Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

மீட்டிங் முடிந்து வெளியேவந்த எட்ரியன் பதற்றத்தில் நடுங்கிக்கொண்டிருந் தார். அவர் கற்பனை செய்திருந்ததைவிட இந்த வழக்குப் பெரிதாக இருந்ததை யோசித்தபடி,  தனது மொபலைப் பார்த்து விட்டு, மிஸ்டு காலில் இருந்த நம்பர் ஒன்றுக்கு போன் செய்ய, அவருடைய செகரட்டரி பேசினார்.

‘`நீ எனக்கு போன் செய்தாயா மோனா?” என்றார்.

‘`யெஸ், டோனி உங்களைப் பார்க்க இங்கே வந்திருக்கிறார். இதோ, அவருடன் பேசுங்கள்.’’

`ஹே, எட்ரியன்… எங்கே போயிட்டீங்க?’’

‘`ஜனாதிபதியின் சீஃப் ஆஃப் ஸ்டேட்டுடன் ஒரு மீட்டிங். ஏன் இத்தனை முறை எனக்கு போன் செஞ்சே, யாராது செத்துப்போயிட்டாங்களா?’’

‘`யாரு சாகணுமோ, அவரு சில நாள் முன்னாலயே செத்துட்டாரே.’’

‘`டோனி, இது மோசமான ஜோக், காமெடி பண்ணாதே, நீ ஏன் எனக்கு போன் செஞ்சே?’’

‘`உங்க போனுக்கு ஒரு இ-மெயில் அனுப்புறேன், உடனே பாருங்க.”

செய்தி வந்தது: ‘‘சைக்கிள் வேலை முடிந்துவிட்டது. பிட்காயின் ட்ரான்ஸ்ஃபர் பண்ணியதை உறுதி செய்யவும்.’’

‘`இது என்ன, டோனி?”

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

‘‘ஜில்லியன் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவரை யாராவது சுயநலத்துக்காகக் கொன்றிருப்பார்களா என நாங்கள் அனைத்து ஏஜென்சிகளையும் கண்காணித்து வருகிறோம். நியூயார்க்கிற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குமிடையே அதிகமான அளவில் `சாட்டிங்’ நடந்திருப்பதை பிரிட்டிஷ் உளவுத் துறையினர் கண்காணித்தபோது இந்தத் தகவலை  அவர்கள் இடைமறித்திருக்கிறார்கள். இது லாட்வியாவிலிருக்கும் சர்வரிலிருந்து இந்தியப் பெருங் கடல் பகுதியிலிருக்கும் சர்வருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகான தொடர்பை நாம் இழந்து விட்டிருக்கிறோம். எனவே, இந்தத் தகவல் அந்தப் பகுதியிலிருக்கும் யாரோ ஒருவர்தான் அனுப்பி யிருக்க வேண்டும்’’ என்றார்.

‘`நடந்த கொலைக்கும், இந்தத் தகவலுக்கு என்ன தொடர்பு?’’

‘`சைக்கிள் வேலை எனத் தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்ல வேண்டு மெனில், ஜில்லியன் காரைத் தகர்த்த சைக்கிள். இந்தத் தகவலில் அடுத்தபகுதி பிட்காயின் ட்ரான்ஸ்ஃபரை உறுதி செய்யும் படிக் கேட்டிருக்கிறது. வேலை முடிந்ததற்கான கூலியாக இருக்குமோ?’’ என்றார் டோனி.

‘`நீ சொல்வது சரியாக இருக்கலாம் டோனி. இந்த மெயில் எந்த இடத்திலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி ஏதேனும் இருக்கிறதா?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6


‘`இல்லை. இதை அனுப்பிய வர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.’’

`மீண்டும் ஒரு TOR-ஆ?” எட்ரியன் கோபத்துடன் கேட்டார். TOR அல்லது The Onion Router. இது அடையாளம் தெரியாமல் செய்திகள் அனுப்புவதற்கான ஃப்ரீ நெட்வொர்க். உலகெங்கும் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப் படும் இந்த அடையாளம் தெரியாத நெட்வொர்க்மூலம் இன்டர்நெட் ட்ராஃபிக் இயக்கப்படுகிறது. இந்த TOR குறியாக்க முறையில் (Encryption) செய்தி அனுப்புவதன் மூலம் தகவலை அனுப்புபவரின் இடத்தையும், அடையாளத்தையும் மறைக்க முடியும். இதன்மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்ன, எங்கிருந்து வருகிறது, எங்கு போய்ச் சேர்கிறது என எதையும் தெரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் TOR–யைப் பத்திரிகைகள், `உயர்தரப் பாதுகாப்பில் மன்னன்’ (king of high secure) எனப் பாராட்டுகின்றனர். 

இணையத்தின் வழியாகப் பரிவர்த்தனை செய்துகொள்வதற்குக் குற்றவாளிகளும், போதைப் பொருள்கள் விற்பவர்களும் பயன்படுத்தக் கூடிய மிகவும் நளினமான கருவிகளில் TOR–ம் ஒன்றாகும். ஃபெடரல் ஏஜென்சி பயன்படுத்தும் எந்தவொரு நவீன உபகரணங்கள் அல்லது கண்காணிப்பினால், TOR-யைப் பயன்படுத்துபவர்களின் தனி உரிமையைத் `தகர்க்க’ (Crack)  முடியாது.

மெயிலில் வந்த தகவலை சிலமுறை படித்தபின், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க டோனி அங்கே காத்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டார். ‘`நீ சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஏராளமான காரணங்கள் இருக்கக்கூடும். ஆஃப்கானிஸ்தான் – பாகிஸ்தான் வெறியர்கள், இந்தியாவைச் சேர்ந்த இந்துமத அடிப்படை வாதிகள், இலங்கைத்  தமிழர் விடுதலைக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் கலகக்காரர்கள், ஈரானியத் தீவிரவாதிகள், சதாமுக்கு விசுவாசமான ஈராக்கியர்கள் - இதில் யார் வேண்டுமானாலும் இருக்க முடியும். நாம் எங்கேயிருந்து ஆரம்பிப்பது?”

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

மும்பை

ஃபிஷிங் ஸ்கேண்டல் சுவாமிக்கு ஒற்றைத் தலைவலிபோலக் கடுமையாக இருந்தது. பொழுது விடிவதற்குள், கிட்டத்தட்ட 150 வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து சுமார் ரூ.3 கோடி  அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணிக்கு போன் செய்தார் சரண். என்.ஒய்.ஐ.பி-யின் (NYIB) இணையத்தளம் மூலம் செய்யக்கூடிய ஆன்லைன் ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் வசதியை அவரே முடிவெடுத்து நிறுத்தி வைத்திருந்தார். இந்த மோசடியைத் தடுக்க இதைத் தவிர வேறு வழி எதுவும் அவருக்குத் தெரியவில்லை. “வாடிக்கையாளர்கள் முட்டாள்தனமாக இந்த மோசடிக்குப் பலியாவதைவிட, ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் வசதியை நிறுத்தி வைப்பதால் எழக்கூடிய வாடிக்கையாளர் பிரச்னையைச் சமாளிப்பது பெரிய விஷயமில்லை’’ என்று அவர் சரணிடம் சொன்னார். 

‘‘இதற்கு இன்னும் எத்தனை வாடிக்கையாளர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்றுகூட நமக்குத் தெரியவில்லை, அதுபோல இன்னும் மோசடித்தனமான எத்தனை ட்ரான்ஸ்ஃபர்கள் நடக்கவிருக்கிறதோ தெரிய வில்லை’’ - சரணிடம் வருத்தத்துடன் சொன்னார் சுவாமி. இந்த நேரத்துக்குள் என்.ஒய்.ஐ.பி வாடிக்கையாளர்களின் டேட்டாபேஸ் முழுவதும் மோசடியாளர்களின் கைக்குக் கிடைக்க  வாய்ப்பிருப்பதோடு, அனைவருக்கும் உண்மையான ஆஃபர் போன்ற ஒரு ஸ்பாம் மெயிலையும் அனுப்பப்பட்டிருக்கலாம். முன்பு, மோசடியாளர்கள் மில்லியன் டாலர்கள் கணக்கில் மோசடி செய்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதை நம்பாமல் அசட்டை செய்தனர். ஆனால், இப்போது மோசடியாளர்கள் குறைந்த தொகை தருவதாக உறுதி அளித்திருப்பதோடு நம்பக்கூடியமாதிரியான கதையையும் பரவவிட்டிருந்தனர்.

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6


இருவருக்குமிடையேயான உரையாடல் முடியும்போது காலை மணி 5.30. தினமும் காலையில் சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே எழுந்தது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தி யது. கண்ணைக் கசக்கிக் கொண்டே கதவு வரை சென்று அன்றையப் பத்திரிகை வந்திருக்கிறதா எனப் பார்த்தார். அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா- வை கையிலெடுத்தபோது அவரது நாடித்துடிப்பின் வேகம் அதிகரித்தது. முதல் பக்கத்தில் பிரதானமான செய்தியாக - ‘என்.ஒய்.ஐ.பி-யின் அக்கறையின்மை யால் வாடிக்கையாளர்கள் மோசடிக்குள்ளாயினர்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி யிருந்தது. கட்டுரையில் மோசடிக்குள்ளானவர்களாக 22 வாடிக்கையாளர்களின் பெயர் களைக் குறிப்பிட்டிருந்தார்கள். அது ஃபிஷிங் தாக்குதல் எனத் தெளிவுபடுத்தியிருந்தாலும் என்.ஒய்.ஐ.பி-ன் பாதுகாப்பு நெறிமுறைகளையும், இன்டர்நெட் பேங்கிங்கில் இருக்கக்கூடிய பாதுகாப்பு குறித்துப் பொது வாகவும் சாடியிருந்தது.

அதைப் படித்தவுடன் வரவேற்பறை சோபாவில் சுவாமி  பொத்தென்று விழுந்தார். இந்தச் செய்தியினால் ஏற்படக்கூடிய விளைவோடு ஒப்பிடுகையில் அவருக்கு ஃபிஷிங் ஸ்கேம் ஒன்றும் பெரிதாகக் கவலை அளிக்கவில்லை. இந்த நெருக்கடிக்கு ஒரு பலிகடாவை சிங்கப்பூர் அலுவலகம் தேடிக் கண்டுபிடிக்கும். இந்தப் பிரச்னை குறித்து இன்னும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

‘`எல்லாம் சரியா இருக்கா?” எனக் கேட்டுக்கொண்டே அப்போதுதான் எழுந்திருந்த கல்பனா கேட்டாள்.

அதுவரை நடந்த எல்லாவற்றை யும் அவர் அவளிடம் கூறிவிட்டு, தனது லேப்டாப்பை எடுத்து லாக்-இன் செய்யப்போனார்.

செய்தி மோசமாக இருக்கும் போது, எப்போதும் தூதுவராக இருப்பது நல்லது. இல்லையென் றால், நீங்கள் சந்தேகத்துக்கு இடமானவராகக் கருதப்படுவீர்கள். நிறுவனத்தின் உயரதிகாரிகள்  அழைத்துப் பேசுவதற்குமுன்,  அவர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லிவிடுவது நல்லது என நினைத்தார்.

அவருடைய போன் `ரிங்’கியது. அவர் அறையின் மூலைக்குச் சென்று அங்கிருக்கும் போனை எடுத்து, ‘`ஹாய், ஆதித்யா’’ என்றார். அவ்வளவு சீக்கிரமாக ஆதித்யா ஒருவர்தான் கூப்பிடுவார் என அவருக்குத் தெரியும்.

இந்திய வங்கித் துறையைப் பொறுத்தளவில், ஆதித்யா ராவ் ஒரு லெஜண்ட். என்.ஒய்.ஐ.பி மூலமாக ரீடெயில் பேங்கிங்கை இந்தியாவில் ஆரம்பித்த முன்னோடி என்கிற பெருமை அவருக்கு உண்டு. என்.ஒய்.ஐ.பி-யில் வேலை செய்த 20 வருடங்களில் உலகெங்கிலும் வேலை செய்தபின், இந்தியாவில் ரீடெயில் பேங்கிங்கை ஆரம்பிக்க இங்கு வந்தார். அதன் பின், அவர் வங்கி வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக இடியோஸ் (eTIOS) என்கிற பெயரில் ஒரு பி.பி.ஓ நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவந்தார். அவரின் முன்னாள் சீடர் சந்தீப் ஸ்ரீவஸ்தவா இப்போது அவரது வலதுகையாக இருக்கிறார். 

பத்திரிகையில் தலைப்புச் செய்தியைப் பார்த்துவிட்டு, அவர் சுவாமியை அழைத்தார். ‘`ஹே சுவாமி, என்ன நடந்தது, என்ன இப்படி ஒரு ரப்பிஷ்? உங்களுடைய பி.ஆர் டிபார்ட்மென்டைச் சேர்ந்தவர்கள் இதை வரவிடாமல் தடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும், முதல்பக்கச் செய்தியாக வந்திருக்கவிடக்கூடாது’’ என்று பொரிந்து தள்ளினார். 

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

‘`நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது, ஆதித்யா? நடந்தது நடந்துவிட்டது. இன்னும் சேதமடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துகொண்டிருக்கிறேன். என்னால் மாதுரியைக்கூடத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.’’ மாதுரி என்.ஒய்.ஐ.பி-ன் பத்திரிகைத் தொடர்புப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

எப்போதும் அறிவுரை வழங்கத் தயாராக இருக்கும் ஆதித்யா, தனது சீடர்கள்போல இருக்கும் சுவாமிக்கும், மாள்விகாவுக்கும் சொன்ன ஆலோசனை: ‘`மிகவும் கவனமா இருங்கள். உங்களையே நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்பதே. சுவாமி இதற்கு நேரடியாக பொறுப்பு இல்லையென்றாலும், ரீடெயில் பேங்கில் என்ன நடந்தாலும் அதற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். 

‘`சரி, ஆதித்யா. நான் மாள்விகாவை அழைத்துச் சொல்லிவிடுகிறேன். அவள் ஒரு லூசுப்பெண்’’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு, மாள்விகாவுக்கு போன் செய்தார். மாள்விகா கோபமாகப் பேசினார். ‘‘சுவாமி, மோசடிக்காரர்களுக்கு எப்படி நம் வாடிக்கையாளர்களின் டேட்டாபேஸ் கிடைத்தது?”

‘`மாள்விகா, அதிக அளவில் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யும் போதும், விற்பனையாளர்களிடம் டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் போதும், நேர்மையற்ற ஒருவர் அந்த டேட்டாவை வெளியே கசிய விட்டிருப்பார். டேட்டாவெல்லாம் குறிப்பிட்ட சர்வரிலிருந்து திருடப் பட்டிருக்கிறது. அவை நமது வாடிக்கையாளர்களுடைய விவரங்கள், குறிப்பாக மொபைல் பில் செலுத்துவதற்காக `ஆட்டோ-டெபிட்’ அறிவுறுத்தல் கொடுத்திருந்த ஒரு தொலைபேசி நிறுவனத்தின்  வாடிக்கையாளர்களே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

‘`டேட்டா ஒன்றும் பறந்து போகாது, சுவாமி! முதல் புகார் வந்தவுடனேயே இதைப் பற்றி உஷாராகி விசாரித்திருக்க வேண்டும். ஏற்கெனவே, நான் எங்கே சென்றாலும் நம்முடைய இணையதளம் மிக மெதுவாக இயங்குவதாகவும், அதனால் பேங்கிங் அனுபவம் மோசமாக இருப்பதாகவும் புகார் சொல்லி வருகிறார்கள்’’ என்றார்.

‘`அதுவேறு பிரச்னை மாள்விகா.” சுவாமிக்கு எரிச்சல் ஏற்பட்டது ஏனென்றால், மாள்விகா முக்கியமான ஃபிஷிங் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என நினைத்தார்.

‘`எப்படியிருந்தாலும், சிங்கப்பூர் ஆபிஸை அழைத்து அவர்களையும் இதுகுறித்து `லூப்’பில் வைத்திருங்கள். அவர்களிடம் நாம் என்ன சொல்லப்போகிறோம் என்பதையும் தயவுசெய்து தயாராக வைத்திருங்கள்’ என்றார்.

 (பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

சி.ஐ.ஐ.யின் புதிய தலைவர் ராகேஷ் மிட்டல்!

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் அகில இந்தியத் தலைவராக பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் பார்தி மிட்டல் தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார். அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் சோபனா காமினேனி, சி.ஐ.ஐ. அமைப்பின் தலைவர் பதவியை வகித்து முடிந்ததைத் தொடர்ந்து ராகேஷ் மிட்டல் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டி ருக்கிறார். ராகேஷ் மிட்டல், பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ், பார்தி ஆக்ஸா ஜெனரல் இன்ஷூரன்ஸ் ஆகிய அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6

கோழிக்கோடு ஐ.ஐ.எம் தலைவரானார் வெள்ளையன்!

கேரளாவின் கோழிக்கோடுவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்லூரியின் (IIM) ஆளுநர்கள் வாரியத்தின் தலைவராகப் பதவியேற்றுள்ளார் முருகப்பா குழுமத்தின் எ.வெள்ளையன். இந்திய அளவிலிருக்கும் மேலாண்மைக் கல்லூரி களில் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்தக் கல்லூரியை, அடுத்த மூன்றாண்டுகளில் டாப் 3 மேலாண்மைக் கல்லூரி யாக மாற்ற வேண்டும் என்பதே என் குறிக்கோள் என்று சொல்லியிருக்கிறார் வெள்ளையன். இத்தனை ஆண்டுகளாக முருகப்பா குழுமத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட வெள்ளையன், இனி இந்த மேலாண்மைக் கல்லூரியின் வளர்ச்சிக் காகவும் பாடுபடட்டும்!