Published:Updated:

ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!
ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட்...சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்டில் பல்லாயிரக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் தினசரி முதலீடு செய்து வருகின்றனர்.  இதுபோல் புதிதாகப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்யவரும் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் டாப் 200 போன்ற ஒரு நல்ல லார்ஜ்கேப் ஃபண்ட் மூலம் முதலீட்டிற்குள் நுழைவது சிறந்ததாகும்.

ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!



ஏனென்றால், லார்ஜ்கேப் திட்டங்கள், நமது பங்குச் சந்தையை (நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸ் குறியீட்டை) ஒட்டியே நகரும். மேலும், இந்த ஃபண்டுகள் நல்ல உயர் தரமான, பெரிய நிறுவனப் பங்குகளிலேயே தங்களது முதலீட்டை வைத்துக்கொள்கின்றன. ஆகவே, ரிஸ்க் குறைவு. மேலும், இதுபோன்ற ஃபண்டுகள் போர்ட் ஃபோலியோவிற்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும்.

ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட் தற்போது ரூ.8,000 கோடிக்கும் மேலான மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அஷ்வணி குமார் மற்றும் ஷைலேஷ் ராஜ் பான் ஆவார்கள். இந்தத் திட்டம் சுமார் 85 சதவிகிதத்தை லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்டு ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது.

ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

இதன் போர்ட்ஃபோலியோவில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், எல் அண்டு டி, ஐ.டி.சி போன்ற பங்குகள் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்திருக்கும் பங்குகளின் சராசரி சந்தை மதிப்பு ரூ.84,000 கோடிக்கும் அதிகமாகும். இந்த ஃபண்டின் பீட்டா சந்தையைவிட சற்று அதிகமாக 1.04 என்ற அளவிலும், ஆல்ஃபா 0.81 என்ற அளவிலும் உள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் இந்த ஃபண்ட் தொடர்ந்து தனது பெஞ்ச் மார்க் குறியீட்டைவிடவும், கேட்டகிரி ஆவரேஜைவிடவும் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளதே இந்த ஃபண்டை நாம் பரிந்துரை செய்வதற்கு முக்கியக் காரணம். இந்த ஃபண்ட் தொடங்கிய போது (08/08/2007) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.3,18,940-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் ஆண்டிற்கு 11.48% ஆகும்.

இந்த ஃபண்ட் லார்ஜ்கேப் பங்கு களில் (டாப் 100 பங்குகள்) 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக வைத்துக்கொள்ளும். எஞ்சியதை அடுத்த 100 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும். இதன் பெஞ்ச்மார்க் குறியீடு பி.எஸ்.இ டாப் 200 ஆகும்.

ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

இந்த ஃபண்ட் கோட்பாட்டின் படி, இதன் துறைசார்ந்த வெயிட்டேஜ், பெஞ்ச்மார்க்கில் இருந்து 6 சதவிகிதத்துக்கு  அதிகமான வித்தியாசத்தில் இருக்கக்கூடாது. வளரும் நிறுவனப் பங்குகளை நியாயமான விலையில் இந்த ஃபண்ட் வாங்குகிறது (GARP – Growth At Reasonable Price).

இது ஒரு லார்ஜ்கேப் ஃபண்ட் என்பதால், முதன்முறை ஈக்விட்டி முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையை ஒட்டிய ரிஸ்க்கை விரும்பு பவர்களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் சூட் ஆகும். அதுபோல், பங்கு சார்ந்த முதலீட்டில் குறைவான ரிஸ்க்கை எடுக்க விரும்பும் சீனியர் சிட்டிஸன்களுக்கும் இந்த ஃபண்ட்  பொருத்தமாக  இருக்கும். பணம் தேவைப்படாமல், நீண்டகால பாண்டுகளில் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்துள்ளோரும் இந்த ஃபண்டை நோக்கலாம்.

ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் தாராளமாக முதலீடு செய்யலாம். சந்தைச் சரிவுகளைப் பயன்படுத்தி மொத்த மாகவும் அல்லது எஸ்.டி.பி முறையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

   யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், முதன்முறை முதலீட் டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும்போது சந்தையை ஒட்டிய ரிஸ்க்கை எடுக்க விரும்பு பவர்கள், ஸ்திரமான பங்கு சார்ந்த போர்ட் ஃபோலியோவை நாடுபவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் கன்ஸர்வேட்டிவாக இருப்பவர்கள்.               

   யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்ளஸ் இல்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்பு பவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு