Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

Published:Updated:
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் மினி

புத்தாண்டில் தங்கம், முதல் வாரம் தடை நிலையைத் தாண்டமுடியாமல் சிரமப்பட்டு இறங்க ஆரம்பித்தது. ஆனால், இரண்டாம் வாரம் இழப்பையெல்லாம் மீட்டு, மீண்டும் சற்றே வலிமையாக மாற ஆரம்பித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கடந்த இதழில் நாம் சொன்னது: “தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்துக்குப்பிறகு, தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வாக, மேலே 29320-ல் தடுக்கப் பட்டும், கீழே 29100 என்ற எல்லையில் ஆதரவை எடுத்தும் நகர்ந்துகொண்டிருக்கிறது.  எப்போதுமே பக்கவாட்டு நகர்வில் இருக்கும்போது, அடுத்து பெரிய நகர்வுகள் வரலாம்.  இனி, மேல் எல்லை யான 29320-ஐ உடைத்தால், அடுத்து 29450 மற்றும் 29780 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம்.”

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்



தங்கம் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையான 29320-ஐ உடைத்து ஏற ஆரம்பித்தது. முதல் எல்லையான 29450-ஐ தாண்டி வலிமையாக ஏற ஆரம்பித்துள்ளது.  சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று சற்றே தயங்கி நகர்ந்தாலும், புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று வலிமையாக ஏறத் தொடங்கியுள்ளது. இது,தங்கத்தின் வலிமையைக் காட்டுகிறது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் சென்ற வாரம் பலமாக ஏறிய நிலையில், உடனடியான வலிமையான தடைநிலை என்பது 29600 ஆகும்.  இந்த எல்லை உடைக்கப்பட்டு ஏற ஆரம்பித்தால், 29700, 29900 என்ற எல்லைகளை அடையலாம்.  அதையும் தாண்டினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம். கீழே 29320 என்பது மிக மிக முக்கிய ஆதரவு ஆகும். இதை உடைத்தால் புதிய இறக்கம் வரலாம்.

வெள்ளி மினி

வெள்ளியும், தங்கத்தைப் போலவே நகரும் என்று ஒவ்வொரு முறையும் சொல்வோம். ஆனால், கடந்த வாரம் வெள்ளி, தங்கத்தை யொட்டி சில நாள்கள் நகர்ந்தாலும், சில நாள்கள், தங்கத்துக்கு எதிர் திசையிலும் நகருவதைப் பார்த்தோம். அதைப்போன்ற நகர்வு தொடருவதற்கும், வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் நாம் சொன்னது: “வெள்ளி தற்போது மேலே 39420 என்ற எல்லையில் வலிமை யாகத் தடுக்கப்படுகிறது. கடந்த ஐந்து நாள்களாகத் தடுக்கப்பட்டுவரும் இந்த எல்லையை உடைத்தால், அடுத்த முக்கியத் தடைநிலையான 40300-ஐ நோக்கி நகரலாம்.”

வெள்ளி, 39420 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல், கடந்த வாரம் முழுவதும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது சில பலமான இறக்கங்கள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு மேல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.  ஆனால், மேல் தடைநிலையான 39420-ஐ உடைக்க முடியாமல் மீண்டும், மீண்டும் கீழே இறங்கியது.”  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி, தொடர்ந்து மேலே 39420 என்ற சென்ற வார தடைநிலையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. கீழே 38850 என்பது முக்கிய ஆதரவுநிலை. இது உடைக்கப் பட்டால், இறக்கம் பலமானதாக இருக்கலாம்.

கச்சா எண்ணெய் மினி


கச்சா எண்ணெய் விலை, சென்ற வாரம் வரலாறு படைத்துள்ளது. 2015 மே மாதத்தின் தடைநிலையான 3960-ஐ உடைத்தது. அதுமட்டும் அல்லாமல், 4000 என்ற வலிமையான தடை நிலையை உடைத்து பலமாகவும்
ஏறியது.   

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற இதழில் சொன்னது: “கச்சா எண்ணெய்,  சற்றே வலிமையாக ஏற முயற்சி செய்தாலும், 3950-ல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏறி னாலும் 4000 என்பது வலுவான தடை நிலையாகும். இதை உடைத்தால், பலமான
ஏற்றம் வரலாம்.”

கச்சா எண்ணெய், சென்ற வாரம் வலுவான தடைநிலையான 3950-ஐ உடைத்து ஏறி, அடுத்த மகத்தான தடையான 4000-த்தையும் உடைத்து ஏறியது. 11.1.18 அன்று இன்னும் வலுவாக ஏறி 4123 என்ற எல்லையையும் தொட்டது.

இனி என்ன நடக்கலாம்? இந்தத் தொடர் ஏற்றத்துக்குப்பிறகு, ஒரு ரிடிரேஸ்மென்ட் வரலாம்.  அப்படி இறக்கம் வரும்போது, முன்பு தடை நிலையாக இருந்த 4000 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும், அடுத்து 3950 என்பது அடுத்த முக்கிய ஆதரவாக இருக்கலாம். உடைத்தால் வலிமையான இறக்கம் வரலாம்.

அக்ரி கமாடிட்டிப் பகுதியைப் படிக்க: http://bit.ly/2D6Y0CJ