Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

தங்கம் (மினி)

பங்குச் சந்தை வலிமையாக இறங்கும் நிலையில்,  தங்கம் வலிமையாக ஏறிக்கொண்டு இருக்கிறது.  பங்குச் சந்தை இன்னும் தொடர்ந்து இறங்கினால், தங்கம் இன்னும் வலுப்பெறலாம்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி


கடந்த இதழில் நாம் சொன்னது... “தற்போது உள்ள நிலையில், 30300 என்ற எல்லைக்குக் கீழாக முடிந்தால், அது 30100 என்ற எல்லையை முதல் கட்டமாகவும், அதையும் உடைத்தால் கீழே மிக வலிமையாகவும் இறங்கலாம். மேலே 30600 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.’’

தங்கம் தொடர்ந்து சில வாரங்களாகப் பெரிய மாற்றம் இல்லாமல் பக்கவாட்டு நகர்விலேயே இருந்துவந்தது.  சென்ற வாரம், முக்கிய ஆதரவான 30300-யை உடைத்து சற்றே இறங்கி, 30129 வரை இறங்கியது. அதன்பின்  ஏற ஆரம்பித்தது.  திங்களன்று அந்த ஏற்றம் வலிமையானதாக மாறி,  30300 என்ற எல்லையைத் தாண்டி அதிகபட்சமாக 31453 என்ற எல்லையைத் தொட்டது.  செவ்வாய் அன்று சற்றே இறங்கி வியாபாரம் ஆனாலும், புதன்கிழமையன்று மீண்டும் வலிமையாக ஏறி, அதிகபட்சப் புள்ளியாக 30539-யைத் தொட்டது.   இதுவே தங்கம் வலிமையாக மாறிவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறியாகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

வியாழனன்று மீண்டும் ஒரு ஏற்றத்திற்கு முயன்று, அதிகபட்சப் புள்ளியாக 30615 என்ற எல்லையைத் தொட்டது.  எனவே, நாம் கொடுத் திருந்த அடுத்த முக்கியத் தடையையும் உடைத்து,   வெள்ளியன்று மீண்டும் மிக மிக வலிமையாக ஏறி, 30795 என்ற புதிய உச்சத்தை ஏற்படுத்தியது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் மிக வலிமையாக ஏறியிருக்கும் நிலையில், தற்போது 30850 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது. இந்தத் தடை நிலை உடைக்கப்பட்டால், அடுத்து இதைவிட இன்னும் வலிமையாக ஏறி 31300 என்ற எல்லையை நோக்கிப் பயணிக்கலாம்.  கீழே உடனடி ஆதரவு நிலை 30400 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

வெள்ளி (மினி)
தங்கம் வலிமையாக ஏறும்போது வெள்ளி மட்டும் சற்றே தடுமாறி ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நாம் கொடுத்திருந்த 38500 என்ற ஆதரவை உடைத்து இறங்கியது. கடந்த வாரம் திங்களன்று, தங்கம் வலிமையாக ஏறியபோது, வெள்ளி சற்றே தடுமாறித்தான் ஏறியது.  ஆனால், செவ்வாயன்று தங்கம் கொஞ்சம் இறங்கியபோது, வெள்ளி பலமாக இறங்கி, 38500-யை உடைத்துக்  குறைந்தபட்சப் புள்ளியாக 38120-யைத் தொட்டது. அதன்பின் தங்கம் மிக வலிமையாக ஏற, வெள்ளியானது தட்டுத் தடுமாறித்தான் ஏறியது. இனி என்ன நடக்கலாம்?

தற்போது வெள்ளி, நாம் தொடர்ந்து கொடுத்து வரும் 39000 என்கிற தடைநிலையைத் தாண்ட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.   இதைத் தாண்டினால், அடுத்த இலக்கு 39550 ஆகும்.  கீழே ஆதரவு நிலை 38400 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

கச்சா எண்ணெய் (மினி)

தங்கம் ஏறுவதற்குமுன்பே, கச்சா எண்ணெய் வலிமையான ஏற்றத்தைக் காட்டியது. கச்சா எண்ணெய், கடந்த வாரம் வலிமையான ஏற்றத்தைக் காட்டி அதிகபட்சமாகப் புதனன்று 4264 என்ற புள்ளியைத் தொட்டது. அதற்குப்பிறகு வியாழன் மற்றும் வெள்ளியன்று சற்றே மந்த நிலையில் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழன்றது.

இனி என்ன நடக்கலாம்?தற்போது 4280 என்ற எல்லை உடனடித் தடை நிலையாக உள்ளது.  இதையும் தாண்டினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம்.  கீழே 4111 என்பது முக்கிய ஆதரவு.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், சென்ற வாரம் ஒரு சிறப்பான நகர்வை காட்டியது. 2017 டிசம்பரில் துவங்கிய இறக்கமானது, 2018 மார்ச் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் வாரத்திலும், ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்திலும் கொஞ்சம் தட்டுத் தடுமாறி ஏற ஆரம்பித்தபோது, இனி தொடர்ந்து ஏறும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது.

ஆனால், அது பொய்த்துப் போய், இறக்கமே நிரந்தரமானதுபோல் இருந்தது. பிப்ரவரி மாதத்திலும் அந்த இறக்கம் தொடர்ந்தபோது, பிப்ரவரி மூன்றாம் வாரம் மட்டும் கொஞ்சம் 1250 என்ற எல்லையைத் தக்கவைக்க முயற்சி செய்தது. அதற்கடுத்த வாரம் அதுவும் பொய்த்ததுபோல்  இறக்கம் தொடர்ந்தது. ஆனால், மார்ச் மூன்றாம் வாரம் என்பது மிக முக்கிய வாரமாக அமைந்துள்ளது.

முந்தைய இதழில் சொன்னது... ‘‘மென்தா ஆயில், அடுத்தகட்ட இறக்கத்திற்குப் பிறகு, 1146 என்ற எல்லையைத் தற்போதைய ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த ஏற்றம் மேலே 1240-ல் வலிமையாகத் தடுக்கப்படலாம்.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில், கடந்த வாரம் இறக்கத்தின் முடிவில் ஒரு டோஜியை தோற்றுவித்து, அடுத்த நாள், மேலே திரும்பியது. அத்துடன்,  நாம் கொடுத்திருந்த 1240 என்ற எல்லையை உடைக்க முயற்சியும் செய்தது. கடந்த வாரம் திங்களன்றும்,  செவ்வாயன்றும் 1240-யை உடைக்கத் தொடர் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், புதனன்று நாம் கொடுத்த  தடை நிலையான 1240 உடைத்தது. அதன்பின் மிகப் பெரிய ஏற்றத்தையும் கண்டது.

புதனன்று அதிகபட்சமாக 1281 என்ற புள்ளியைத் தொட்டது. அடுத்து வியாழனன்று அதிகபட்ச மாக 1239 என்ற புள்ளியைத் தொட்டது. இந்த ஏற்றம், வெள்ளியன்றும் தொடர்ந்து, அதிகபட்சமாக 1232 என்ற புள்ளியைத் தொட்டதோடு அல்லாமல், அந்தப் புள்ளியிலேயே வலுவாக முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்? இது ஒரு வலுவான திசை திருப்பம் ஆகும். இனி முந்தைய தடை நிலையான 1240, தற்போது ஆதரவாக மாறலாம். அடுத்த முக்கியத் தடைநிலை 1480 ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

காட்டன்

காட்டன் தொடர்ந்து ஏறிய பிறகு, முக்கியத் தடைநிலையான 21100 என்ற எல்லையில் தடுக்கப் பட்டது. அதன் ஏற்றம் முடிவுக்கும் வந்தது. அதன்பின் ஒரு தொடர் இறக்கத்தில்தான் இருந்துவருகிறது.

காட்டன், நாம் கடந்த வாரம் கொடுத்திருந்த 20230 என்ற ஆதரவைத் திங்களன்றே உடைத்துவிட்டது. அதோடு மட்டுமல்லாமல், மிக மிக வலிமையாக இறங்கி, குறைந்த பட்சப் புள்ளியாக 19970-யைத் தொட்டது.

அடுத்து செவ்வாயன்று ஒரு கேப் டவுன் முறையில், இடை வெளியுடன் இறங்கித் தொடங்கியது.அதாவது, திங்களன்று 20020 என்ற முடிவு விலையிருந்து இறங்கி, செவ்வாயன்று 19950 என்ற புள்ளியில் தொடங்கியது. இந்த கேப்டவுன் இறக்கம் என்பது இன்னும் கொஞ்சம் இறக்கத்தைக் காட்டி, செவ்வாயன்று 19850 வரை இறங்கி, அதன்பின் ஷாட் கவரிங் நடக்க, விலை உச்சமாக 20270-யைத் தொட்டது.

ஆனாலும், கரடிகள் அவ்வளவு எளிதாகவிடுவதாக இல்லை, செவ்வாய்க்கிழமை முடிவில் கொஞ்சம் இறக்கி, 20140 என்ற புள்ளியில் முடித்தன. காளை களின் இந்த ஏற்ற முயற்சி, அடுத்து புதனன்றும் தொடர்ந்தது.

புதனன்று ஒரு கேப் அப் முறையில் வலிமையாகத் துவக்கி, முடிவில் 20340 என்ற புள்ளியில் முடித்தன. ஆனால், இந்த இரண்டு நாள்கள் ஏற்றம் தொடரவில்லை. மாறாக, வியாழன் மற்றும் வெள்ளி அன்று படிப்படியாக இறங்க ஆரம்பித்தது.

இனி என்ன செய்யலாம்? காட்டனின் இந்த ஏற்றம் ஒரு புல்பேக் ரேலியாக முடியுமோ என்ற அச்சமும் உள்ளது. தற்போது 20380 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாக உள்ளது. இந்தத் தடை நிலை உடைக்கப்பட்டால், காட்டன் பெரிய ஏற்றத்தை நோக்கி நகரலாம். கீழே 19950 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு