Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 11

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 11

Published:Updated:
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!
பிரீமியம் ஸ்டோரி
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

ல்வித்துறையில் இயங்கும் ‘எஜுகேஷன் ஸ்டார்ட்அப்கள்’ சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரோபோக்கள் பற்றிய கல்வியை (Robotics) வெற்றிகரமாகக் கொண்டு சென்றிருக்கிறது எஸ்.பி ரோபோட்டிக் வொர்க்ஸ் ஸ்டார்ட்அப் (SP Robotic Works). அதன் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார் அதன் நிறுவனரான ஸ்னேஹா.

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

  இன்ஸ்பிரேஷன்

“நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்தேன். என் கணவரான ப்ரணவனும் அங்கே தான் படித்தார். எங்கள் இருவருக்குமே ரோபோட்டிக்ஸ்மீது ஆர்வம் அதிகம். ஆனால், எங்கள் பாடத்தில் ரோபோட்டிக்ஸ் குறித்து எதுவுமே இருக்காது. எனவே, அதுகுறித்து இணையத்தில் தேடித் தேடி தெரிந்துகொண்டோம். பின்னர் ரோபோக்களை உருவாக்கி, போட்டி களுக்கெல்லாம் அனுப்பிவைக்கத் தொடங் கினோம். பல இடங்களில் பரிசும் வென்றோம்.

ரோபோட்டிக்ஸ் ஆர்வத்தை அதோடு நிறுத்தாமல் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, பல நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்கும் ரோபோக்களை செய்துகொடுத்தோம். பின்னர், இதையே பிசினஸாக மாற்றினால் என்ன எனத் தோன்றியது.

அப்போதுதான் இதன் இன்னொரு கோணத்தை ஆராய்ந்தோம். பொறியியல் மாணவர்களான எங்களுக்கே ரோபோட்டிக்ஸ் குறித்துக் கற்றுக் கொள்வதற்குச் சரியான இடங்கள் இன்னும் இல்லை. அப்படியெனில் புதிதாக இது குறித்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் என்ன செய்வார்கள் எனச் சிந்தித்தோம். பின்னர்தான் இதனை மாணவர்களுக்கும் கற்றுத்தர, வகுப்புகளைத் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். உடனே இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். ‘Kidobotikz’ என்ற பிராண்ட் பெயரில் ரோபோட்டிக்ஸ் சொல்லித் தரவும் தொடங்கினோம். அப்படித்தான் எங்கள் பயணம் தொடங்கியது. 

   அடித்தளம்


ரோபோடிக்ஸ் படிக்க விரும்பும் மாணவர்களை எப்படி வரவழைக்கலாம் எனச் சிந்தித்தபோது சுவாரஸ்யமான ஒரு ஐடியா கிடைத்தது. அதாவது விளம்பரத்தில் ரோபோக்களையே பயன்படுத்தலாம் என முடிவு செய்தோம். அதன்படி நோட்டீஸ்களை விநியோகிக்க, ஒரு ரோபோவைத் தயார் செய்து ஒரு பள்ளியின் முன்பு நிறுத்தினோம். அதனிடம் நோட்டீஸ் வாங்கவே நிறைய மாணவர்கள் வந்தனர். வகுப்பிலும் சேர்ந்தனர். ஒருகட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, பின்னர் அந்த மையத்தை விட்டு விட்டு நாங்கள் தனியாக ஒரு அலுவலகத்தைத் தொடங்கினோம். அப்போது அங்கு 180 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

சிறுவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் சொல்லித் தருவதற்கான பாடத் திட்டங்களையும் நாங்களே வடிவமைத்தோம். நாங்களே நேரடியாக மாணவர்களுக்குச் சொல்லித் தந்ததால், எப்படிச் சொல்லித் தந்தால் அவர்களுக்குப் புரிகிறது, எதெல்லாம் அவர்களுக்கு அவசியம் என்பதையெல்லாம் ஆராய்ந்து பாடங்களை வடிவமைத்தோம். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பின்னர் எங்கள் மையத்தை விரிவுபடுத்த விரும்பினோம். அங்கேதான் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் காத்திருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ரோபோக்களும் மாணவர்களும்!

   சவால்கள்

முதல் சிக்கல் போதிய ஆசிரியர் கள் கிடைக்காதது. ரோபோட்டிக்ஸ் போன்ற சிக்கலான பாடத்தை ஒரு 11 வயது சிறுவனுக்குச் சொல்லித் தர வேண்டுமென்றால் மிகவும் எளிமைப்படுத்தி, புரியும்வகையில் கற்றுத்தர வேண்டும். இந்தத் தரத்தில் எந்தக் காரணம் கொண்டு சமரசம் செய்துகொள்ளக்கூடாது என நினைத்தோம்.

ஆனால், எங்கள் மையத்தை விரிவுபடுத்தும்போது கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்பட்டார்கள். அவர்களும் எங்கள் அளவுக்கு இதில் கற்றுத்தேர்ந்தவர்களா என்பது சந்தேகம்தான். அடுத்த சிக்கல், எங்களின் Kidobotikz என்ற பெயர். இதைப் பார்த்தபோது பலரும் இது சிறுவர்களுக்கான பிரத்யேக கல்வி என நினைத்தனர். ஆனால், கல்லூரி மாணவர்களும் கற்கலாம். இந்த இரண்டு சிக்கல் களையும் தீர்க்க நாங்கள் தேர்ந்தெடுத்த வழிதான் ஆன்லைன்வழி கற்றல். உடனே Kidobotikz என்ற பெயரை SP ரோபோட்டிக் வொர்க்ஸ் என மாற்றினோம். எல்லாப் பாடங் களையும் ஆன்லைனில் அனிமேஷன் வீடியோக்களாக வெளியிட்டோம். ரோபோக்களைச் செய்வதற்கான பாகங்களையும் ஆன்லைனில் கிடைக்கச் செய்தோம். தற்போது ஒரு மாணவன் எங்களிடம் பயிற்சி பெறவேண்டுமெனில், முதலில் பணம் செலுத்தி ரோபோக்களைத் தயாரிப்பதற்கான ‘கிட்’-ஐ வாங்கவேண்டும். பின்னர் அது எப்படிச் செயல்படும், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பன போன்றவற்றை எங்களின் வீடியோக்களின் மூலம் கற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் என நான்கு பாடங்களையும் எளிதாக மாணவர்கள் புரிந்துகொள்ளமுடியும். இந்தமுறைக்கு மிகக் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

   வெற்றி

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும் பிசினஸில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே முதலீட்டைத் திரட்டினோம். தொழில் நிறுவனங்களுக்காகச் செய்துவந்த புராஜெக்ட்களை முழுமையாக நிறுத்திவிட்டு, இந்தப் பணியில் மட்டும் முழுமையாக ஈடுபட்டோம். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

வருங்காலத்தில் ரோபோக்களின் பங்கு இந்த உலகில் தவிர்க்க முடியாதது. அலுவலகமோ, தொழிற்சாலையோ... அங்கே நிச்சயம் ரோபோக்கள் இருக்கும். எனவே வருங்காலப் பணியாளர்களுக்கு ஒன்று ரோபோக்களைத் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அதனைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே, இன்றைய மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் குறித்தும், புரோகிராமிங் குறித்தும் கற்றுக்கொள்வது அவசியம். ஆனால், நம் நாட்டில் கல்வி நிலையங்களில்கூட இன்னும் இதுகுறித்த பாடங்கள் இடம்பெறவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றுதான் எங்கள் நிறுவனத்தையே தொடங்கினோம்.

இன்று, இதுவரைக்கும் 10,000-க்கும் மேற்பட்டோர் எங்களிடம் பயிற்சி பெற்றுள்ளனர். பல மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்குக்கூட ரோபோக்கள் செய்து கொடுத்துள்ளனர். சில ரோபோக்களுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளோம்.

ஆன்லைன் அனிமேஷன் வீடியோக்கள் மூலம் செய்முறைப் பயிற்சிகள் அளிப்பதுதான் எங்கள் ஸ்பெஷல். இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, ரோபோட்டிக்ஸ் தொடர்பான நிறுவனங்கள்கூட தங்கள் பணியாளர்களை எங்கள் பயிற்சிகளைப் பெறச் சொல்லி அறிவுறுத்துகின்றன. தற்போது ரோபோட்டிக்ஸ் குறித்து மட்டும் நான்கு பயிற்சிகளை அளிக்கிறோம். விரைவில் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பாடங்களையும் அப்டேட் செய்ய உள்ளோம்’’ என்றார் ஸ்னேஹா.

வித்தியாசமாக யோசிக்கும் ஸ்னேஹா, எதிர்காலத்தில் நிச்சயம் ஜெயிப்பார்.

-ஞா.சுதாகர்,

படங்கள்: தே.அசோக்குமார்

எல்லாம் AI பார்த்துக்கொள்ளும்!

மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தர ஏ.ஐ (AI) எப்படி உதவுகிறது என்று சொன்னார் ஸ்னேஹா.

‘‘ஒரு வகுப்பறையில் இருக்கும் எல்லா மாணவர் களுக்கும் ஆசிரியர் ஒரே மாதிரிதான் பாடம் எடுப்பார். ஆனால், அனைவருமே ஒரே மாதிரிப் புரிந்துகொள்ள மாட்டார்கள். எனவே, ஆசிரியர் ஒவ்வொரு மாணவனுக்கும் வெவ்வேறு பாணியில் பாடத்தை விளக்க வேண்டும். அப்போதுதான் புரியும். நேரடியாக வகுப்பறையில் கற்கும்போது ஆசிரியர் இருப்பார். எல்லா மாணவர்களும் பாடத்தைப் புரிந்துகொள்கிறார்களா என அவர் பார்த்துக்கொள்வார். ஆனால், ஆன்லைன் வகுப்பில் இதனை எப்படிச் செய்வது, அதற்குத்தான் நாங்கள் AI-யைப் பயன்படுத்தினோம்.

எங்கள் ஆன்லைன் பிளாட்ஃபார்மில் ஒரு மாணவன் கற்றுக்கொள்கிறார் எனில், பாடங்களுக்கு நடுவே தேர்வுகள் வைப்போம். அதில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து AI தானாகவே அவரின் நிலையைப் புரிந்துகொள்ளும்.

பாடத்தில் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார், எங்கே அடிக்கடி தவறு செய்கிறார், எவ்வளவு வேகமாக கற்கிறார், எந்தப் பாடத்தை மீண்டும் நடத்த வேண்டும் என எல்லா விஷயங்களையும் டேட்டாவாக AI சேமிக்கும். அதற்கேற்ப பாடங்களை நடத்தும்.

எனவே, பாடத்திட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும், அது கற்றுக்கொள்ளும் முறை ஒவ்வொருவருக்கும் மாறும். எனவே, எல்லா மாணவர்களும் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இதுதான் AI-யின் ஸ்பெஷல். எனவே, AI இருந்தால் எல்லா தொழிலிலும் தனித்தன்மையுடன் இயங்கலாம்’’ என்றார்.