Published:Updated:

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

Published:Updated:
அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!
பிரீமியம் ஸ்டோரி
அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

ர்மபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் மையமாக விளங்குவது. கடை வீதிதான். 150 ஆண்டுகளுக்குமுன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவம் வந்துசெல்லும் வீதியாகவும், சுதந்திரத்திற்குப்பிறகு தேரடி வீதியாகவும் திகழ்ந்தது இந்த வீதி. தற்போது ‘கடை வீதி’ என்ற அடையாளத்தோடு பரபரப்பாக இயங்கிவரும் இந்தத் தெருதான் தர்மபுரி நகரின் முக்கிய வர்த்தகப் பகுதி.

கடை வீதியின் சிறப்பு குறித்து நாட்டு மருந்துக் கடை பூபாலிடம் கேட்டோம்.

“எட்டு வயசுல இந்த வீதிக்கு வேலைக்கு வந்தேன். 22 வயசுல சொந்தமாக நாட்டு மருந்துக் கடை ஆரம்பித்தேன். இப்போ எனக்கு 80 வயசு. இன்னைக்கு மாதிரியெல்லாம் ரோடு, லைட் எல்லாம் அப்போ கிடையாது. வடக்கு, தெற்காக இந்தக் கடை வீதியில் ஐந்து கல் தூண் இருக்கும். அதில் சாயங்காலம் ஆனா சீமை எண்ணெய் விளக்கு வைப்பாங்க. அப்போ கடை வீதியில 150 கடைகள் இருந்திருக்கும். கிராமத்தில் விளையும் சிறுதானியங்கள் சோளம், கம்பு, ராகி, திணை, பச்சைப்பயிறு, மாங்காய், புளி, மொச்சை உள்ளிட பருப்பு வகைகள், தானியங்களின் மொத்த விற்பனை இடமாகக் கடை வீதி இருக்கும்.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள் சிறிதும், பெரிதுமாகக் கடை வீதியில் பெரிய அளவில் வளர்ந்து இன்று வர்த்தக மையமாக மாறி நிற்கிறது.

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

மக்கள் தொகை பெருக்கமும், போக்குவரத்தும் வளர்ந்துவிட்டதால் நகரத்தோட விரிவாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து, அடுத்தடுத்த தெருக் களில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் என்று  வந்துவிட்டாலும் கடைவீதிக்கான மவுசு இன்னும் குறையல. இன்றைக்கும் அரிசி, சிறுதானியங்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் குறைந்த விலையில் வாங்க வேண்டுமென்றால் கடை வீதியைத்தான் தேடி வருவாங்க.

திருவிழா, வீட்டு விசேஷம், திருமணம்ன்னு  எதுவானாலும் கடை வீதிக்குத்தான் வருவாங்க. பெரிய நகைக் கடைகளின் வருகையால சிறிய நகைக் கடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைஞ்சுடுச்சு. இப்ப 250 கடைகளில் 100 நகைக் கடைகள் மட்டுமே வியாபாரம் செஞ்சுகிட்டிருக்கு.  அதேபோல 500-க்கும் அதிகமான நகை உற்பத்திப் பட்டறைங்க சூப்பரா நடந்துவந்துச்சு. ஆனா, இன்னைக்கி வெறும் 200 நகை உற்பத்திப் பட்டறைங்கதான் செயல்படுது. ஆனாலும், பெரிய நகைக் கடைகளைவிட கடை வீதியிலதான் வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள், தங்க  நகைகள், வைர நகைகளைக் குறைஞ்ச விலையில  வாங்க முடியுதுன்னு மக்கள் நினைக்கிறாங்க” என்றார்.

கடை வீதிக்குப்பக்கத்தில் இருக்கிறது அப்துல் முஜிப் தெருவில் நுழைந்தால், திருமணச் சீர் வரிசைக்குத் தேவையான எவர்சில்வர், பித்தளைப் பாத்திரங்களை வகைவகையாக வாங்கலாம். இங்குப் பூஜைக்குத் தேவையான பொருள்களை  மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். மேலும், மொத்த விற்பனை மையமாக விளங்கும் ஜவுளிக் கடைகள் பல இருக் கின்றன. செருப்பு, ஷு வகைகள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவி களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை மொத்த விலைக்கே இங்கு வாங்க முடியும். 

சின்னசாமி நாயுடு, ஆறுமுக ஆசாரி தெருக்களில் நவீனமாக்கப் பட்ட பெரிய ஜவுளிக் கடைகளில் குழந்தைகள், பெண்கள், ஆண் களுக்குத் தேவையான எல்லாவித மான ஆடைகளும் கிடைக்கின்றன.  இதுதவிர, மருந்துக் கடைகள், வங்கிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. இங்கு எல்லாவித மான எலெக்ட்ரிகல், எலெக்ட் ரானிக்ஸ் பொருள்களும் வாங்க முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’!

கடை வீதியில் கிட்டத்தட்ட 100 வருடமாகப் பழைமை மாறாமல் இருப்பது ஜெயகாந்தம் கயிறு சாக்குக் கடை. இந்தக் கடையின் சொந்தக்காரர்  கார்த்திகேயன் நம்முடன் ஆர்வமாகப் பேசினார்.

“என் அப்பாவுக்குப்பிறகு  கயிறு விற்பனையை நான்தான் கவனித்துக்கொள்கிறேன். கடை வீதியை நம்பி வந்து தொழில் செய்தால் வாழ்ந்துவிட முடியும்னு பெரியவங்க சொல்வாங்க. ஏன்னா... இந்தக் கடை வீதியில இருந்து சிங்கப்பூர், தைவான், மலேசியாவுக்குச் சிறு தானியங்கள், பருப்பு வகைகள், புளி உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வர்த்தகம் வளர்ந்துள்ளது.

நகரத்தில் இருக்கும் மிக முக்கியமான பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள்கூட இங்கு வந்துதான் சிறுதானியங்கள், உப்பு, புளி, வாழைப்பழம், தேங்காய், அரிசி, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருள்களைக் கொள்முதல் செய்கின்றன. புளியம் பழத்தின் மேல் ஓடுக்குக்கூட இங்கு நல்ல மார்க்கெட் இருக்கு. கொசுவர்த்திச்  சுருள் தயாரிக்க  இதைத்தான்அதிகம் பயன் படுத்துறாங்க. இதை இங்கேயிருந்து பாண்டிச்சேரிக்கு அதிகமா அனுப்பி வைக்கிறாங்க” என்றார்.

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கச் செயலாளர் ரவிசந்திரனிடம் பேசினோம். “நகரத்தோட வளர்ச்சி விரிவடையாமல் ஒரு குறிப்பிட்ட எல்லையில் முடங்கிவிட்டதால், வணிகக் கட்டடங்களின் வாடகை ரூ.20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரைக்கும் உயர்ந்துவிட்டது. நேர்மையான வணிகம் நடைபெற இது பெரும் தடையாக உள்ளது. இது மக்களைத்தான் பெரிதும் பாதிக்கிறது. இதையெல்லாம் நகராட்சி சரிப்படுத்த முடியும். நகராட்சிக்குச் சொந்தமான எவ்வளவோ இடங்கள் இருந்தும் புதிய வணிக வளாகங்களை அமைப்பதில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதனால், பல வணிக நிறுவனங்கள் வாடகை கட்டியே அழிந்து போகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பினால்,  தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல், பல சிறு தொழில்கள் பெரும் நஷ்டம் அடைந்து வரு கின்றன. இந்தப் பிரச்னைகளில் எல்லாம் அரசு கவனம் செலுத்தி னால்தான் கடை வீதி போன்ற உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள வர்த்தக மையங்களைப் பாதுகாக்க முடியும்” என்றார்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அங்காடித் தெருக்கள்தான். அரசு அதில் குறை ஏதும் வைக்கக்கூடாது!

- எம்.வடிவேல்
படங்கள்: க.மணிவண்ணன்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism