்தில், சரியான வாடிக்கை யாளர்களைக் கண்டறியவும் இவைதான் உதவுகின்றன.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism