Published:Updated:

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!
பிரீமியம் ஸ்டோரி
கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

கே.ராமலிங்கம், இயக்குநர், www.holisticinvestment.in

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

கே.ராமலிங்கம், இயக்குநர், www.holisticinvestment.in

Published:Updated:
கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!
பிரீமியம் ஸ்டோரி
கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

முதலீடுகள் பற்றிச் சரியான தகவல்கள் பரவிவரும்போது, சில தவறான தகவல்களும் மக்கள் மனதில் இடம்பெற்றுவிடுகின்றன. முதலீடுகள் பற்றிய இந்தத் தவறான எண்ணங்கள் மக்கள் மனதிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், மிகப்பெரிய இழப்பினை ஒவ்வொரு மனிதனும் தங்கள் வாழ்நாளில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது நிச்சயம். 

முதலீடு குறித்து மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள தவறான நம்பிக்கைகள் (Myths), செய்யும் தவறுகள் (Mistakes) என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் தவறுகள் நம்மிடம் இருந்தால் உடனடியாக அவற்றைத் திருத்திக்கொள்ளவும் முயற்சி செய்வோம். 

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

1. ஓய்வுக்காலத் திட்டமிடல் வயதானவர்களுக்கு மட்டுமே

“உங்கள் ஓய்வுக்காலம் குறித்துத் திட்டமிட ஆரம்பித்துவிட்டீர்களா?” என 30 வயதில் உள்ள ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். ஏளனச் சிரிப்புதான் உங்களுக்குப் பதிலாகக் கிடைக்கும்.  “இந்த வயசுல நான் ஏன் ஓய்வுக்காலம் பத்தி யோசிச்சுத் திட்டமிடணும்?’’ என்று கேட்பார்கள். ‘‘இது வாழ்க்கையை அனுபவிக்கிற வயசு. இந்த நேரத்துல  அதப்பத்தி யோசிக்கிறது வேஸ்ட் ஆஃப் டைம்’’ என்பார்கள்.

வாழ்க்கை செல்லும் வேகத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசும் பேச்சு இது. காலத்தின் ஜெட் வேக ஓட்டத்தில் கல்யாணம், குழந்தைகள், பள்ளி, கல்லூரிப் படிப்பு, வீட்டுக்கடன் என அடுத்தடுத்து பல விஷயங்கள் வரும்போது, ஓய்வுக்காலத் திட்டமிடல் என்பது மறந்தேபோகும். எனவே, இளம் வயதில் நீங்கள் சம்பாதிக்கும்போதே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிடுவது அவசியம்.

ஓய்வுக்காலத் திட்டமிடல் இல்லாமல் போனால், நீங்கள் உங்கள் ஓய்வுக்காலத்தில் வேறு வழியில்லாமல் கூடுதல் வருடங்கள் வேலை பார்க்க வேண்டியிருக்கும். பணப்  பற்றாக்குறையினால் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

உங்களுடைய ஓய்வுக்கால மருத்துவச் செலவுகளையும் மற்ற அனைத்துச் செலவு களையும் சமாளிக்க, பணவீக்கத்தைக் (Inflation) கணக்கில்கொண்டு இப்போதே  திட்டமிட  வேண்டும். இதன்மூலம் ஓய்வுக்காலத்தில் நீங்கள் நிம்மதியும் பாதுகாப்பும் பெற முடியும்.

2. எஃப்.டி - தான் எப்போதும் பெஸ்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!முதலீடுகளில் எஃப்.டி-யானது  பாதுகாப் பானது. அது உங்களுக்கு நிலையான லாபத்தைத் தரும். ஆனால், நீங்கள் செய்யும் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டி லாபம் தரவில்லை எனில், உங்கள் பணமானது  பொருள்களை வாங்கும் திறனை இழந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

வரி செலுத்தியபின், எஃப்.டி மூலம் கிடைக்கும் குறைவான லாபத்தின் மூலம் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது கடினம். எனவே,  உங்களுடைய எல்லாப் பணத்தையும் எஃப்.டி-யில் முதலீடு செய்வதில் அர்த்தமில்லை.

3. முதலீடு செய்ய நான் நிபுணர் இல்லை


முதலீடு சம்மந்தமான முடிவுகளை எடுக்க உங்களுக்கு சூப்பர் மூளை தேவையில்லை. உங்களுக்குப் பொது அறிவு மற்றும் ஒழுக்கம் மட்டுமே தேவை. உலகின் மிகச் சிறந்த முதலீட்டு மேதை வாரன் பஃபெட்,  “முதலீடு களில் வெற்றி பெற ஒருவனுடைய ஐ.க்யூ 130  என்கிற அளவில் மட்டும் இருந்தால் போதும்’’ என்கிறார். இந்த ஐ.க்யூவுடன், உணர்ச்சி வேகத்தைக் கட்டுப்படுத்தும் மனநிலையும் தேவை. உங்களுக்குத் தேவையான அளவுக்கு நேரமும் நிபுணத்துவமும் (Expertise) இல்லாதபட்சத்தில், நீங்கள் நல்லதொரு நிதி ஆலோசகரின்  (Financial Advisors) உதவியை நாடுவது நல்லது.

4. பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கலாம்

பங்குச் சந்தை என்பது பயமும் (Fear), பேராசையும் (Greedy) கொண்ட முதலீட்டாளர்களிடமிருந்து சமநிலையும் (Balanced), பகுத்தறிவும் (Rational) கொண்ட முதலீட்டாளர்களுக்குப் பணத்தை மாற்றும் ஓர் அமைப்பாகும். நீங்கள் அமைதியாக, பொறுமையாக, ஒழுங்காக, பகுத்தறிவோடு மனக்கட்டுப் பாட்டுடன் இருந்தாலே போதும், நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்.

5. பங்குச் சந்தையைக் கணிப்பதுதான் முக்கியம்


பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலே, சந்தை இறங்கியபின்பு முதலீடு செய்யலாம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால், சந்தை இறங்கியபின்பு, இன்னும் இறங்கட்டும் என்று நினைத்து முதலீடு எதுவும் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள்.

பங்குச் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் பல காரணிகளைப் பொறுத்து அமைவது. அனைத்துக் காரணி களையும் சரியாகக் கணிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இதனால், பங்குச் சந்தை ஏறுமா, இறங்குமா என்று கணிக்க நினைக்காமல், முதலீடு செய்ய வாய்ப்புள்ளபோதெல்லாம் எஸ்.ஐ.பி மற்றும் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்வது நல்லது.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

6. தேவைக்கு அதிகமாகப் பிரித்து முதலீடு செய்தல்

ஒரே பங்கு அல்லது ஃபண்டில் மட்டும் முதலீடு செய்தால், சந்தை இறங்கும்போது அதிக நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கிறது.பல பங்குகள், பல ஃபண்டுகள் எனப் பிரித்து முதலீடு செய்வதால், ஓரிரு முதலீடுகளில் மட்டும் ஏற்பட்டுள்ள நஷ்டங்களை மற்ற முதலீடுகளிலிருந்து எளிதாக ஈடுகட்டி லாபம் பெற முடியும். ஒரு நல்ல போர்ட் ஃபோலியோவில் 10 பங்குகள் அல்லது மூன்று மியூச்சுவல் ஃபண்டுகள் இருந்தாலே போதும். உங்கள் போர்ட் ஃபோலியோவில் இருபதுக்கும் மேற்பட்ட பங்குகள், ஆறுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள் இருந்தால், உங்களின் ஒட்டுமொத்த லாபம் குறைய அதிக வாய்ப்பி ருக்கிறது. எனவே, முடிந்தவரை குறைந்த எண்ணிக்கை கொண்ட பங்குகள் உங்கள் போர்ட் ஃபோலியோவில் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பங்குகள் நல்ல பங்குகளா என்பதை மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும்.

7. ஹாட் பங்குகள் அல்லது ஃபண்டுகளில் முதலீடு செய்தல்

ஹாட் பங்கு அல்லது ஃபண்டு களில் நீங்கள் முதலீடு செய்வது, நீங்கள் கூட்டத்தைப் பின்தொடர்ந்து செல்வதுபோல. நீங்கள் கூட்டத்தைப் பின் தொடர்ந்தால், மற்றவர்களுக்குக் கிடைக்கும் லாபமே உங்களுக்கும் கிடைக்கும். அதைவிட எதுவும் அதிகமாகக் கிடைக்காது.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, மற்றவர்கள் பேராசையுடன் இருக்கும்போது நீங்கள் பயத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் பயத்துடன் இருக்கும்போது நீங்கள் பேராசையுடன் இருக்க வேண்டும் என்கிறார் வாரன் பஃபெட். எனவே, சந்தை நிலவரத்தைப் பொறுத்தோ, மாதத்தின் ஹாட் முதலீடுகள் (Hot Investments of the Month) பொறுத்தோ, நீங்கள் முதலீட்டு முடிவினை எடுக்க வேண்டாம். இதற்கு மாறாக, பங்குகளும் ஃபண்டுகளும் கடந்தகாலத்தில் கொடுத்த லாபத்தையும்  எதிர்காலத்தில் கொடுக்கக்கூடிய லாபத்தையும் மதிப்பீடு செய்து அதன்படி முதலீடு செய்யலாம்.

8. முதலீட்டின் நோக்கம் வரிச் சேமிப்பு


இதில் நீங்கள் எந்த வகையான முதலீட்டாளர்? நம்மில் சிலர் வரி கட்டாமல் தவிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காகவே முதலீடு செய்யத் துணிகிறார்கள். அதுதவிர, அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இருக்காது. இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நோக்கம் நிறைவேறும் என்றாலும், வரியைச் சேமிப்பதற்காக மட்டுமே ஒருவர் முதலீட்டில் ஈடுபடக் கூடாது. வரியாகச் செலுத்த வேண்டிய பணத்தைச் சேமிக்க நினைக்கும் அதேசமயத்தில், தங்கள் லட்சியங்களான குழந்தையின் எதிர்காலம், புதுவீடு, ஓய்வுத் திட்டம் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். இவர்களுக்குத்தான் வரிச் சேமிப்பு என்கிற  நோக்கம் நிறைவேறுவதுடன், தங்கள் எதிர்கால இலக்குகளும் நிறைவேறும்.

9. அவசரக்கால சேமிப்பினால் எந்தப் பயனும் இல்லை

உடல்நிலை பாதிப்பு, எதிர்பாராத செலவு போன்ற நேரங்களில் சேமிப்பு என்பது இல்லையெனில் பெரும் துயரத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதைப் பலரும் உணர்வதேயில்லை. திடீர்ச் செலவு வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவசரத்திற்குக் கடன் வாங்கிவிட்டு, பின்பு வட்டியும் அசலும் கட்டமுடியாமல் தவிப்போம். படித்தவர்கள், அதிலும் குறிப்பாக, ஐ.டி துறையில் பணிபுரிவோர், கிரெடிட் கார்டில் இஷ்டத்திற்குச் செலவு செய்து கடனோடு வாழ்கிறார்கள். சேமிப்பு இல்லாததால், அவசரக் காலம் இவர்களது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். இது நிகழ்ந்தபின்பு தெரிந்துகொள்வதைவிட, நிகழ்வதற்கு முன்பே தெரிந்துகொண்டு அவசரகாலத்துக்குத் தேவையான தொகையைச் சேர்த்து வைப்பது அவசியம்.

10. எளியமுறைத் திட்டத்தில் முதலீடு செய்யத் தவிர்த்தல்


சிலர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய திட்டங்களான எஃப்.டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை முற்றிலும் தவிர்த்து, கவர்ச்சியான எளிதில் புரிந்துகொள்ளமுடியாத அல்லது புதுப்புதுத் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். எளியமுறைத் திட்டங்களைப்போல், சிக்கலான அல்லது புதுப்புதுத் திட்டங்களில் தொடர் லாபம் பெற முடியாது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

மேலே குறிப்பிட்டுள்ள முதலீடு தொடர்பான இந்த 10 தவறுகளை நீங்கள் புரிந்துகொண்டு உங்கள் முதலீடுகளில் தவிர்த்தாலே போதும், நீங்கள் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்த்து லாபம் பெற முடியும். மேலும் ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியோடு, நீங்கள் உங்கள் நிதித் திட்டத்தைச் சரியாக அமைத்து, அதை ஒழுங்குடன் பின்பற்றி, சரியான முதலீடுகளைச் செய்தால், உங்கள் வாழ்க்கையின் லட்சியங்களை நீங்கள் நிச்சயமாக அடைய முடியும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்!

ஜியோ நிறுவனம் தொடங்கக் காரணம் யார்?

இன்றைக்குத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கக் காரணம், தன்னுடைய மகள் இஷாவும்  மகன் ஆகாஷும் தான் என்று சொல்லி யிருக்கிறார் ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி. ‘‘2011-ம் ஆண்டில் என் மகள் இஷா, ‘டாடி, நம் வீட்டில் தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது இன்டர்நெட்’ என்று சொன்னாள். என் மகன் ஆகாஷ், ‘எங்கள் தலைமுறையே டிஜிட்டல் உலகத்தில் இருக்கிறது’ என்றான். அவர்கள் சொன்ன விஷயங்களை வைத்துத்தான் ஜியோ நிறுவனத்தை நான் தொடங்கினேன்’’ என்று சொல்லியிருக்கிறார் முகேஷ் அம்பானி. பலே!