Published:Updated:

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி

நாணயம் விகடன் சார்பில் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ‘பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ’ நிகழ்ச்சி வாசகர்களின் ஏகோபித்த வரவேற்புடனும், ஆதரவுடனும்  நடந்தது. தொடக்க விழா முடிந்ததும், பங்குச் சந்தை நிபுணர்கள் பேச ஆரம்பித்தனர்.    

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

முதலில், ஈக்னாமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கம் பேசினார். ‘2018-ல் நல்ல லாபம் பார்க்க முடியுமா?’ என்கிற தலைப்பில் அவர் பேசினார். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை வைத்துப் பங்குச் சந்தையின் போக்கைச் சொன்ன விதம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவர் பேசியதாவது...

“பங்குகளில் முதலீடு செய்யும் போது இ.பி.எஸ் (EPS) மற்றும் பி.இ (P/E) இரண்டும் மிக முக்கியம். உங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டுமெனில், பங்கு விலை உயர வேண்டும். பங்கு விலை உயர வேண்டு மெனில், இ.பி.எஸ்-ம், பி.இ-ம் அவசியம். இதைப் பார்ப்பது எப்படி என்பதை இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

ஒரு பங்கின் விலை 10 ரூபாய் குறைந்தவுடன், அந்தப் பங்கின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார்கள். விலை குறைவாக இருந்த காலத்தில் பலரும் வாங்கவில்லை. அந்தப் பங்கு பின்னர், 4,000 ரூபாய்க்கு விற்பனையானது. அந்த  அதிக விலையில் வாங்கிய பலரும் லாபம் சம்பாதிக்கவில்லை.  சந்தையில் உங்களால் பணம் சம்பாதிக்க முடிய வில்லை என்பதற்காக அதனைக் குறை சொல்லாதீர்கள். 

 பங்கு விலை சரியும்போது ஃபண்டமெண்டலில் மாற்றம் இல்லை என்றால், அதே பங்கை  மீண்டும் வாங்கிச் சேர்க்கலாம். 10% வரைக்கும் வாங்கி சராசரி செய்யுங்கள். பயப்படாமல் நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்.  

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

பங்குச் சந்தை, 2017-ம் ஆண்டில் நல்ல வருமானத்தை வழங்கி இருக்கிறது. ஆனால், இது 2018-ம் ஆண்டில் தொடருமா என்பதைக் கணிப்பது கடினம். 2017-ல் நல்ல வருமானத்தைப் பார்த்திருந்தால், அதனைப் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். 2018-ம் ஆண்டில் பங்குச் சந்தை 10 - 15% மேல் உயரலாம். அதற்குமேல் பிரமாதமாக உயர வாய்ப்புகள் குறைவு. குறுகிய காலத்தில் சந்தையின் போக்குச் சரியில்லாமல் இருந்தாலும், நீண்ட கால நோக்கில் நல்ல நிலையில் இருக்கிறது” என்றார் சொக்கலிங்கம்.

யூனிஃபை கேப்பிட்டல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி. மாறன், ‘தொழில்நுட்ப இடையூறு (Disruption) காலத்தில் சந்தை சந்திக்கவேண்டிய சவால்கள்’ என்கிற தலைப்பில் பேசினார்.

“கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் வாகனச் சந்தையின் வளர்ச்சியையும், மொபைல் சந்தையின் வளர்ச்சியையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். 1980-ம் ஆண்டில் நடத்திய கணிப்பு ஒன்றில், 2000-ம் ஆண்டு ஒன்பது லட்சம் பேர் மொபைல் போனைப் பயன்படுத்துவார்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், 2000-ம் ஆண்டில் 109 மில்லியன் பேர் பயன்படுத்தினார்கள். ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களும், ஒட்டுநர் இல்லாத கார்களும் வரவிருக்கின்றன. இன்னும் 20 வருடங்களில் வாகன ஒட்டுநர் உரிமமே தேவையில்லை என்று நிலைக்கு மாறி வருகிறோம்.   

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

பொதுத்துறை வங்கிகள் மட்டும் இருந்தன. அந்த நிலைமை மாறி, தனியார் வங்கிகளின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. நிதித் துறை, மொபைல் பேங்கிங் எனப் பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பட்டியலில் 35% வங்கிகள், 15% ஐடி நிறுவனங்கள், 15% நுகர் பொருள் நிறுவனங்கள், 11% ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என நான்கு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களே சுமார் 75 சதவிகித சந்தையின் போக்கை நிர்ணயிக்கின்றன.

இந்தத் துறைகளில் நடக்கும் மாற்றங்கள் சந்தையில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கும்போது இந்த  நிறுவனங்களின் துறைகளின் சிதறல்களையும், வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என்று ஆலோசனை சொன்னார் மாறன்.  

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

குரோத் அவென்யூஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.கே.நாராயண், ‘‘சிறு முதலீட்டாளர்கள் சந்தையில் லாபமீட்ட உதவும் டெக்னிக்கல் அனாலிசிஸ்’’ என்ற தலைப்பில்  பேசினார்.

‘‘செய்தித்தாள்களில் காலாண்டு முடிவுகளை வெளியிடும்போது நிறுவனத்தின் விற்பனை,  நிகர லாபம், ஒரு பங்கின் மீதான வருமானம் (EPS) என்று சில தகவல்களைக்  கொடுப்பார்கள்.  இந்தத் தகவல்களைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அந்தப் பங்கின் எல்லா மதிப்புகளும் கூடியிருக்கும். இவ்வாறு அதிகரித்த  நிறுவனத்தின் பங்கு விலை எட்டு, ஒன்பது ஆண்டுகளாக மாற்றம் இல்லாமலேயே இருந்தது. இந்த நிறுவனப் பங்கை வாங்கி இருந்தால் எந்த வருமானத்தையும் பார்த்திருக்க முடியாது.

மற்றொரு நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளாக விற்பனை, லாபம் என எல்லாம் சரிந்திருந்தாலும், பங்கின் விலை ஒரே வருடத்தில் 25 ரூபாய் விலையில் இருந்து 250 ரூபாய் வரை உயர்ந்திருக் கிறது. எல்லா நிறுவனத்திலும் இதுபோன்று நடப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும்  சில நிறுவனங்களின் பங்கு விலை, மிகப் பெரிய ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும் 25% லாபம் தந்துள்ளதைப் பார்க்க முடியும். ஆக, நீங்கள் எந்தப் பங்கை வேண்டு மானாலும் வைத்திருக்கலாம். அந்தப் பங்கு முதலீட்டின் மூலம் நீங்கள் லாபம் பார்த்தீர்களா என்பதுதான் முக்கியம்.   

நாணயம் விகடன் கான்க்ளேவ்... - 2018-ல் பங்குச் சந்தையில் லாபம் கிடைக்குமா?

ஒரு நிறுவனத்தின் லாபம், விற்பனை, நிர்வாகம் எனப் பல காரணிகள் பங்கின் விலையை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு காரணியும் மற்ற காரணிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிறுவனங்களின் நிதிநிலைகளைக் கவனிக்க வேண்டும்.

பங்குச் சந்தையைப் புரிந்துகொள்ள சராசரி அறிவு இருந்தால் போதும். பொறுமையும், எவ்வளவு விலையில் விற்பது என முடிவு எடுக்க வேண்டிய தைரியமும் இருந்தால் நீங்கள் வெற்றிகரமான பங்கு முதலீட்டாளராக வலம்வர முடியும்” என்று நம்பிக்கையோடு சொன்னார் டாக்டர் சி.கே.நாராயண்.

நாணயம் விகடன் கான்க்ளேவ் கலக்கல் கவரேஜ் அடுத்த வாரமும் தொடரும்!    
            
- ஞா.சக்திவேல் முருகன்

படங்கள்: பா.காளிமுத்து, ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism