Published:Updated:

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?

கேள்வி - பதில்

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?

கேள்வி - பதில்

Published:Updated:
டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?
டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?

எனக்கு ஹெச்.எஸ்.பி.சி இன்வெஸ்ட் டைரக்ட்டில் டீமேட் அக்கவுன்ட் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டுவிட்டன. அதிலிருக்கும் எனது பங்குகளை எனது இன்னொரு டீமேட் கணக்கிற்கு மாற்றுவது எப்படி?

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!நடராஜன், சங்கரன்கோவில்

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்


‘‘என்.எஸ்.டி.எல் (NSDL) அல்லது சி.டி.எஸ்.எல் (CDSL) டெபாசிட்டரிகளை நீங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களின் மூலம் உங்களுடைய பங்குகளை உங்களுடைய புதிய டீமேட் அக்கவுன்டிற்கு மாற்றி முதலீடு செய்ய லாம். மேலும், என்.எஸ்.டி.எல் நிறுவனத்திடமிருந்து விவரங்களைப் பெற relations@nsdl.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்பலாம். சி.டி.எஸ்.எல் (CDSL) நிறுவனமாக இருந்தால், 1800 200 5533 என்கிற டோல்ஃப்ரீ எண்ணுடன் தொடர்புகொள்ளவும். இந்த இரு நிறுவனங்களுமே முதலீட்டாளர்களுக்குத் தேவையான விவரங்களை அளிப்பதில்  விரைந்து  செயல்படுகின்றன.’’

நான் கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI). ஒவ்வொரு மாதமும் 35,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். உயர் கல்வித் தேவைக்காகப் பத்தாண்டுகள் கழித்தும், ஓய்வுக்காலத் தேவைக்காக 25 ஆண்டுகள் கழித்தும் மொத்த தொகை தேவைப்படும். இதற்கேற்ற முதலீட்டு ஆலோசனை வழங்கவும்.

கதிர்வேல், திருநெல்வேலி

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்


‘‘அமெரிக்கா, கனடா தவிர்த்த வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவிலுள்ள எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் முதலீடு செய்யலாம். ஆனால், அமெரிக்கா, கனடாவில் வசிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் மிகச் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலமே முதலீடு செய்ய முடியும். தற்போது, ரிலையன்ஸ் நிப்பான், பிர்லா சன் லைஃப், ஹெச்டிஎஃப்சி, எல்&டி, டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிகா, ஐ.சி.ஐ.சி.ஐ  புரூடென்ஷியல், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்  வெவ்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்கா அல்லது கனடாவில் வசிக்கும் என்.ஆர்.ஐ-களிட மிருந்து முதலீட்டுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்கின்றன.

சென்ட்ரல் கேஒய்சி (CKYC) விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, வெளிநாட்டு முகவரி, பாஸ்போர்ட், விசா, சோஷியல் செக்யூரிட்டி நம்பர், இந்திய முகவரி, பான், ஆதார் கார்டு நகல்களில் கையொப்பம் ஆகியவற்றுடன் மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பத்தையும் சேர்த்து முகவரிடம் தந்து, உங்கள் முதலீட்டைத் தொடங்க லாம். இனி, உங்களுக்கான முதலீட்டுப் பரிந்துரை:

உங்களுடைய ஓய்வுக் காலத் தேவைக்காக ரூ. 8,000, (ரூ.4,000 - ரிலையன்ஸ் ரிட்டயர்மென்ட் ஃபண்ட், ரூ.4,000 - ஹெச்.டி.எஃப்.சி ரிட்டயர்ட் மென்ட் ஃபண்ட்) ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். இந்த ஃபண்டுகளின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக  (சி.ஏ.ஜி.ஆர்) 12%  வருமானம் கிடைத் தால், 25 வருடங்களில் சுமார் ரூ.1.36 கோடியை  நீங்கள் தொகுப்பு நிதியாகப் பெறலாம்.

உயர்கல்வி தேவைக்கு, 27,000 ரூபாயை, மாதம் ரூபாய் 5,000 வீதம், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட், சுந்தரம் ஸ்மால் கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்ட், கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஸ்கீம் ஆகிய நான்கு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.

மாதம் ரூ.7,000-த்தை எல்&டி எமர்ஜிங் பிசினஸ் ஃபண்டில்  முதலீடு செய்து பலன் அடையலாம். ஆண்டுக்கு 12% வருமானத்தை இந்த ஃபண்ட் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கலாம். இந்த ஃபண்டில் முதலீடு செய்துவந்தால் 10 வருடங்களில் தோராயமாக ரூபாய் 60 லட்சம் கிடைக்க வாய்ப்புண்டு.’’

நான் ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றும் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் எனக்கு தர வேண்டிய தொகையில் 10% சதவிகிதத்தை டிடிஎஸ் ஆக பிடிக்கிறார்கள். அந்தத் தொகையை ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் விண்ணப்பித்துப் பெற இயலுமா, அதற்கான நடைமுறைகள் என்ன?

மகேஷ்குமார், காரைக்குடி

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘டி.டி.எஸ் (TDS - Tax Deducted at Source) பிடித்த மென்பது வருமானத்திலிருந்து 10% ஆகும்.  உங்கள் வருமானம் மற்றும் அது தொடர்பான செலவு களின் அடிப்படையில் வருமான வரி கணக்கிடப்பட்டு, வரிப்பிடித்தம் போக மிச்ச தொகை, உங்கள் வங்கிக் கணக்கில்  செலுத்தப்படும். இதற்கான அவகாசம், ஒரு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இருக்கலாம்.

ஒருவேளை, டிடிஎஸ் குறைவாக பிடித்திருந்தால் மீதி வரியை நீங்கள் செலுத்த வேண்டும். வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்குப் பிறகுதான் கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரி திரும்பக் கிடைக்கும்.’’ 

வயது 33. தனியார் துறையில் மாதம் ரூ.75 ஆயிரம் வருமானம் வருகிறது. 5 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மனைவி பணிக்குச் செல்லவில்லை. என்னிடம் ரூ.10 லட்சம் கைவசம் இருக்கிறது. இதனைக் குறைந்தது 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே எனது சம்பளத்தில் 10% தொகையை மாதாமாதம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். முதலீட்டு ஆலோசனை கூறவும்.

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?


திருநாவுக்கரசு, மணப்பாறை


ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


‘‘சம்பளத்தில் 10% எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது மிகவும் சிறப்பானது. அதைத் தொடர்ந்து செய்யவும். நீங்கள் அதனை நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள் என்று நம்பு கிறேன்.

ரூ.10 லட்சத்தில் பாதியை அதே ஃபண்டு களில், அதே விகிதத்தில் பிரித்து முதலீடு செய்யவும். மீதமுள்ள ரூ.5 லட்சத்தை பேலன்ஸ்டு ஃபண்டுகள் இரண்டில் 50 சதவிகிதமாகப் பிரித்து முதலீடு செய்யவும். இதற்கு ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேலன்ஸ்டு ஃபண்டுகள் உகந்தவை.’’

என் வயது 42. மொத்த கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறேன். நான் ஏற்கெனவே வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளேன். தற்போது, மேலும் 75 லட்சம் ரூபாயைப் பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். இவற்றை எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

டேவிட் சாமுவேல், திருச்சி.

டீமேட் கணக்கை மாற்றுவது எப்படி?என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்


‘‘பத்தாண்டு கால நோக்கில், நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய நீங்கள் விரும்பினால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்வது குறித்த விழிப்பு உணர்வு உங்களுக்கு ஏற்கெனவே இருப்பதால், சற்று சாதுர்யமான முதலீட்டு முறையான சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளானைத் (STP)  தேர்ந்தெடுத்து, உங்களுடைய வருமான எதிர்பார்ப்புக்கேற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் என்னவென்று ஆராய்ந்து, முதலீடு செய்யத் தொடங்கலாம். தேவைப்பட்டால் நிதி ஆலோசகரை அணுகலாம். இப்படி செய்வதன்மூலம்  லிக்விட் ஃபண்ட்  மூலம் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. ஒவ்வொரு மாதமும் லிக்விட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றுவதன் மூலம் ரிஸ்க் குறைவாக இருக்கும்.

உங்களது முதலீட்டுத் தொகையான 75 லட்சம் ரூபாயை ஒவ்வொரு மாதமும் தலா ரூ.6.25 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில், ஓராண்டு காலத்திற்கு லிக்விட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு ஒவ்வொரு மாதமும் மாற்ற வேண்டும்.

இந்த முதலீட்டில் 30% தொகையை லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும், 30% தொகையை டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்திலும், 20% தொகையை மிட் கேப் ஃபண்ட் திட்டத்திலும் எஸ்.டி.பி முறையில் ஓர் ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த எஸ்.டிபி முறையானது ஓராண்டு காலத்திற்கு மிகவும் நல்ல திட்டமாக இருக்கும்.

மீதமுள்ள 20% தொகையை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் போன்ற அதிக ரிஸ்க்கில்லாத அஸெட் அலோகேஷன் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.’’ 

தொகுப்பு : தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.